கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 08 [February 08]....

நிகழ்வுகள்

  • 1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.
  • 1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.
  • 1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
  • 1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.
  • 1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
  • 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
  • 1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.
  • 1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
  • 1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

பிறப்புகள்

  • 1700 - டானியல் பேர்னோலி, கணிதவியலாளர் (இ. 1782)
  • 1828 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1905)
  • 1834 - திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)
  • 1897 - ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
  • 1963 - மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர்

இறப்புகள்

  • 1804 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)
  • 1975 - ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)

சிறப்பு நாள்

  • பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Method of entering BSNL internet connection phone number in EMIS website

 BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை பள்ளியின் EMIS Login  வாயிலாக உள்ளீடு செய்யும் முறை Method of entering internet conne...