கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 11 [February 11]....

நிகழ்வுகள்

  • கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
  • 55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.
  • 1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
  • 1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
  • 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
  • 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
  • 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
  • 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
  • 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
  • 1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
  • 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
  • 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
  • 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
  • 1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
  • 1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
  • 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
  • 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
  • 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
  • 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
  • 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
  • 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
  • 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
  • 2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

பிறப்புகள்

  • 1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
  • 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
  • 1964 - சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்

இறப்புகள்

  • 1650 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)
  • 1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)
  • 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
  • 1948 - செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)
  • 1973 - ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)
  • 1978 - ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
  • 1991 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)

சிறப்பு நாள்

  • ஜப்பான் - நிறுவன நாள்
  • ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
  • கமரூன் - இளைஞர் நாள்
  • ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
  • பொஸ்னியா - விடுதலை நாள்
  • வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...