கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 14 [February 14]....

நிகழ்வுகள்

  • 1349 - பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
  • 1779 - ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.
  • 1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
  • 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
  • 1879 - சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.
  • 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
  • 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).
  • 1919 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.
  • 1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.
  • 1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
  • 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
  • 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
  • 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
  • 1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
  • 1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
  • 1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
  • 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
  • 1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
  • 2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
  • 2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2005 - பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

  • 1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)
  • 1869 - சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)
  • 1917 - ஹேர்பேர்ட் ஹோப்ட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர்

இறப்புகள்

  • 1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)

சிறப்பு நாள்

  • காதலர் தினம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Ennum Ezhuthum Training - 2024-2025 - Term 3 - Feedback Questions

    எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2024-2025 - மூன்றாம் பருவம் - பின்னூட்ட வினாக்கள் Ennum Ezhuthum Training - 2024-2025 - Term 3 - Feedback Qu...