கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 10 [December 10]....

நிகழ்வுகள்

  • 1684 - ஐசக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ராயல் சபையில் படிக்கப்பட்டது.
  • 1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
  • 1817 - மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
  • 1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்டது.
  • 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
  • 1902 - அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
  • 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
  • 1906 - அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
  • 1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.
  • 1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
  • 1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • 1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.
  • 1984 - தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • 1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
  • 2006 - ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1750 - திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799)
  • 1804 - ஜேகோபி, ஜெர்மானிய கணிதமேதை. (இ. 1851)
  • 1851 - மெல்வில் டியூவி - அமெரிக்கா. நூலக அறிவியலை வளர்த்தவர். (இ. 1931)
  • 1878 - ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)
  • 1891 - நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1970)
  • 1934 - ஹவர்டு மார்டின் டெமின் - அமெரிக்கா. வைரசுகளைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 1975இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். (இ. 1931)

இறப்புகள்

  • 1896 - அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1833)

சிறப்பு நாள்

  • மனித உரிமைகள் நாள்
  • நோபல் பரிசு அளிக்கும் வைபவம்
  • தாய்லாந்து - அரசியலமைப்பு நாள் (1932)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...