சான்டா க்ளாஸின் நிஜப் பெயர் செயின்ட்
நிக்கோலஸ். பண்டைய கிரேக்கத்தின் பட்டாரா நகர் மைரா என்கிற ஊரில்
பாதிரியாராக இருந்த செயின்ட் நிக்கோலஸ், ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச்
செய்தார். அதிலும் சுட்டிகளுக்கு சிறு சிறு பரிசுகள் நிறையவே கொடுப்பார்.
ஒரு ஏழை விவசாயி, தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் நடத்தப் பணம் இல்லாமல்
துன்பப்பட்டபோது, சாக்ஸின் உள்ளே தங்கக் கட்டிகளை வைத்துவிட்டு,
கிறிஸ்துமஸ் தாத்தா மாயமானார். அதனால், இன்று வரை கிறிஸ்துமஸ் மரத்தில்
சாக்ஸைக் கட்டிவிட்டு பரிசுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வழக்கம் உண்டு.
செயின்ட் நிக்கோலஸை 'சின்டர்கிளாஸ்’ என நெதர்லாந்தில் அழைக்க, அதுவே பின்னர் 'சான்டாகிளாஸ்’ என ஆனது!
செயின்ட் நிக்கோலஸை 'சின்டர்கிளாஸ்’ என நெதர்லாந்தில் அழைக்க, அதுவே பின்னர் 'சான்டாகிளாஸ்’ என ஆனது!