கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எலும்பு வலிமைக்கு என்ன செய்யலாம்..?

 
நமது உணவுப் பழக்கவழக்கம் தான் நம் உடம்பில் உள்ள எலும்புகள் உறுதியாவதற்கும், உடைவதற்கும் காரணமாகிறது. சரியான ஊட்ட உணவு எலும்புகளுக்கு கிடைக்காவிட்டால் அதுவே எலும்புகள் வலுவிழந்துபோகக் காரணமாகி விடுகிறது.

உணவு உட்கொள்ளாமல் புறக்கணித்தல், குறைந்த கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், கால்சியம்அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விலக்குதல், அதிக கலோரி உள்ள உணவுகளைஉட்கொண்டு ஊட்டச்சத்து உணவுகளை தவிர்த்தல் ஆகிய காரணங்கள் நாளடைவில் எலும்புகளுக்கு கேடுவிளைவிக்கும் வேலையை செம்மையாக செய்துவிடுகின்றன.

இன்றைய அவசர உலகில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். அதற்கெல்லாம் ஏது நேரம் என்று பலரும்பெருமையுடன் சொல்லிக் கொள்வதும் உண்டு. காலை உணவு அத்தியாவசியமானது. எலும்புகளுக்குத்தேவையான ஊட்டச்சத்து மிக்க காலை உணவை கட்டாயம் உட்கொண்டாக வேண்டும். குறிப்பாகவயதானவர்கள் உட்கொள்ளும் உணவு குறைவாக இருப்பதால் எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும்கணிசமாக குறைந்து அவர்கள் மேலும் பலவீனமாகி விடுகிறார்கள்.

டீன்ஏஜ் எனப்படும் பருவ வயதில் தான் எலும்புகள் வேகமாக வளர்கின்றன. எனவே எலும்புகள் வளர்ச்சிக்குத்தேவையான கால்சியம் சத்துக்களை டீன்ஏஜ் பருவத்தில் பெண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். பருவவயதில் எடுத்துக்கொள்ளும் கால்சியம் சத்துக்களே பிற்காலத்தில் எலும்புகளுக்குத் தேவையான சத்துக்களை ஈடு செய்யும். வைட்டமின் டி குறைபாடால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் வயதானவர்களை எச்சரிக்க வேண்டும்.

வைட்டமின் டி குறைபாடு இருப்பின் ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு நோய் தாக்கும் அபாயம் உண்டு. இந்தநோய்க்கு ஆளாவோர் வலி தாங்காமல் துடித்துப் போவார்கள். இந்த நோயை உயிர்ச் சத்துக்குறை நோய் என்றும்அழைக்கிறார்கள். கறுத்த தோல் கொண்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்குத்தேவையான சூரிய ஒளி கிடைக்காததால் ரிக்கெட்ஸ் நோய் அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் எலும்பு பலவீனத்தை பெற்று இருக்கிறார்கள். அதாவது எலும்பில் வலு இல்லாமை. பெரும்பாலான குழந்தைகள் ரிக்கெட்ஸ் எனப்படும் (கால் கைகள் வளைந்த நிலைமை) நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இந்நிலையைப் (Osteomalacia) பெற்றிருக்கிறார்கள். இந்நோய்க்கு காரணம் விட்டமின் D பற்றாக்குறைதான்.

இந்த ரிக்கெட்ஸ் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறையால் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவது பெரிதும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் எலும்பு பலவீனம், தசை பலவீனம், கை, கால்கள் வளைந்த தோற்றம் ஆகிய பாதிப்பகள் வரும்.

விட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக் கொண்டாலே இந்த பாதிப்புகளை தவிர்த்து விடலாம். பாலில் நிறைய விட்டமின் டி உள்ளது. மீன் மற்றும் பழச்சாறுகளில் உள்ளது. இது போக இயற்கையே நமக்கு பெருமளவில் போதுமான அளவு விட்டமின் டி தருகிறது. எப்படி? சூரிய ஒளி மூலம்தான். ஆம் சூரிய ஒளியில் நமது உடலுக்குத் தேவையான விட்டமீன் டி நிறைந்துள்ளது.

தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும். நமக்கு தேவையான அளவு விட்டமின் D கிடைத்து விடும். ஆனால் நிறைய பேருக்கு சூரிய ஒளியில் நிற்பதோ அல்லது அலைவதோ பிடிப்பதில்லை. சங்கடமாக உணர்கிறார்கள். காரணம் எரிச்சல், தோல் பாதிப்பு, தோல் நிறம் மாறுதல் ஆகியவற்றால் பாதிப்பு வருமோ என்ற பயம்தான். புற ஊதாக் கதிர்களினால் பாதிப்பு வரலாம் என்ற அச்சம்தான்.

இந்த தொந்தரவு எல்லாம் இல்லாமல் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யைப் பெற இயல வழி இருக்கிறா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம். எளிய வழி ஒன்று இருக்கிறது. என்ன வழி?
உங்கள் உடல், முகம், தோல் ஆகியவற்றை முழுவதுமாக சூரிய ஒளியில் காட்ட அவசியமில்லை. உங்கள் உள்ளங்கையை 15 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் காட்டுங்கள். அது போதும். உடலுக்கு தேவையான விட்டமின் டி உற்பத்தி செய்யப்பட்டு விடும்.

சொல்லப் போனால் உடல் முழுவதையும் காட்டிப் பெற்றுக் கொள்ளும் சூரிய ஒளியை விட, உள்ளங்கையை மட்டும் காட்டிப் பெற்றுக் கொள்ளும் சூரிய ஒளியே அதிகத் திறனுடையதாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த டெக்னிக் அற்புதமானதாகும். தினமும் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் உங்கள் உள்ளங்கையை சூரிய ஒளியில் காட்டி போதுமான அளவில் விட்டமின் D-யைப் பெற்று ரிக்கெட்ஸ் முதலிய எலும்பு பலவீனங்களை வென்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

175 Schools Name List, Number of Students & Number of Computers where Upgraded Hi-Tech Labs will be set up as per G.O.(Ms) No: 271, Dated : 20-12-2024

    நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல், மாணவர் எண்ணிக்கை & கணினிகளின் எண்ணிக்க...