கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 02.01.2021(சனி)...

 


🌹தொடக்கத்தில் தெரிந்துகொள்ள முடியாதவை அனைத்தும் பழக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் யார் யார் 

எப்படிப்பட்டவர்கள் என்று.!

🌹🌹அமைதியற்ற கடலே சிறந்த மாலுமியை உருவாக்கும்.

மேடு பள்ளம் நிறைந்த சாலையே சிறந்த ஓட்டுனரை உருவாக்கும்.

இன்பம் துன்பம் நிறைந்த வாழ்க்கையே சிறந்த மனிதரை உருவாக்கும்.!!

🌹🌹🌹இந்த உலகத்தில் நமக்கு யார் இருக்கிறார்கள் என்று

யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                                                                              

⛑⛑NMMS - 2021 தேர்வுக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

⛑⛑ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. 

⛑⛑புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உண்மை சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

⛑⛑7.5% இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மீதம் 12 இடங்கள் காலியாக உள்ளதால் 2ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்ப ஏற்பாடு.

- சுகாதாரத்துறை                                                             

⛑⛑தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு: மாற்றம் இருந்தால் ஆட்சேபிக்கலாம்

⛑⛑கணினி அறிவியல் ஆசிரியர் பணி 742 பேருக்கு 2 நாள் கவுன்சிலிங்

⛑⛑ஜனவரி 20 வாக்காளர் பட்டியல் வெளியீடு

⛑⛑பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.

⛑⛑G.O 597-PUBLIC SERVICE-

01-01-2021 முதல் வாரத்திற்கு 5நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் வேலை நாள்களாக செயல்படும்.

⛑⛑அசாம் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 

பெரும்பாலான பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட வருகை தரவில்லை.

⛑⛑நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி?-பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

⛑⛑EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம்  பதிவேற்றுவதற்கான வழிமுறைகள் வெளியீடு 

⛑⛑57 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு - அரசாணை வெளியீடு.

⛑⛑ஓய்வு பெறும் திட்டம் இப்போது இல்லை, இன்னும் 5 ஆண்டுகள் விளையாடுவேன்.

45 வயதிற்கு முன்னர் ஓய்வு பெற வாய்ப்பு இல்லை.அடுத்து வரும் இரண்டு டி20 உலகக் கோப்பைகளில் பங்கு பெறுவேன் என நம்புகிறேன்.

- மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்.

⛑⛑அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.

⛑⛑முன் எப்போதும் இல்லாத அளவில் அதிக வசூல் !

டிசம்பர் மாத GST வருவாய் (2020) விவரம்:

மாநில GST வருவாய் ₹27,804 கோடி.

மத்திய GST வருவாய் ₹21,365 கோடி.

ஒருங்கிணைந்த GST வருவாய் ₹57,426 கோடி.

செஸ் ₹8,579 கோடி.

மொத்தம் (SGST + CGST + IGST + Cess) = ₹1,15,174 கோடி.

⛑⛑நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவரை புண்படுத்தி மீம்ஸ் போடுவதை கேலி செய்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

⛑⛑6ஆம் தேதி இதயங்களை இணைப்போம் என்ற கருத்தரங்கிற்கு ஐயுஎம்எல், மமக, எஸ்டிபிஐ, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக 

ஒவைசிக்கு விடுக்கப்பட்ட அழைப்பால் ஐயுஎம்எல், மமக புறக்கணிக்க திட்டம்

ஸ்டாலினை சந்தித்து பேசவும் முடிவு

⛑⛑ஜனவரி 8 முதல் மீண்டும் பிரிட்டனுக்கு விமான சேவை சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

⛑⛑கோவிஷீல்ட் தடுப்பூசி 70% வெற்றிகரமாக பயன்தரத் தக்கது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. சீரம் நிறுவனத்திடம் தற்போது 75 மில்லியன் டோஸ் அளவுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து இருப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

⛑⛑ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிலிருந்து  காயம் காரணமாக உமேஷ் யாதவ் வெளியேறியதையடுத்து நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்                                         ⛑⛑உதயசூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின்.

⛑⛑இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை   -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உருமாறிய கொரோனோவால் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் மாறுபடவில்லை.

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது .

⛑⛑ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மெரினா கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்.பி.ஆர்.ராசா, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டடோரும் மரியாதை செலுத்தினர்.

⛑⛑வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்

⛑⛑திமுக மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்தார் என்று தமிழக மக்களிடம் கேளுங்கள் 

தமிழகத்தை மீட்ப்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

⛑⛑மதுரை எய்ம்ஸ் - மார்ச்சுக்குள் கடன் ஒப்பந்தம்:

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடும் ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

ரூ.2 ஆயிரம் கோடியில் 85% நிதித்தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடன் உதவியாக அளிக்கிறது

⛑⛑ஜன.1 முதல் 200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி

உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில் உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி

தமிழக அரசு

⛑⛑பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணிகளை நியாய விலைக்கடை பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும், வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொங்கல் பரிசு டோக்கன் அதிமுகவினரால் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

⛑⛑இண்டேன் GAS புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற இன்று முதல் புதிய வசதி அறிமுகம்- missed call கொடுத்தால் போதும் ஓரிரு நாளில் சிலிண்டர் வழங்கப்படும்.

⛑⛑ஒன்று பட்டு குணம் அடைந்து 2021ஆம் ஆண்டை கட்டியெழுப்புவோம் என்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், தேசம் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஒரே இரவு காணாமல் போய்விடாது என்று தெரிவித்துள்ளார். எனினும், புத்தாண்டு தொடக்கத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம் என்றும் கூறி உள்ளார். எதிர்வரும் நாட்கள் நல்லவையாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், அதற்கான நம்பிக்கைகள் நிரம்பிய மனதோடு தாம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டில் ஏற்பட்ட வலி மற்றும் இழப்புக்குப் பின்னர் நாம் ஒன்றுபட்டு குணம் அடைந்து 2021 ஆம் ஆண்டை கட்டமைப்போம் என்றும் அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்                                       

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். 

 இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவர்து:- 

 👉பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்:- 

👉1.வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள கார்த்திகேயன் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். 

👉2.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஸ்வர்ணா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். 

👉3.டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 பதவி வகிக்கும் ஆசிஷ் வச்சானி முதன்மைச் செயலராக பதவி உயர்த்தப்பட்டு அதே பதவியில் தொடருகிறார். 

👉4.டான்ஜெட்கோ தலைவர் மற்றும் செயலர் பங்கஜ்குமார் பன்சார் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். 

👉5.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹு முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார். 

👉6.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பயிற்சி) செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர் சஹய் மீனா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். 

👉7.வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள பீலா ராஜேஷ் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார். 

 இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...