கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...


 முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ரேங்க் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒற்றைப் பெண் பட்டதாரிகள், பட்டியலின மாணவர்கள் மற்றும் ரேங்க் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பெண் இரட்டையர்

முதுநிலைப் பட்டப்படிப்பில், ஒற்றைப் பெண் பட்டதாரிகளுக்கு முதுநிலை இந்திரா காந்தி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரட்டையர்களாகப் பிறந்த பெண் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முழுநேரமாக முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


பட்டியலின மாணவர்கள்

தொழில்துறை படிப்புகளில் முதுநிலை அளவில் படித்துவரும் பட்டியலின  மாணவர்களில் 1,000 பேருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் எம்.டெக்,எம்.இ. படிக்கும் பட்டியலின  மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,800, இதர தொழிற்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,500 என 2 முதல் 3 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.


ரேங்க் பெற்ற பட்டதாரிகள்

அதேபோல், பல்கலைக்கழக ரேங்க் வென்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் அல்லது இரண்டாம் ரேங்க் பெற்றவராக இருத்தல் அவசியம். எனினும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


60 சதவீதம் மதிப்பெண்

அதன்படி, உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மொழிப் படிப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.3,100 என 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தொகைகளைப் பெற www.scholarship.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றக் கடைசி நாள் ஜன.20-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டையின் நகல், மாணவரின் புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 (அல்லது அதற்கு இணையான படிப்பு), இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ், நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது, ஒற்றைப் பெண் பட்டதாரி எனில் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பட்டியலின மாணவர்கள் எனில் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...