கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 10+2+3 முறையில் படிக்காத நீதிபதியை பணிநீக்கம் செய்ய கோரிய வழக்கு இன்று விசாரணை...

அரசு வகுத்துள்ளபடி, 10+2+3 முறையில் படிக்காமல் சென்னை உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பதிவாளராக பதவி வகிக்கும் மாவட்ட நீதிபதி பூர்ணிமாவை அப்பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை பரங்கிமலையை சேர்ந்த வழக்கறிஞர் பி.சதீஷ்குமார் சார்பில் வழக்கறிஞர் கே.எம்.அசோக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: தமிழக அரசு துறைகளில் உயர் பதவி வகிப்பவர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் 10+2+3 முறையில் 10-ம் வகுப்பு, மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டப் படிப்பை முறையாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அடிப்படை தகுதிகளை வகுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு பதிவாளராக பதவி வகிக்கும் மாவட்ட நீதிபதியான பூர்ணிமா, இந்த விதிமுறைகளை மீறியுள்ளார். இவர் பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.காம். பட்டம் பெற்றுள்ளார்.

ஊட்டியில் ஒரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலை செய்துகொண்டே, மைசூரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து, கல்லூரிக்கே செல்லாமல் தேர்வை மட்டும் எழுதி எல்எல்பி பட்டம் பெற்றுள்ளார். 2010-ல் மாவட்ட நீதிபதியாகவும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் வழக்கறிஞராக பதிவு செய்தபோது தமிழ்நாடு பார் கவுன்சிலும், மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது தமிழக அரசும் இவரது கல்வித் தகுதியை சரியாக ஆராயவில்லை.

பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த அவர் தற்போது உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பதிவாளராக பதவி வகிக்கிறார். தன்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அரசு வகுத்துள்ளபடி, 10+2+3 என்ற முறையில் படிக்காததால், அவர் போதிய அடிப்படை கல்வித் தகுதியை பெறவில்லை. எனவே, அவர் உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பதிவாளராக பதவி வகிக்க முடியாது என்பதால், அவர் அப்பதவியை வகிக்க தடை விதிக்க வேண்டும். மாவட்ட நீதிபதி பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏ.பி.சாஹி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு

  Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு Group 4 Exam Results - List of Candidates...