கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குடியரசு தினம்...

நாடு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு 63 ஆண்டுகள் நிறைவுற்றது.

கடந்த 1929 லாகூர் மாநாட்டில் பூரண சுயாட்சி என்பதை நேரு முழக்கமாக வைத்து ஜனவரி 26-ஐ ஆண்டுதோறும் சுதந்திர நாளாக தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வந்தனர். மவுண்ட்பேட்டன்தான் பர்மாவில் ஜப்பானியர்களை சரணடைந்த நாளை இந்திய விடுதலை நாளாக ஆக்க, இந்த நாள் குடியரசு தினம் ஆனது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் எண்ணற்ற குறைகள் இருப்பதாக இன்றைக்கு பலபேர் சொல்லலாம். எனினும் அதன் ஆரம்பகால வரலாற்றை கவனிக்கவும் வேண்டும். எல்லாரையும் இணைத்துக்கொண்டே அது இயற்றப்பட்டது. காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள், அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள்.

பல்வேறு விவாதங்களுக்கு பிறகு, மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது. மதவாதத்தால் உடைந்து போயிருந்த நாட்டை மதசார்பற்ற நாடாக நேரு மற்றும் அம்பேத்கர் உறுதியாக நின்று ஆக்கினார்; தான் மதசார்பற்ற நாட்டை உருவாக்குவேன் என சொன்ன ஜின்னா அதை செய்யவே இல்லை என்பதை கவனிக்க வேண்டும். பழங்குடியின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது; அதை நிரந்தரமானது என அவர்கள் அறிவிக்கவில்லை. காந்தியின் கிராம ராஜ்யமும் கைவிடப்பட்டது அது கிராமங்களில் இருக்கும் சாதீய அமைப்பை வளர்த்தெடுத்து விடும் என பயந்தார்கள்.

இவ்வளவும் நடந்த பின் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கிற பொழுது இந்த நாடு பெரும்பாலான சமயங்களில் ஜனநாயகத்தை கைவிடாமலே இருந்து இருக்கிறது என்பதும், சட்டத்தின் ஆட்சி பல சமயங்களில் நிலைநாட்ட பட்டிருப்பதையும் காண வேண்டிருக்கிறது. பிரதமரையே பதவியை விட்டு விலக சொன்ன காட்சியும், முதல்வரையே அவ்வாறு சொன்ன காட்சிகளையும் நீதிமன்றம் செய்துள்ளது என்பதை காண வேண்டும்.

ஜுடிசியல் ஆக்டிவிசம் எனும் தானே முன்வந்து நீதிமன்றம் எடுத்த பல முன்னெடுப்புகள் அரசியலமைப்பு சட்டத்தின் காவலனின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்கிறது. பொறுமையாக கிடைக்கும் நீதி எல்லாருக்கும் எட்டாத நீதி, அதன் குறுக்கு வழிகள் இவற்றையெல்லாம் படிப்படியாக ஒவ்வொரு மனிதனும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் சட்டத்தின் அடிப்படை சாராம்சத்தை சமரசத்துக்கு உள்ளாக்கி கொள்ளாமல் சரிப்படுத்த வேண்டிய காலம் இது.

கனடா போலவோ, ஆஸ்திரேலியா போலவே விக்டோரியா மகாராணி வாழ்க என கோஷம் போடாமல் நமக்கான அரசியல் சட்டத்தை வார்த்தெடுத்து கொண்ட உன்னத தருணம் இந்நாள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“Nature Camps” for Government School Students at Sathyamangalam Tiger Reserve – Ordinance G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 Issued

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “இயற்கை முகாம்கள்” - அரசாணை G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 வெளியீடு Envir...