கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய செய்திகள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09.07.2023 - இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு...


09.07.2023 - இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு...


🔴 தருமபுரியில் நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நோக்கில் 8 கி.மீ தூரம் நடைபயிற்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொண்டார்.


🔴 டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை; தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக டெல்லி அரசு அறிவிப்பு.


🔴 மே.வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கடும் வன்முறை, 14 பேர் பலி


🔴 உ.பி. - ஷஹாபாத் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்த ₹1.5 லட்சம் பணத்தை பையோடு எடுத்துச் சென்ற குரங்கின் வீடியோ வைரலானது.


🔴 புகாரில் கூறியவாறு மின்மாற்றிகள் கொள்முதலில் எந்தவித முறைகேடும் மின்வாரியத்தில் நடைபெறவில்லை. அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால் முறைகேடுகள் நடந்ததாக புகார்.

கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் மின்சார வாரியம் விளக்கம்.


🔴 ரவுடிகளை அடக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, சென்னையில் ரவுடிகள் இருக்க வாய்ப்பில்லை - பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டியளித்துள்ளார்.


🔴 நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது. இரண்டு படகுகளையும் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அத்துமீறல்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை.


🔴 கடலூர் மாவட்டம் ராசாபேட்டையில் கடலில் இருந்து மீன்கள் திடீரென கரைக்கு வந்தன, மீனவர்கள் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாரி சென்றனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.


🔴 கடலூர் தினத்தந்தி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் நேரடியாக விசாரணை நடத்தினார்.


🔴 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழக அரசு, விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.

சொத்து விவரம், நில உடமை  மற்றும் வாகன விவரங்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.


🔴 மதுரை மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலி பேஸ்ட் விற்க தடை விதித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவு; கடைகளில் எலி பேஸ்ட் விற்பது குறித்து தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம். முன்னதாக எதிர்வினை மருந்துகள் இல்லாததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தடை விதித்துள்ளன.


🔴 கோவை மத்திய சிறைக்குள்  "மேரி பிஸ்கட்" பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கடத்தல். சிறை கைதிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து சப்ளை செய்த இருவர் மீதும், சிறை கைதிகள் இருவர் மீதும்  பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.


🔴 ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி ED விசாரிக்கலாம்  - மத்திய அரசு.


🔴 மத்திய அரசு வேஸ்ட் காட்டன் ஏற்றுமதியை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கழிவு பஞ்சு மில் எனப்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் நூல்கள், விசைத்தறிகளுக்கு அனுப்பப்பட்டு துணியாக உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளால் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி நாளை முதல்வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


🔴 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் உள்ள சாந்தன், இலங்கை அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்காததால் அவரை பார்க்க இலங்கை வர அனுமதி கோரி சாந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். தனது தாயின் முதுமை காலத்தில் அவருடன் தங்கி வாழ அனுமதிக்குமாறு கடிதத்தில் சாந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.


🔴 தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

* சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ்.

* நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ்;

* பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ்;

* வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ்;

* நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ், ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு.


🔴 மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


🔴 தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் முகாமிட்டு இருப்பதால் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு. யானைகள் அப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னரே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


🔴 இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கனமழை.

நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிப்பு.

இமாச்சலில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நெடுஞ்சாலை, பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்பு.


🔴 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.90 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற கரூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து   ₹46 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


🔴 சென்னையில் உள்ள ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு. வேளச்சேரி ஏரியில் இன்று மட்டும் 137 லாரிகள் மூலமாக ஆகாயத்தாமரைகள்  அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


🔴 பாரம்பரியமும், புதிய தொழில்நுட்பமும் ஒன்று சேர புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது; இந்த ரயில் 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்; தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.


🔴 குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாரல் மழைக்கு இடையே மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.


🔴 உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுமுறை வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி இருப்பதை உறுதிப்படுத்தவும். காவலர்களுக்கு மன அழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்த நிலையில் காவல்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.


🔴 கேரள மாநிலம் அட்டப்பாடியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விவசாய பயிர்களை சேதம் செய்த 6 காட்டு யானைகள்,

வனத்துறை, கிராம மக்கள் இணைந்து யானைகளைக் காட்டுக்குள் விரட்டி விட்டனர், மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராதவாறு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு.


🔴 கனடா ஓபன் பேட்மிண்டன் - ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி, ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.


🔴 கலிபோர்னியா மாகாணத்தில் செஸ்னா சி 550 என்ற கார்ப்பரேட் ஜெட் விமானம் விபத்து - 6 பயணிகள் உயிரிழப்பு.


🔴 மோசமான வானிலையால் அமர்நாத் புனித யாத்திரை 3-வது நாளாக தடை... யாத்திரைக்குச் சென்ற 6,000 பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட் விடுதியில் தங்கவைப்பு.


🔴 சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் பலி.


🔴 சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மணிப்பூர் கலவரத்தை நிறுத்தக் கோரி, தமிழ்நாட்டில் வாழும் மணிப்பூர் மக்கள் அமைதி வழி போராட்டம். இந்த போராட்டத்தில் குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் கலந்து கொண்டனர்


🔴 புதுக்கோட்டை மாவட்டம் பூசுத்துரை பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்பவர் போலந்து நாட்டைச் சேர்ந்த அனியா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


🔴 காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சலுகை அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். பிரியாணி வாங்க குவிந்த மக்களால் காட்பாடி – வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தராததால் கடைக்கு சீல் வைக்க  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


🔴 ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால், ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பெயர்ந்து விழுந்தது.


🔴 டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்? எனவும் கேள்வி - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.


🔴 செட்டில்மெண்ட் பத்திரங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.10,000 ஆகவும், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ.40,000 ஆகவும், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ஒரு பத்தாயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு. இந்த கட்டண உயர்வு ஜூலை பத்தாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


🔴 ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தீபக் பிரசாதத்தை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


🔴 பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


🔴 2 வருடத்தில் ஜி பே மூலம் 30 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பம் - சேலத்தில் அதிரடி கைது.


🔴 சென்னை துறைமுக வளாகத்தில் கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் ஹரீஷ் குமார்(24) உயிரிழப்பு.

தங்கள் நிறுவனத்துக்குப் பொருட்களை ஏற்றி வந்த கண்டைனர் லாரிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது; சம்பவம் தொடர்பாகத் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


🔴 கண்ணே கலைமானே' படத்திற்கு 3 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன.


🔴 தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர், 'அணையை கண்டிப்பாக கட்டுவோம்' என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது - கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.


🔴 ஹிமாச்சல பிரதேசத்தில் சம்பா - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், பானிகேட் பகுதியில் சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.


வரலாற்றில் இன்று


🔴 ரிப்பன் பிரபு காலமான நாள் இன்று. இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார். இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார். கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார். உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.

1829 இராஜா ராம்மோகன் ராய்-யுடன்  இணைந்து சதி முறையை ஒழிக்க பாடுபட்டார்

கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. 1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ராய் ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறையை தொடங்கியவர் இவர்தான். இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது. 


🔴 பனகல் அரசர் பிறந்த நாள் இன்று. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராக பதவியேற்றார் பனகல் அரசர். அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில்தான், “மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை’ என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். இதற்கு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து சாதித்தார் பனகல் அரசர்.

இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரே மருத்துத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த நிலை மாறி, அனைத்து சமூகத்தவரும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது. இது மட்டுமல்ல கோயில் சொத்துக்களை ஒருசிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனி துறையை உருவாக்கியதும் இவரே. இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்தார்: வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

தியாகராய நகரை உருவாக்கியவர் இவரே. அவரது நினைவாக உருவாக்கப்பட்டது தான் தி.நகரில் உள்ள பனகல் பூங்கா. அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்  கீழ் இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. மாகாண முதல்வர்களுக்கு குறைந்த அதிகாரம் தான் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலும் பல பல சாதனைகளைப் புரிந்தார் பனகல் அரசர். அவருக்கு இன்று பிறந்த தினம். நன்றியுடன் நினைவு கூர்வோம்.


🔴 இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் பிறந்த தினம் 1930 ஜூலை 9, இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) உள்ள நன்னிலத்தில் 1930 இல் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார் . பாலசந்தர், "எனது எட்டாவது வருடத்தில் இருந்து நான் சினிமா பார்க்கிறேன்" என்று கூறியதோடு, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் படங்களைப் பார்த்த பிறகு சினிமா மீதான தனது ஆரம்பகால ஆர்வம் வளர்ந்ததை நினைவு கூர்ந்தார் . பன்னிரெண்டாவது வயதில் அவர் நாடகம் மற்றும் நாடகத்தின் மீது ஈர்க்கப்பட்டார், இது இறுதியில் அவர் அமெச்சூர் நாடகங்களை நடிப்பு, எழுதுதல் மற்றும் இயக்குவதில் ஆர்வத்தை வளர்க்க உதவியது. அவர் தொடர்ந்து மேடை நாடகங்களில் பங்கேற்பதால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (விலங்கியல்) பட்டப்படிப்பைப் படிக்கும் போதும், நாடகத்தின் மீதான அவரது ஆவேசம் தொடர்ந்தது. 1949 இல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1950 இல், அவர் சென்னைக்கு (இப்போது சென்னை) குடிபெயர்ந்தார் மற்றும் கணக்காளர் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு பயிற்சி எழுத்தராக சேர்ந்தார், இந்த நேரத்தில் அவர் ஒரு அமெச்சூர் நாடக நிறுவனமான "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்" இல் சேர்ந்தார். விரைவில் அவர் தனது சொந்த குழுவை உருவாக்கினார், இந்த நேரத்தில் அவர் மேஜர் சந்திரகாந்துடன் ஒரு அமெச்சூர் நாடக ஆசிரியராக முக்கியத்துவம் பெற்றார்., ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மெட்ராஸில் ஆங்கிலத்தின் நோக்கம் மிகவும் குறைவாக இருந்ததால், அவர் நாடகத்தை தமிழில் மீண்டும் எழுதினார், அது இறுதியில் மக்கள் மத்தியில் "உணர்வு" ஆனது. பாலச்சந்தரின் நடிப்பு குழுவில் மேஜர் சுந்தர்ராஜன் , நாகேஷ் , ஸ்ரீகாந்த் மற்றும் சவுகார் ஜானகி போன்ற தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இருந்தனர் . சுந்தர்ராஜன் 900 க்கும் மேற்பட்ட படங்களில், நாகேஷ் 1,000 க்கும் மேற்பட்ட படங்களில், ஸ்ரீகாந்த் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், மற்றும் சௌகார் ஜானகி 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பாலச்சந்தர் எழுதிய மற்ற நாடகங்கள் சர்வர் சுந்தரம் ( பணியாளர் சுந்தரம் ), நீர்க்குமிழி ( நீர்க்குமிழி ), மெழுகுவர்த்தி (மெழுகுவர்த்தி ), நாணல் ( உயரமான புல் ) மற்றும் நவக்கிரகம் ( ஒன்பது கிரகங்கள் ).  இவரே தயாரித்து இயக்கிய இவை அனைத்தும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

 

இன்றைய செய்திகள் தொகுப்பு... 14.05.2021 (வெள்ளி)...

 


🌹வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை.

கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை.

ஆனாலும் வாழ்கிறோம் ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக.!

🌹🌹எப்போதும் உண்மையை பேசுபவர்களை விட.

அடுத்தவர்கள் நம்பும்படி 

பொய் பேசுபவர்களே இந்த உலகத்தில் வாழத் 

தகுதியானவர்கள்.!!

🌹🌹🌹திடீரெனக்  கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யக்கூடாது.

ஏனெனில் பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் உங்களை விட்டு விலகிவிடும்.!!!

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌄🌄ஆசிரியர் இனக்காவலர், பாவலர், கவிமாமணி, க.மீனாட்சி சுந்தரம், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

🌄🌄ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.: யுபிஎஸ்சி அறிவிப்பு.

🌄🌄கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

🌄🌄புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி.

🌄🌄அரசாணை எண் 2014 - உங்கள் துறையில் முதலமைச்சர் துறை - -துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

🌄🌄2021-22-ம் கல்வியாண்டுக்கான.     இளங்கலை, டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை          பல்கலைக்கழகம் அறிவிப்பு                                                                        

🌄🌄+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து  நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடத்திய ஆலோசனையில் PTA  நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் மற்றும்  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 

🌄🌄தமிழக சட்ட பல்கலையில் பி.எச்.டி., மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

🌄🌄10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்.

🌄🌄பொன்னேரியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதன் விளைவாக,  சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார் 

🌄🌄2020 டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🌄🌄கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டாக்டர்களுக்கு அழைப்பு - மாநகராட்சி அறிவிப்பு.

🌄🌄இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.

தமிழக காவல்துறை எச்சரிக்கை.

அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்ற காவல்துறை வேண்டுகோள்.

🌄🌄ஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: திரு அப்பாவு அவர்களுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு

🌄🌄108 ஆம்புலன்சிற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியதில்லை. காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: இந்தியாவிலேயே சென்னையில் புதிய நடைமுறை

🌄🌄எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் 'கபசுரக் குடிநீர்' - ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை

🌄🌄அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு.

🌄🌄விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளரும் திருமாவளவன் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவருமான முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை காலமானார்.

🌄🌄இன்று முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் 

லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை.

லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

🌄🌄இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது

நடுவண் சுகாதாரத்துறை

🌄🌄குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் துவங்கும் 

ஊரகத் தொழில் துறை மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.

🌄🌄தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது:

குறுகிய காலத்தில் 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி

முதலமைச்சர் ஸ்டாலின்

🌄🌄ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும்  ஆக்சிஜனை தமிழகத்திற்கு முதலில் வழங்க வேண்டும்

தமிழகத்தின் தேவைக்கு போக மீதி உள்ள ஆக்சிஜனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லட்டும்

கனிமொழி எம்பி

🌄🌄கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ₹1 கோடி நிதி மற்றும் 10 லட்சம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

🌄🌄உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை முதலமைச்சர் தனிப்பிரிவில் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனிப்பிரிவில் ஒரு பிரிவு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையில் இணைந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.                                                                                                 

🌄🌄அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

குடிசை மாற்று வாரியம் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால் புனரமைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

🌄🌄ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணிகளுக்கென கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.

🌄🌄ரம்ஜான் திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக ரம்ஜான் கொண்டாட ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

🌄🌄நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

🌄🌄“சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.க.விற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” : 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து.

🌄🌄ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்

கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் கூட்டம் அதிகரிப்பதால் ரெம்டெசிவர் விற்பனை செய்யும் இடம் மாற்றம்.

🌄🌄கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு

6 முதல் 8 வாரங்களாக இருந்த இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு

வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்.

🌄🌄கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சிலேயே காத்திருக்க வைக்க கூடாது.

நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி.

🌄🌄நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவு -

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

🌄🌄படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

🌄🌄தினந்தோறும் 2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது -

அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

🌄🌄கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.

🌄🌄கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழ்நாடு அரசு

2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு.

வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி   பிறந்த நாளன்று வழங்க திட்டம்

(கோதுமை, ரவை, பருப்பு, புளி அடங்கிய தொகுப்பினை     வழங்குகிறது  

தமிழக அரசு)                                                                                       

🌄🌄பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு.

🌄🌄இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் 

- மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை

🌄🌄முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் அரசின்  இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  

🌄🌄ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 5 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதன்கிழமை இரவில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. 

ஸ்டெர்லைட் ஆலையில் நாள் ஒன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்  என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

முதல் மூன்று நாட்கள் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்பின்னர் தினசரி 35 டன் ஆக்சிஜன் முடிவு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

🌄🌄புதிய சாலைகள் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து தலைமைச்செயலாளர் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்.

🌄🌄யார் வெளிநாடு சென்றாலும் தமிழகம் சார்பாக பதிவேடு இருக்க வேண்டியது அவசியம் என விரும்புகிறோம்

அப்போதுதான் அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும்

- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான்

🌄🌄பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு அளிக்கும்  'தளபதி கிச்சன்' எனும் திட்டத்தை கரூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று துவக்கி வைத்தார் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

🌄🌄2 முதல் 18 வயதுடையவர்களிடம் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 2, 3ஆம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்.

🌄🌄திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி நிதி உதவி

🌄🌄கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  தமிழக அமைச்சர்கள்  ராமச்சந்திரன், சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

🌄🌄பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தனது ஒரு மாத ஊதியத்தினை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு வழங்குவார்கள் 

-பாமக நிறுவனர் ராமதாஸ்

🌄🌄கோவையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற  தமிழக அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி வாக்குறுதி.

கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களிடம் மனு அளிப்பு.

🌄🌄ரமலான் பண்டிகையை இல்லங்களிலேயே கொண்டாடுங்கள் 

-இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்.

🌄🌄சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் - சித்த மருத்துவர் வீரபாபு ஆலோசனையில் 300 படுக்கைகளை சித்த மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகளும், 200 சாதாரண படுக்கைகளும் சித்த மருத்துவம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

🌄🌄கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

🌄🌄கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

🌄🌄முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

🌄🌄முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் ரூ.10 லட்சம் அளிப்பு

🌄🌄கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத்தொகைகளையும் விடுவிக்க வேண்டும்.

மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் - முதலமைச்சர்.

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

🌹🌹கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ, மமக, 

கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர்.

🌹👉முழு ஊரடங்கின் தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர்

எனவே இந்த தளர்வுகள் நீட்டிக்கப்படலாமா அல்லது மாறுதல் செய்யலாமா ?

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கேள்வி

🌹👉முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் தற்போது உள்ள முழு ஊரடங்கில் பெரிதாக பலன் இல்லை.

ரயில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்களை தடுக்க வேண்டும்

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

🌹👉கொரோனாவை தடுக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள்  நிறைவேற்றம்

அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்கள் 

1.கொரோனா தடுப்பு பணியில்  முழு ஒத்துழைப்பு!

2.அரசியல் சார்ந்த நிகழ்வுகள் ரத்து!

3.மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு மனதோடு ஈடுபடவோம்!

4.ஆலோசனை குழு!

5.ஊரடங்கு நடைமுறையை மேலும் தீவிரப்படுத்துதல்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.05.2021(செவ்வாய்)...

 


🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.

நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.

அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!

🌹🌹தொந்தரவு செய்யும் அன்பு ஒருபோதும் பொய்யாக இருக்காது.

ஆனால் அதுதான் யாருக்கும் புரிவது இல்லை.!!

🌹🌹🌹வேஷம் போடும் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது.

மதி கெட்ட மனதுக்குத் தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேஷம் என்று.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀 நம் நெஞ்சில் வாழும் பாவலர் ஐயா அவர்களுக்கு எதிர்வரும் 14.05.2021அன்று முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு 

மாவட்ட,மாநகர,நகர,ஒன்றிய,சரக மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தி புகழ் வணக்கம் செலுத்திடுமாறும் சக்திக்கு ஏற்ற வகையினில் நலத்திட்ட உதவிப் பொருள்களை கொரோனா தடுப்பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் இனக்காவலர்,

பாவலர் ஐயா அவர்களின் நோக்கம்- இலட்சியம் நெஞ்சினில் தாங்கிப் பயணிப்போம்!

கொரோனாக் காலத்திய ஊரடங்கு விதிகளை 

கவனத்தில் -கணக்கில் கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  கடைப்பிடிப்போம்!

வாழ்க !

பாவலர் புகழ்!

🌹👉தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு 2021 மே மாதம் ஊதியத்தில் இருந்து  குறைந்தபட்சமாக ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவது என்று முடிவெடுத்து அறிவிக்கிறது-

முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் பொதுச்செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

🎀🎀பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்

👉மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

👉முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை

👉நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

🎀🎀ஜேக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - பத்திரிக்கைச் செய்தி 10.05.2021

🎀🎀G.O.(Ms) No.19 - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.04.2021 (புதன்)...

 


🌹இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுப் பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு.!

🌹🌹நாம் பிறக்கும் போது பனிக்குடம் உடைகிறது.

இறக்கும் போது மண் குடம் உடைகிறது.

எனவே வாழும் போது நம்மால் எந்த மனமும் உடையாமல் பார்த்துக் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀அரசு ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசிடம் கோரிக்கை

🎀🎀சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு  வாட்ஸ்அப் குழுவின் அட்மின் பொறுப்பல்ல உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🎀🎀CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்.

🎀🎀மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.               

🎀🎀கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு - இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு

🎀🎀முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலி – மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

🎀🎀கற்போம் எழுதுவோம் இயக்கம்: ஜூலை வரை நீட்டித்து உத்தரவு

🎀🎀புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..

🎀🎀அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎀🎀பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. 

🎀🎀தமிழகத்தில் அஞ்சல்  நிலையங்கள் இனி மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்  என அறிவிப்பு.

🎀🎀கொரோனா  தடுப்பு பணி - 24 மணி நேர  கட்டுப்பாடு அறை சிறப்பு பணிக்கு சுழற்சி முறையில் 24 ஆசிரியர்களை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

🎀🎀அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

அலுவலக வளாகத்தில் கட்டாயம் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழக அரசு

🎀🎀பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும்:

தமிழக அரசுக்கு ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்

🎀🎀மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு ஊழியர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி அல்லது கொரோனா சோதனை கட்டாயம்: தலைமை தேர்தல் அதிகாரி                                                    

  🎀🎀ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவலாம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.

🎀🎀ஊரடங்கை எப்போது, எவ்வாறு அமல்படுத்த வேண்டும்?- மாநிலங்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிகள் வெளியீடு.                                                        

 🎀🎀சுற்றுச்சூழலை காத்ததற்கு கவுரவம்-விவேக் பெயரில் தபால் தலை: பரிசீலிக்கும் மத்திய அரசு.

🎀🎀10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு.

🎀🎀டெல்லியில் ஆக்சிஜன் சப்ளை முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது

டெல்லி அரசாங்கம் என்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை? இவ்வளவு அசாதாரண சூழல் நிலவுகிறது இதற்காக உடனடியான ஒரு வழிமுறையை கூட உங்களால் உருவாக்க முடியாதா 

டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

🎀🎀கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

விதிகளை மீறினால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் கொரோனா  சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியில் சுற்றும் கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் தனிமை முகாமிற்கு மாற்றப்படுவார் என மாநகராட்சி கூறியுள்ளது.

🎀🎀நாட்டு மக்கள் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய வசதிகளை செய்து தர சொல்லி உத்தரவிட்டது யார்?

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாரும் இத்தகைய வசதிகளை கேட்கவில்லை 

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது குடும்பம் கொரோனா பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் உருவாக்கப்பட்ட விவகாரம்

யாரைக்கேட்டு இந்த உத்தரவை பிறப்பித்தீர்கள் என டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி.

🎀🎀ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்                                                                 

  🎀🎀மே 1 மற்றும் 2ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை

திட்டமிட்டபடி மே 2 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

வாக்கு எண்ணிக்கை மையத்தில்  செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஐகோர்ட்டில் அறிக்கை தருவோம்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

🎀🎀ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.                                                                                   

🎀🎀கால நீட்டிப்பு கோர மாட்டேன்.

விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வேன்.

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் குழுவின் அதிகாரி கலையரசன் தகவல்

🎀🎀இந்தியாவின் மோசமான நிலைமை குறித்து நாங்கள் கவலையுறுகிறோம்

இந்தியா அதன் குறிப்பிட்ட தேவைகளைச் சொன்னால் நாங்கள் உதவ ஆயத்தமாக  இருக்கிறோம்

சீன வெளியுறவுத் துறை அறிவிப்பு

🎀🎀அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்க அமெரிக்க அரசு முடிவு !

60 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு.

🎀🎀இந்தியா எங்களுக்காக இருந்தது, நாங்கள்

அவர்களுக்காக இருப்போம்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என பிரதமர் மோடிக்கு உறுதி அளித்தேன்.

-பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட்

🎀🎀கொரோனாவைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

🎀🎀மே 1 முதல் 50 % பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் உத்தரவு.

🎀🎀55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது

இதய நோய்,  சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும். 

-ஊரக வளர்ச்சி துறை உத்தரவு

🎀🎀நாள் ஒன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது பூட்டான் நாடு 

🎀🎀இந்தியாவின் கொரோனா தொற்று நிலைமை குறித்து தைவான் தீவிர அக்கறை கொண்டுள்ளது.

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

இந்திய நண்பர்களுக்கு தேவையான அவசர உதவிகளை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

- தைவான் வெளியுறவுத்துறை

🎀🎀கிரிக்கெட் வீரர் நடராஜன் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி - நடராஜன்

🎀🎀இன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து அமைச்சர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்.

🎀🎀கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு உதவ ஆஸ்திரேலிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.

500 வென்டிலேட்டர்கள், 10 லட்சம் சர்ஜிக்கல் மாஸ்க்குகள், 5 லட்சம் P2 & N95 மாஸ்க்குகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை வழங்க முடிவு.

🎀🎀மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🎀🎀ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ள 'அவசரமாக தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன், மருந்து (ம) மருத்துவ உபகரணங்கள்' அடங்கிய கப்பல் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வந்து சேரும் - ஐரோப்பிய ஆணையம்

🎀🎀புதுச்சேரி பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்கள் மூடல்.

கொரோனா காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து 28 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் மூடப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

🎀🎀ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ, இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.41 லட்சம் (1 Bitcoin) தருவதாக அறிவித்துள்ளார்.

🎀🎀3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு 

- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம்

🎀🎀இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கும் முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.04.2021 (சனி)...

 


🌹சண்டையின்போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல

வார்த்தைகளை விட்டால் உறவு பிரியும் என்று உணர்ந்தவர்கள்.!

🌹🌹மனநிம்மதி வேண்டுமென்றால்,

சில நேரங்களில் குருடாகவும்,  பல நேரங்களில் செவிடாகவும் இருக்க வேண்டும்.!!

🌹🌹🌹ஏதோ ஒரு உறவின் அன்பான வார்த்தைக்காகவும் ஆறுதலுக்காகவும் தான்  

ஏங்கிக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு மனிதருடைய இதயமும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒ஆன்லைனில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் – சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

🍒🍒மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் (TC) அவசியம் இல்லை - பஞ்சாப் மாநில கல்வித்துறை உத்தரவு

🍒🍒12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

🍒🍒கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனுக்காக அமேசான் கிண்டிலில் ஆடியோ புத்தகங்கள் இலவசம் -  அமேசான் அறிவிப்பு.

🍒🍒01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது - மத்திய அரசு சுற்றறிக்கை.

👉01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது.

👉1-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020

🍒🍒குழந்தைகளின் மனநல பயிற்சி தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை   சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவு 

🍒🍒தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் . வாங்க ஆர்வமில்லாததால் தேங்கிக்கிடக்கின்றன. 

பயன் இல்லாத திட்டம் என கல்வியாளர்கள் வேதனை 

🍒🍒புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-'பி', மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

🍒🍒பள்ளிக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

🍒🍒10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை

🍒🍒தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 

🍒🍒பொதுப்பணிகள் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை - கருவூல அலகு IFHRMS திட்டம்  01.06.2020 முதல் நடைமுறைப்படுத்தியது முதன்மைச் செயலர் / ஆணையர், கருவூவம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் கானொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது e-SR தொடர்பான பணிகளை உடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - தொடர்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🍒🍒10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாதவர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🍒🍒DSE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🍒🍒ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம்

🍒🍒கொரோனா  பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பிளஸ் 2 பொதுத்தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தோவுக்குத் தயாராகும் வகையில் மீண்டும் இணையவழி பயிற்சி வகுப்புகளைத் தொடர கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

🍒🍒அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட  ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 

🍒🍒பிளஸ்2 வினாத்தாள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இருந்ததால் பலத்த பாதுகாப்புடன்  மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு.

🍒🍒கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைககளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். 

-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

🍒🍒தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக நடராஜன் தொடரிலிருந்து விலகியுள்ளார் .

🍒🍒கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் இந்திய மக்களுடன் பிரான்ஸ் துணை நிற்கிறது.

இந்தியாவிற்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

- பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மாக்ரோன்

🍒🍒செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

- பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

🍒🍒மே மாதம் மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🍒🍒கல்யாணம், துக்க காரியங்களில் அதிகம் கூடுவது , மத கூட்டம் நடத்துவது தான் தொற்று அதிகாரிக்க முக்கிய காரணம்.

- ஆணையர் பிரகாஷ்

🍒🍒ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்ற மக்களின் கருத்து அறிக்கையாக தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பு.

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறிக்கையை அரசுக்கு அனுப்பினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்

🍒🍒மாநிலங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க இந்திய இராணுவத்தை ஈடுபட செய்யுங்கள்.

- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை.

🍒🍒பிரதமர்  உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளையும்  ராணுவத்திடம்  ஒப்படைக்க  டெல்லி முதல்வர்  கோரிக்கை

🍒🍒கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

🍒🍒கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வரும் 26ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம் - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

🍒🍒கர்நாடகாவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு நீண்ட வரிசை இருப்பதால் குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கர்நாடக அரசு அனுமதி.

🍒🍒தற்போதய சூழலில் ஆக்சிஜன் தேவை; எனவே ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை 

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து 

🍒🍒தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் 

 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 

🍒🍒மே 2-க்கு பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை - மு.க.ஸ்டாலின்

மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

🍒🍒சென்னையில் பொதுமக்களுக்கு முகக்கவசம், 30 முட்டை, சானிடைசர், சோப் உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🍒🍒தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

🍒🍒பிரபல பாகிஸ்தான் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'Edhi Foundation', இந்திய மக்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு கடிதம்.

மருத்துவ குழுக்களை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

🍒🍒இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

🍒🍒சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாநகராட்சி அறிவிப்பு.

🍒🍒2 அல்லது 3 மாறுபட்ட கொரோனா தொற்று ஒன்றிணைந்து வைரஸின் தோற்றம் மாறுபட்டுள்ளதால் RT-PCR சோதனை முறையை பயன்படுத்தி தொற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

- முதன்மை மருத்துவ ஆலோசகர், ஐரோப்பிய ஒன்றியம் & இந்தியா.

🍒🍒பாதுகாப்பான நிலையில் குப்புற படுத்துக் கொள்ளும் முறை - மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ள இந்த முறையில், சுவாசம் மேம்படுவதோடு, ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும் என தகவல் 

🍒🍒முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையில் இயங்குகிறது சென்னை மெட்ரோ இரயில்

காலை 7 மணி - இரவு 9 மணி வரை விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 1 மணிநேரத்திற்கு ஒருமுறை

மத்திய இரயில் நிலையம் - விமான நிலையம் இடையே கோயம்பேடு வழியாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கம்

🍒🍒கொரோனா தொற்றுக்கு எதிரான சவாலை சந்திக்கும் இந்திய மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் துணை நிற்கும்.

மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியிடம் இது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன்.

- சார்லஸ் மைக்கல், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

🍒🍒மத்திய அரசு பல்வேறு நாடுகளில் இருந்து ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன், கொள்கலன்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வாங்க உள்ளது.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன.

🍒🍒கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பாக இருப்போம், பக்கபலமாக இருப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் குறையும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

🍒🍒மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம். 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி. அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை. மாவட்டந்தோறும் நோய் பரவலுக்கு ஏற்ப பிராணவாயு வசதியுடன் தேவையான மருந்துகள் வழங்கப்படும் 

தமிழக அரசு அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.04.2021 (வியாழன்)...

 


🌹நம்ம மனசுக்கு பிடிச்சவங்களால மட்டுமே தான் நம்மல சந்தோஷமாக பார்த்துக்க முடியும்.

அதே சமயம் அவங்களால மட்டுமே தான் நம்மல காயப்படுத்தவும் முடியும்.!

🌹🌹தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுவது நல்லது.

அதைவிடுத்து புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம் ஆகும்.!!

🌹🌹🌹கண்களில் தென்பட்ட அனைத்துமே இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. 

இதயத்தில் இடம்பெற்ற அனைத்துமே அருகில் இருப்பதில்லை அதுதான் வாழ்க்கை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை.                                                           10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

🌈🌈கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளி: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட பயிற்சி கட்டகம், புத்தகம் தயார்; கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு.

🌈🌈இன்று ஏப்ரல் 22 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை –  ஹரியானா கல்வித்துறை அமைச்சர் தகவல்.

🌈🌈ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல் - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு

🌈🌈1 முதல் 9ம் வகுப்பு வரை பயிற்சி கையேடு, குறிப்பேடுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🌈🌈Bridge Course & Work Book - கல்வித் தொலைக்காட்சி மூலமாக அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு.

🌈🌈Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு...வகுப்பு,பாடம்,நேரம், குறித்த அட்டவணை வெளியீடு.

🌈🌈இந்தியாவில் அதிகரித்த கொரோனா பரவலின் போக்கை நாங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் !

- அமெரிக்க அரசு

🌈🌈தமிழக அரசிற்கு தெரிவிக்காமலே தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 45  மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு மாற்றிக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்து சுகாதாரத்துறையிடம் முறையிடுவோம்.

 -அமைச்சர் விஜயபாஸ்கர்.

🌈🌈ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: 

கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.

🌈🌈10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்  செய்தி நிறுவனத்திற்கு பேட்டி

இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.

-இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை

🌈🌈பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் சுகாவும் இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக இருந்த பயணத்தை ரத்து செய்தார்.

🌈🌈தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது எனவே இடை காலமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல்

🌈🌈சென்னையில் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன 

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன 

- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🌈🌈ஏப்.24 முதல் 30ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து 

 - ஏர் இந்தியா

🌈🌈பல்வேறு மாறுபட்ட கொரோனா தொற்று வகைகளுக்கு எதிராக COVAXIN தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது !

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617 வகை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் பாதுகாப்பை தருகிறது.

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

🌈🌈கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600ரூபாய்க்கும் விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவிப்பு

🌈🌈தகவல் வழங்குவதில் கால தாமதம் கூடாது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் ( RTI ), கீழ் யார் தகவல் கோரினாலும், கால தாமதம் செய்யாமல், உரிய காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவு.

🌈🌈உருமாறிய கொரோனாவை குணப்படுத்தும் திறன் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என்று ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு.

🌈🌈வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை 

-தமிழக தேர்தல் ஆணையர்

🌈🌈அடுத்த 15 நாட்களில் ரஷ்யாவின் 'Sputnik V' தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்.

Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் Dr.ரெட்டி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

🌈🌈நாட்டின் 2வது கொரோனா தொற்றின் அலை, மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு !

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

🌈🌈மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்-க்கு கொரோனா தொற்று உறுதி

🌈🌈பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

🌈🌈டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது

இதற்கான மத்திய அரசுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்

- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

🌈🌈இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஓமன் நாடு தடை.

🌈🌈தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என தகவல். முடிந்தவரை புகார்களை ஆன்லைன் மூலம் அனுப்ப அறிவுறுத்தல்.

🌈🌈தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

🌈🌈நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

🌈🌈கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

🌈🌈அமெரிக்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற உள்ள காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்திய காலநிலை ஆர்வலர் அர்ச்சனாவும் (@SorengArchana) உரையாற்ற உள்ளார் !

🌈🌈எம்.எஸ் தோனி ஐ.பி.எல் வரலாற்றில் சுனில் நரைனுக்கு எதிராக தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

🌈🌈ஆந்திரா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

🌈🌈19 மாநிலங்களுக்கு தேவையான Remdesivir மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுக்கு 58,900 Remdesivir மருந்துகள் ஒதுக்கீடு.

🌈🌈டெல்லி ரதி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் முற்றிலும் தீர்ந்தது. தற்போது, நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம்.

- ரதி மருத்துவமனையின் மார்கெட்டிங் மேலாளர் தகவல்.

🌈🌈ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து நீங்கள் ஆராயவில்லை. 

- டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை சாடல். 

🌈🌈புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

🌈🌈கோவை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அஸ்ரப்,செய்யது சுல்தான்  ஆகியோரை கேரள போலீசார் கோவை கரும்புகடை பகுதியில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து1.80 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகளாக கள்ளநோட்டு்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

🌈🌈திருப்பதியில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலைதான் அனுமரின் பிறப்பிடம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

🌈🌈சென்னையில் வீடுகளுக்கு பரிசோதனை செய்ய வருவோருக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🌈🌈மேற்குவங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த கோரிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே முடித்து விட்டதால் அதில் மாற்றங்களை செய்வது மிகவும் சிரமமான காரியம் என விளக்கம்

🌈🌈வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகள் எண்ணிக்கை குறைப்பு இல்லை;

அதற்கு பதிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க முடிவு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், முகவர்கள் என அனைவருக்கும் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

🌈🌈இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

🌈🌈இரவு நேர ஊரடங்கில் சிக்குவோரிடம் கண்ணியமாக பேசுங்கள்: 

போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை

🌈🌈மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் 

பிரியாங்கா காந்தி

🌈🌈தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது, மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.*

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

🌈🌈மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற 1 கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும்

திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு.

🌈🌈நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 

பிரதமர் மோடி.

🌈🌈நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன்?

தட்டுப்பாடு நிலவும் சூழலில் 93,000 மெட்ரின் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? 

👉கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது .

👉45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🌈🌈கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய செய்திகள் தொகுப்பு... 19.04.2021(திங்கள்)...

 


🌹பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்.

ஆனால் ஒருபோதும் உங்களுடைய மரியாதை,கெளரவம்,நேர்மை இந்த மூன்றையும் தலைகீழ் நின்றாலும் வாங்க முடியாது.!

🌹🌹ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் ஆரம்பத்தில் காட்டும் அதே அன்பை கடைசிவரை கொடுத்தால் அந்தப் பெண் அவனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாள் என்பது நிதர்சமான உண்மை.!!

🌹🌹🌹உண்மை இல்லா இதயத்தில் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட

உண்மையான இதயத்தில் ஒருநொடி வாழ்ந்து விட்டுப் போகலாம்.

மரணம் கூட நம்மிடம் தோற்றுப் போகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

🍒🍒+2 செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - தமிழக அரசு.

🍒🍒அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியா்களைக்கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

🍒🍒JEE - MAIN தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை

🍒🍒புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

🍒🍒வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு ஜூன் 18-ல் நுழைவுத் தேர்வு: மே 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🍒🍒சென்னை உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை

மொத்த காலியிடங்கள் 3557

அலுவலக உதவியாளர் 1911 சுகாதாரப் பணியாளர் 110 தூய்மை பணியாளர் 24 காவலர் 496 இரவுக்காவலர் 185 துப்புரவு பணியாளர் 190

விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021

🍒🍒தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.

மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்

🍒🍒தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல் காந்தி.

கொரோனா சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டங்களால் ஏற்படும் விளைவுகளை இதர அரசியல் தலைவர்களும் உணர வேண்டும் என ராகுல் கோரிக்கை.

🍒🍒டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 143வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

🍒🍒புதுக்கோட்டை :

திருமயம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான வெளிப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி புகார்

🍒🍒வரும் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த JEE Main தேர்வு 

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

🍒🍒மகாராஷ்டிரா பாராமதி பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 4 பேர் கைது

பாராசிட்டமால் மருந்தை நீரில் கரைத்து விற்பனை செய்தது கண்டுபிடிப்பு

🍒🍒ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விவேக் குடும்பத்தினர்

என் கணவர் விவேக்கிற்கு காவல் துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி. ஊடகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.

- விவேக் குடும்பத்தினர்.

🍒🍒மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - டெல்லி உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்று அதிகரிப்பால் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு.

🍒🍒Remdesivir போன்ற அத்தியாவசிய மருந்துகளை பதுக்கி வைப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த உத்திரப் பிரதேச அரசு உத்தரவு.

🍒🍒அரசு மேற்கொண்ட பேச்சுக்களின் காரணமாக ரெம்டிசிவிர் மருந்துகளின் விலை 5,000 ரூபாயிலிருந்து 3,500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவ்யா கூறியுள்ளார்.

🍒🍒மறைந்த நடிகர் விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளதாக அவருடன் 15 படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

🍒🍒கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க திமுகவினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

🍒🍒வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதிக்கு தற்போது விதித்திருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது 

- தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு

🍒🍒ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு 

மேலும் நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிப்பு.

🍒🍒9 குறிப்பிட்ட நிகழ்வுகளைத் தவிர, தொழில்துறை நோக்கங்களுக்காக ஆக்ஸிஜன் வழங்குவதை மத்திய அரசு தடை செய்கிறது.

🍒🍒இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இதய பிரச்சினை காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி

🍒🍒டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

🍒🍒மாநில அரசுகள் சிகிச்சைக்கு பயன்படும் ஆக்ஸிஜன் தேவையை கட்டுக்குள் வைக்க வேண்டும். 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு 

-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.                                       👉இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

👉தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

👉ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.

ஸ்விகி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.

👉தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

👉மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு, தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது.

👉ஐ.டி. பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

👉அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும்.

👉ஊடகங்கள் மற்றும் பத்திரிகை துறையினர் தடங்கல் இன்றி செயல்படலாம்.

👉மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கலாம்

👉மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு

👉கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி

👉சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை

👉அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை

👉கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

👉கல்லூரி &  பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்.

👉மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்

👉அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி

👉தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி

👉ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்

👉திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி

👉நீலகிரி ,  கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் பயணிகள் செல்ல தடை

👉பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை

👉முழு ஊரடங்கு ,  ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.04.2021 (சனி)...

 


🌹நாம் சிரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி சிரிப்பே வரவில்லையென்றாலும் சிரிக்க வேண்டும்.

ஆனால் நாம் அழ வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி அழுகையே வந்தாலும் அழக்கூடாது.!

🌹🌹பாதுகாக்கப்பட வேண்டியது பணத்தை மட்டும் அல்ல.

பாசமான உறவுகளையும் தான்.

இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்.

நிலைப்பதும் கஷ்டம்.!!

🌹🌹🌹மனிதன் இறுதியாக இறப்பதற்கு

இடையில் மனதால் பலமுறை இறந்து விடுகிறான். 

சில நேரம் சில மனிதர்களால்.

சில நேரம் சில மாற்றங்களால்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⚫⚫நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.

மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் 1987 ஆம் ஆண்டு விவேக் அறிமுகம் ஆனார்.

சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் விவேக்.

சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கிய நடிகர் விவேக், மரக்கன்றுகள் நடுவதை(Greenkalam) வலியுறுத்தி வந்தார்.

🌈🌈ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை விட  கோரிக்கை 

🌈🌈'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

🌈🌈தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

🌈🌈வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

🌈🌈கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் முக்கிய விஷயங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் இந்த கல்வியாண்டாவது நடைமுறைக்கு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி

🌈🌈தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

🌈🌈12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை.

செய்முறை தேர்வு இருப்பின், அந்த பிரிவு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்.

-தமிழக பள்ளிக்கல்வி துறை.

🌈🌈திருச்சியில் பிளஸ் 2 முதல் நாள் செய்முறைத் தேர்வில் 317 பேர் பங்கேற்கவில்லை.

🌈🌈கேரளாவில் திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் - தலைமை செயலாளர் அறிவிப்பு.

🌈🌈+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே.

🌈🌈அண்ணா பல்கலை அரியர் தேர்வுகள் ஏப்ரல் 2021 – அட்டவணை வெளியீடு

🌈🌈புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு

🌈🌈பள்ளிக்கல்வி: முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள்-ஆய்வு - தன்பதிவேடுகள் மற்றும்  தொடர்புடைய பிற பதிவேடுகளை பராமரித்தல்- ஆவணங்களையும் பதிவேடுகளையும் பராமரித்தல்- விரிவான அறிவுரைகள்- வழங்குதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புகிறது 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகங்களில் சம்பந்தமில்லாதவர்கள் நுழைகிறார்கள் 

பொன்முடி திமுக

🌈🌈வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சி முகவர்களுக்கு 29 தேதி கொரோனா பரிசோரனை.

சென்னை மாநகராட்சி திட்டம்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்.

இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை படி முடிவு.

🌈🌈வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. 

வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் என திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு.                                                                          

🌈🌈கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

🌈🌈மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது

🌈🌈மீண்டும் 'ஈ.வே.ரா பெரியார் சாலை' என பெயர் மாற்றம்.

👉சென்னையில் சர்ச்சைக்குள்ளான 'கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை' மீண்டும் 'பெரியார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🌈🌈இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

🌈🌈உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

🌈🌈ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்

-ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

🌈🌈தமிழகத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுபிற்பகலில் ஆலோசனை.

🌈🌈கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெப்பம் இல்லாத அடையாள அட்டைகளுடன் இருக்கும் ஓப்பந்த பணியாளர்களால் சந்தேகம். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கார்த்திக்  புகார் மனு.

🌈🌈ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,520-க்கு விற்பனை

🌈🌈வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌈🌈ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைபடம் வெளியாவதற்கு தடை இல்லை.

தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

🌈🌈கொரோனா பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற சுற்றலா தளமான தாஜ்மஹாலை மே 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு.

🌈🌈ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வர ஏதுவாக உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌈🌈ஐந்து மாநில தேர்தல்களில் பணம், பரிசு பொருட்கள்,  மது உள்ளிட்டவைகள் பறிமுதல் 

446 கோடியுடன் முதல் இடத்தை பிடித்தது தமிழ்நாடு. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். 

கடந்த தேர்தலில் 130 கோடி மட்டுமே பறிமுதல்.

🌈🌈கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலை கட்டிடவியல் துறை ஆய்வு செய்யும் எனவும்,

கூடுதல் செலவினங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரரிடம் வசூலிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிக்கை.

🌈🌈கோவை வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு.

15.62 கோடி ரூபாய் வரை நகராட்சி பணத்தை விடுவித்து கையாடல் என புகார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...