கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எமிலி பால்ச்...

எமிலி பால்ச்... அடிப்படையில் பொருளாதார பேராசிரியை. 1915 ஆம் வருடம் நடந்த உலக பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு போய் வந்திருந்தார். அமேரிக்கா உலகப் போரில் குதிக்கும் என அஞ்சப்பட்ட தருணம் அது. இவர் நிரந்தர அமைதிக்கான சர்வதேச பெண்கள் அமைப்பை உருவாக்கினார். அமேரிக்கா போரில் பங்கு பெறக்கூடாது என வாதிட்டார். தான் வேலை பார்த்த இடத்தை விட்டு நெடுநாள் விடுமுறையில் வெளியேறி போர்களத்தில் அடிபட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்தார்.

அமெரிக்கா திரும்பியபொழுது போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவர் வேலை செய்த கல்லூரி அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டது. இவர் உருவாக்கிய அமைப்பை மீண்டும் கவனிக்க போனார். அது நிதியில்லாமல் இருந்தபொழுது சம்பளமே இல்லாமல் அமைதிக்காக பாடுபட்டார். 1930இல் அமெரிக்காவின் படைகள் ஹைதியில் நிலைகொண்டு இருந்தன. இதை வன்மையாக கண்டித்தார். ஜனாதிபதி ஹூவருக்கு கடிதம் எழுதினார்; போராடினார் - இவர் முயற்சிகளால் அங்கிருந்து அப்படைகள் வெளியேறின.

இவரை வெளியேற்றிய கல்லூரி இவரை பேச அழைத்தது; இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். இரண்டாம் உலகப் போர் அவரை மேலும் துன்பப்படுத்தியது. மக்களுக்கு உதவப்போனார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் சேவைக்காக தன் வாழ்வை அர்பணித்த அவரின் வரலாறு காலங்களை கடந்து வாழும்.

(இன்று - ஜனவரி 8: எமிலி பால்ச் எனும் மறக்கப்பட்ட அமைதிக்காக குரல் கொடுத்த பெண்மணி பிறந்த தினம்.)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...