கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருமடங்கு அபராதம்...

 நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும்.வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாதபட்சத்தில், விதிக்கப்படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இருப்பினும், அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.உங்கள் நிகர மொத்த வருமானம், குறிப்பிட்ட நிதியாண்டில், 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அபராதமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே விதிக்கப்படும்.வழக்கமாக, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவற்கு, தனிநபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதியாகும்.ஒருவேளை இதற்குள் தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டால், அதே ஆண்டில், டிசம்பர், 31ம் தேதிக்குள், தாமத மாக தாக்கல் செய்யலாம்.

ஆனால், தாமதக் கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை, டிசம்பர், 31ம் தேதிக்குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்ன ராக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தாமதக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.இம்முறை தாக்கல் செய்வதற்கான கெடு, டிசம்பர், 31வரை நீட்டிக்கப்பட்டதால், வழக்கமாக விதிக்கப்படும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.ஆனால், ஜனவரி, 1ம் தேதி முதல், மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச் சட்டத்தில், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.தாமதக் கட்டணம் குறித்த, வருமான வரி சட்டத்தின், 234எப் பிரிவில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.அதன் படி, 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த பிரிவில் மாற்றம் செய்யப்படாததால்,நேரடியாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...