கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 23 [December 23]....

நிகழ்வுகள்

  • 1783 - ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
  • 1914 - முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
  • 1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
  • 1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • 1948 - பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
  • 1958 - டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
  • 1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
  • 1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
  • 1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
  • 1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
  • 1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • 2004 - தெற்குப் பெருங்கடலில் உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 2005 - அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது.

பிறப்புக்கள்

  • 1902 - சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (இ. 1987)

இறப்புகள்

  • 1907 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1824)
  • 1972 - அந்திரே தூப்பொலியெவ், சோவியத் விமான வடிவமைப்பாளர் (பி. 1888)
  • 2004 - பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...