கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.!

 
1961ம் வருடம். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமைக்குரிய ருஷ்ய நாட்டுக்காரரான யூரி காகரின் ஹைதராபாத் வந்திருந்தார்.

அவருடன் பள்ளி மாணவர்களது சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறையப் பேர் காரிகனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு சிறுவன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

ஆனால் பிற்காலத்தில் தானும் விண்வெளிக்குச் செல்லப்போகிறோம் என்பதோ, இதேபோல ஏராளமானவர்கள் தன்னை ஆட்டோகிராஃப் கேட்டு மொய்க்கப்போகிறார்கள் என்றோ அவனுக்கே தெரியாது.

அந்தச் சிறுவன்தான் ராகேஷ் சர்மா, பிற்காலத்தில் விமானப் படையில் சேர்ந்து ஸ்குவாட்ரன் லீடர் ஆகி விண்வெளிக்குச் சென்று திரும்பிய சாதனையாளர்.

1949ல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ராகேஷ் சர்மா. 1984ல் அவர் இந்திய விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் விண்வெளிப் பயணத்துக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.

விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் ராகேஷ் சர்மாதான் என்றபோதிலும் உலகின் 138வது விண்வெளி வீரர் அவர். ருஷ்ய அரசாங்கம் அவருக்கு “ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்” விருதளித்து கௌரவித்தது.

இந்திய அரசு அவருக்கு ‘அசோக் சக்ரா’ விருது வழங்கியது. விமானப் படையிலிருந்து விங் கமாண்டர் ஆக ரிடையர் ஆன ராகேஷ் சர்மா அதன் பிறகு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் நாசிக் பிராந்தியத்தில் சீஃப் டெஸ்ட் பைலட்டாகப் பணியாற்றினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders

16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திரைப்படம் பார்க்க நேரக் கட்டுப்பாடு - தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு Time restriction for minors below 16 y...