கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வீரமாமுனிவர்...

 
வீரமாமுனிவர்... கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர். கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர். அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர். தமிழ் மீது தீராக் காதல் கொண்டார் என்பது வரலாறு.

தமிழில் 23 நூல்களை இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார். தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார். அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர்.

தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் சுவடி தேடிய சாமியார் எனப்பெயர் பெற்றார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் - போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே, பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

36 ஆண்டுகள் இடையறாத தமிழ் பணியாற்றிய அவர் இதே தினத்தில் (பிப்ரவரி 4) மறைந்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...