பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டத்திலுள்ள திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் கல்வி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியகாமா என்ற திட்டம் அரசு சார்பாக தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்றனர். அதில் 34 மாணவர்களுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 6 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அனைவரும் 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா பரவியதையடுத்து வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.