கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 08 [January 08]....

நிகழ்வுகள்

  • 1297 - மொனாக்கோ விடுதலை பெற்றது.
  • 1782 - திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
  • 1806 - கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.
  • 1815 - அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.
  • 1838 - ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
  • 1838 - அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.
  • 1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
  • 1889 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.
  • 1900 - அலாஸ்கா இராணுவ ஆட்சியில் வந்தது.
  • 1902 - நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1906 - நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1908 - நியூ யோர்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
  • 1916 - முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
  • 1926 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
  • 1956 - எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
  • 1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.
  • 1962 - நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1973 - சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
  • 1995 - தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.
  • 1996 - சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2008 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1867 - எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
  • 1891 - வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)
  • 1899 - எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)
  • 1935 - எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)
  • 1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்
  • 1942 - ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்

இறப்புகள்

  • 1324 - மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)
  • 1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)
  • 1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
  • 1997 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)
  • 2002 - அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)
  • 2008 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...