கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிட்னி ஒபேரா ஹவுஸ்...

 
சிட்னி ஒபரா ஹவுசின் (Sydney Opera House) அருமை பெருமைகளை இன்றைய பதிவில் பார்ப்போம். சிட்னி ஒப்பேரா ஹவுஸ் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. Jorn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது.

ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் இது திகழ்வது மேலதிக சிறப்பு. இங்கு வருவோர் ஒபரா ஹவுஸின் வெளியில் நின்றாவாது புகைப்படம் எடுத்துச் செல்லாமல் போக மாட்டார்கள் . சிட்னி நகரத்தின் மையமாக இது விளங்குகின்றது.

சிட்னி ஒப்பேரா ஹவுஸ் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 2007, ஜூன் 28 ஆம் நாள் இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இது உலகின் மிகவும் புகழ் பெற்ற நிகழ்த்து கலைகளுக்கான அரங்கங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.

2007 ஆம் ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உலகம் தழுவிய வாக்கெடுப்பில் இறுதிக் கட்டத்துக்குத் தெரிவான இருபது அதிசயங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது.

பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான் இக் கட்டிடம் பற்றிக் கூறியபோது, "இக் கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்றார். சிட்னி ஒப்பேரா ஹவுஸ் சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதம் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...