சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு’ என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு
வருகிறது. சில்லறைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில்
வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து
சில்லறைவணிகத்தில் ஈடுபட முடியும். இந்நிறுவனங்கள் நம்மூர் கடைகளை விட
மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை. இந்த
சில்லறைவணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழையும்போது தற்போது இந்த
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம்
கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.
சில்லறைவணிகம் (Retail Industry) இரண்டு பிரிவுகளாக உள்ளன. முறையாக லைசன்ஸ் பெற்று, விற்பனை வரி, வருமான வரி போன்றஅனைத்து வகை வரிகளையும் கட்டும் வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டவை (Organized) என்றும் மேற்குறிப்பிட்ட எந்தவகை வரிகளையும் செலுத்தாத வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாதவை (UnOrganized) என்றும் இரண்டு பிரிவுகளாக உள்ளன.
இந்தியாவில் மொத்த சில்லறைவணிகத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் தான் முதல் வகையைச் சார்ந்தவை. எஞ்சிய 97 சதவீதம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட சில்லறைவணிகம் 70 முதல் 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விற்பனை ரீதியில் சில்லறைவணிக நிறுவனங்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகம். இதற்கு நோக்கியா ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் ஒரே ஒரு பிராண்ட் செல்போன் மட்டும் விற்பனை செய்யப்படும். மற்றொன்று ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகம். இதற்கு யுனிவர்செல் ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் பல கம்பெனி பிராண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறைவணிகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகத்தில் 51% முதல் 100% வரையிலும், ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகத்தில் 51% வரையிலும் அன்னிய முதலீட்டை உயர்த்தியிருக்கிறது இந்த சட்டம் திருத்தம்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். அன்னிய முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இடைத்தரகர்களை விலக்கப்படுவதால் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், இதன் காரணமாக வேளாண் உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் இதற்கு ஆதரவாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் சில்லறைவணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் மளிகை பொருள்களை வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணமால் போய், சில்லறை வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் உள்ளூர் வியாபாரிகளுக்கு கிடைக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போய்விடும் அபாய நிலையும் தோன்றியுள்ளது.
இந்தியா பல தரப்பட்ட மக்களை கொண்டதொரு தேசம். பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் நடுத்தர வர்கத்தினராகவும் இருக்கின்றனர். இவர்கள் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்காமல் அன்றைக்குத் தேவையாக மளிகை பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். உதாரணமாக 50 மில்லி நல்லெண்ணையும் 2 ரூபாய்க்கு தேங்காய் சில்லும் 50 பைசாவுக்கு பச்சை மிளகாயும் வாங்குவார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்ற சிறுவணிகர்களால்தான் முடியும். அவசர தேவைக்கு கடனாகவும், மாதத் தவணையில் பொருள்கள் வாங்கும் வசதியும் இல்லாததும்தான்.
‘ரிலையன்ஸ், டாட்டா மற்றும் பிர்லா போன்றநிறுவனங்கள் முன்னமே இந்த துறையில் இருக்கின்றனவே, இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு மக்கள் பயப்படுகிறார்கள்?’ என்றகேள்வி எழும். ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு சில்லறைவணிகம் பிரதானமான தொழில் அல்ல. அவர்கள் நடத்தும் பலவகையான தொழில்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்.
ஆனால் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கும் Walmart,Carefour,Tesco போன்றவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முதன்மையான தொழில் ஆகும். எனவே மிகத் தெளிவாக திட்டமிட்டு களத்தில் இறங்குவார்கள். இதனால் தற்போதைய சிறு வணிகர்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிழைப்புக்காக வேறு தொழில் தேட வேண்டியிருக்கும். தொழிலை விட இயலாதவர்கள் வேறு வழியில்லாமல் நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும்.
சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகள் ஒழிக்கப்பட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வரும் என்று மறுபுறம் அச்சமும் தோன்றியுள்ளது. ஒருவகையில் இந்த அச்சம் நியாயமானதாகக் கூட தோன்றுகிறது. காரணம் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராகத்தான் இருக்கிறது. எனவே, பண்ணை விவசாயம் வந்தால் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
மக்களுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்றகருத்தும் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாக சொல்லப்படுகிறது. மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று ஏற்கனவே அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட்.
வால்மார்ட்
இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறைஅதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றசாம்வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்றபலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்றகடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையைவிட மலிவாகவும் விற்று வந்தது இந்த வால்மார்ட். சாம்வால்டன் இரண்டு வகையான வியாபார நுணுக்கத்தை கையாண்டார். ஓன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பது. மற்றொன்று உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் பொருட்களை கொள்முதல் செய்வது. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட்.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்களில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி அசுர வளர்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் தோன்றிய உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது. 1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பல நாடுகளில் சில்லறைவணிகத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35% வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%. ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது வால்மார்ட். அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்றபல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% முதல் 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன. தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. மாறாக அதே மாதிரி பொருட்கள் வேறு நிறுவனத்திடமிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ பெறப்படும்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் அதிகரிக்க முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. ஆனால் வால்மார்ட் விலை உயர்வுக்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி. போன்று விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து பல லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.
சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்ட்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஏழை நாடுகளின் தொழிலாளர்களை ஒடுக்குவதைப் போன்றே தனது ஊழியர்களையும் ஒடுக்குகிறது வால்மார்ட். எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. ஒருவர் முன்னர் எப்போதாவது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வலை வாய்ப்பு கிடையாது.
‘ஏன் 51 சதவீத முதலீடு? ஏன் இதை 49 சதவீதமாக வைத்திருக்கக் கூடாது? அந்த இரண்டு சதவீதத்தை இந்திய நிறுவனங்களால் கொண்டு வர முடியாதா?’ என்றகேள்வி எழும். இந்த இரண்டு சதவீத வேறுபாட்டில் கட்டுப்பாடு கைமாறும் என்பதுதான் இதில் உள்ள சிதம்பர ரகசியம்.
இக்கட்டான இந்த நிலையில் சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு என்பதை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கலாம் என்பது கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் இத்தகைய நிறுவனங்கள் பெரு நகரங்களில் அதாவது 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதும் ஆறுதலான செய்தியாக உள்ளது. எது எப்படி இருப்பினும் இதன் நன்மை தீமைகள் பற்றி தீர்க்கமாக இப்போது கூறமுடியாது, காலம்தான் பதில் சொல்லும்.