கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 03 [February 03]....

நிகழ்வுகள்

  • 301 - சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான்.
  • 1377 - இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
  • 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
  • 1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
  • 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
  • 1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றினர்.
  • 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
  • 1916 - கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது.
  • 1919 - சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.
  • 1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
  • 1931 - நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
  • 1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
  • 1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.
  • 1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
  • 1989 - பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார்.
  • 2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1898 - அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)
  • 1948 - கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி

இறப்புகள்

  • 1915 - யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)
  • 1924 - வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)
  • 1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)
  • 2005 - எர்ணஸ்ட் மாயர், உயிரியலாளர் (பி. 1904)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...