கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UGC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
UGC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

UGC NET exam results - The National Test Agency has released

 யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை


UGC NET exam results - The National Test Agency has released



UGC NET தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...

 


ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என அறிவிப்பு...


வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய தேதிகள் அறிவிப்பு...



Degree Certificate Genuineness-க்கு இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது - பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு...

 

Degree certificate genuineness -க்கு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு பிறப்பித்துள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023-2024ஆம் கல்வியாண்டில், M.Phil., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது - UGC...

 2023-2024ஆம் கல்வியாண்டில், M.Phil., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது - UGC...


M.Phil., அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை, கடந்த ஆண்டு இதற்கான அரசாணை வெளியீடு


சில பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் M.Philக்கு மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து, UGC மானியக் குழு சுற்றறிக்கை...



UGC - NET டிசம்பர் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் போர்டல் திறப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு (Opening of the online portal for submission of Online Application Form for UGC – NET December 2023 - National Testing Agency Public Notice)...


UGC - NET டிசம்பர் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் போர்டல் திறப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு (Opening of the online portal for submission of Online Application Form for UGC – NET December 2023 - National Testing Agency Public Notice)...


>>> Click Here to Download NTA Public Notice...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் (State-wise list of Fake Universities as on March , 2023) - போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது - யுஜிசி எச்சரிக்கை (Degrees awarded by bogus universities invalid: UGC warns)...

 


>>> இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் (State-wise list of Fake Universities as on March , 2023) - போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது - யுஜிசி எச்சரிக்கை (Degrees awarded by bogus universities invalid: UGC warns)...


State-wise list of Fake Universities as on March , 2023...


Andhra Pradesh

Christ New Testament Deemed University, #32-32-2003, 7th Lane, Kakumanuvarithoto, Guntur, Andhra Pradesh-522002 and another address of Christ New Testament Deemed University, Fit No. 301, Grace Villa Apts., 7/5, Srinagar, Guntur, Andhra Pradesh-522002

Bible Open University of India, H.No. 49-35-26, N.G.O’s Colony, Visakhapatnam, Andhra Pradesh-530016.


Delhi

All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS) State Government University, Office Kh. No. 608-609, 1st Floor, Sant Kripal Singh Public Trust Building, Near BDO Office, Alipur, Delhi-110036

Commercial University Ltd., Daryaganj, Delhi.

United Nations University, Delhi.

Vocational University, Delhi.

ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi - 110 008.

Indian Institute of Science and Engineering, New Delhi.

Viswakarma Open University for Self-Employment, Rozgar Sewasadan, 672, Sanjay Enclave, Opp. GTK Depot, Delhi-110033.

Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), 351-352, Phase-I, Block-A, Vijay Vihar, Rithala, Rohini, Delhi-110085


Karnataka

Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka.


Kerala

St. John’s University, Kishanattam, Kerala.


Maharashtra

Raja Arabic University, Nagpur, Maharashtra.


Puducherry

Sree Bodhi Academy of Higher Education, No. 186, Thilaspet, Vazhuthavoor Road, Puducherry-605009


Uttar Pradesh

Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.

National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.

Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.

Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, Matiyari Chinhat, Faizabad Road, Lucknow, Uttar Pradesh – 227 105


West Bengal

Indian Institute of Alternative Medicine, Kolkatta.

Institute of Alternative Medicine and Research,8-A, Diamond Harbour Road, Builtech inn, 2nd Floor, Thakurpurkur, Kolkatta - 700063






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

யுஜிசி - நெட் (UGC-NET) தேர்வு - விண்ணப்பிக்க கடைசிநாள்: 17.01.2023(UGC-NET Exam - Last Date to Apply: 17.01.2023)...

 


யுஜிசி - நெட் (UGC-NET) தேர்வு தேதி அறிவிப்பு - 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசிநாள்: 17.01.2023


இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்காகவும் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் தேசிய தகுதித் தேர்வு (NET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும்.


2022 டிசம்பர் மாதத்திற்கான தேர்வை 83 பாடங்களுக்குக் கணினி வழி தேர்வாக நடத்தவுள்ளனர். தேர்வுக்கு 2022 டிசம்பர் 29 இல் இருந்து 2023 ஜனவரி 17 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜனவரி 18 வரை அவகாசம் உண்டு. பிப்ரவரியில் முதல் வாரத்தில் தேர்வு நிலையங்கள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் இருந்து மார்ச் 10 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு (21 fake universities in the country – University Grants Commission (UGC) Public Notice reg.: Fake Universities, Dated : 25-08-2022)...



>>> நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு (21 fake universities in the country – University Grants Commission (UGC) Public Notice reg.: Fake Universities, Dated : 25-08-2022)...


நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு


அதிகபட்சமாக டெல்லியில் 8, உ.பி.யில் 4 போலி பல்கலை. இயங்குகின்றன


தமிழ்நாடு இப்பட்டியலில் இல்லை...






இளநிலை பட்ட சேர்க்கை : செயல்முறை கணிதத்தை கணித பாடத்துக்கு இணையாகக் கருத வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்(Undergraduate Admission: Applied Mathematics should be considered as equal to Mathematics subject - UGC instruction to Universities)...

 இளநிலை பட்ட சேர்க்கை : செயல்முறை கணிதத்தை கணித பாடத்துக்கு இணையாகக் கருத வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்(Undergraduate Admission: Applied Mathematics should be considered as equal to Mathematics subject - UGC instruction to Universities)...




இந்தி பிரச்சார சபா(Dhakshina Bharat Hindi Prachar Sabha) வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு...



 இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவை என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பாடங்களை கற்றுத் தரவும்,தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கவும் சென்னையில் உள்ள தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


அதனால், இந்தி பிரச்சார சபாசார்பில் வழங்கப்படும் அனைத்துகல்விசார் சான்றிதழ்களையும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகாரத் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுதொடர்பாக உரியவழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், இந்த உத்தரவை யுஜிசி வெளியிட்டதாக கூறப்படுகிறது.


கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30க்குள் முடிக்க UGC உத்தரவு...



 நாடு முழுவதும் கரோனா பரவலால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்விவரம்: கரோனா வைரஸ் பரவல் சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தும் விவகாரத்தில் கடந்தாண்டு வழங்கப்பட்ட வழிமுறைகளை கல்வி நிறுவனங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். அதேநேரம் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி அல்லது இணையவழியில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.


சிபிஎஸ்இ மற்றும் மாநில தேர்வு வாரியங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


எனவே, இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 1-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு 2022 ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவுபெறும். அதற்கு ஏற்ப கல்வியாண்டு கால அட்டவணையை உயர் கல்வி நிறுவனங்கள் சூழலின் தீவிரம் பொறுத்து வடிவமைத்துக் கொள்ளலாம். கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விலகிவிட்டால் முழுக் கல்விக் கட்டணத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டும்.


கூடுதல் தகவல்களை யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - யுஜிசி அறிவிப்பு...

 உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - UGC அறிவிப்பு...



புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்...

 


புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை குறித்து இணையவழியில் நடைபெறவுள்ள பயிலரங்கத்தில் பங்கேற்கவுள்ள பேராசிரியா்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.



இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

தேசிய அளவில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை (என்ஐஎஸ்பி) மத்திய கல்வி அமைச்சகம் வகுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் இந்தப் புதிய கொள்கையின் அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது இரு கட்ட பயிலரங்குகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் 1,980 பேருக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்களை புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட செய்வதற்கான வழிகாட்டுதல்கள், மாணவ தொழில்முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.




இந்தநிலையில் தற்போது இறுதிக் கட்டப் பயிலரங்கம் இணையவழியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தகுதியுள்ள பேராசிரியா்களின் விவரங்களை  இணையதளத்தில் மே 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியா்களுக்கு ஜூன்-ஜூலை மாதங்களில் பயிலரங்குகள் இணையவழியில் நடைபெறும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கை குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்  இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.


இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: யுஜிசி விதிமுறை...

 இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி இறுதி செய்துள்ளது. எனினும் மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


யுஜிசி (கூட்டுப் பட்டம், இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கல்வி புரிந்துணர்வு) விதிமுறைகள், 2021 வரைவறிக்கையின்படி,


 ''இந்திய உயர் கல்வி நிறுவ்னங்கள் வெளிக்நாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிறுவன அங்கீகாரம், பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எனினும் ஆன்லைன் மற்றும் திறந்தநிலை, தொலைதூர வழிக் கற்றலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.


3.01 தரத்துடன் ’நாக்’ என அழைக்கப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் அங்கீகாரம் (NAAC) பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கலாம். எனினும் பிற கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும்'' என்று வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ''படிப்பை முறையாக முடித்தவுடன் இரட்டைப் பட்டப் படிப்புகளை (Dual Degree) வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் பட்டங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில் கூட்டுப் படிப்பு (Joint Degree) ஒரே சான்றிதழாக வழங்கப்படும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரத்தில், மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

'பசு அறிவியல்' தேர்வு: மாணவர்கள் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு...

 


நாடு முழுவதும் பிப்.25-ம் தேதி நடைபெற உள்ள 'பசு அறிவியல்' தேர்வில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (தேசிய பசு ஆணையம்) செயல்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பசுக்களைப் பாதுகாப்பதற்காக இந்த ஆணையம் கடந்த 2019-ல் அமைக்கப்பட்டது. இதன் சார்பில் கொள்குறி வகைத் தேர்வு வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. இணையதளம் மூலம் நடைபெறும் இத்தேர்வில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.


இந்நிலையில், 'காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்' என்ற பெயரில் நடைபெறும் தேர்வுகளில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இளம் மாணவர்களிடமும், பிற குடிமக்களிடமும் உள்நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து அறியச் செய்யவும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


தேர்வுக்கான பாடத்திட்டம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையதளத்தில் இருக்கும். தேர்வில் பங்கு பெறுவோர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு. வெற்றி பெறும் நபர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம், பொம்மை தயாரிக்க வல்லுநர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு: ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு...

 


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள், பொம்மைகள் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் மதிப்பு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.


​‘டாய் கேத்தான்-2021’

எனவே, பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம்அண்மையில் தொடங்கப்பட்டது. அதன்படி, நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில்கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துகளை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் ‘டாய் கேத்தான்-2021’ என்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.


அதன்படி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்’ நிகழ்ச்சியை வரும் பிப். 27-ம் தேதி முதல் நடத்த உள்ளன. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள்  உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஜன.20-க்குள் விண்ணப்பம்

அதன்படி, விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஜன. 20-ம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ‘டாய் கேத்தான்’ போட்டி குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...


 முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ரேங்க் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒற்றைப் பெண் பட்டதாரிகள், பட்டியலின மாணவர்கள் மற்றும் ரேங்க் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பெண் இரட்டையர்

முதுநிலைப் பட்டப்படிப்பில், ஒற்றைப் பெண் பட்டதாரிகளுக்கு முதுநிலை இந்திரா காந்தி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரட்டையர்களாகப் பிறந்த பெண் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முழுநேரமாக முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


பட்டியலின மாணவர்கள்

தொழில்துறை படிப்புகளில் முதுநிலை அளவில் படித்துவரும் பட்டியலின  மாணவர்களில் 1,000 பேருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் எம்.டெக்,எம்.இ. படிக்கும் பட்டியலின  மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,800, இதர தொழிற்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,500 என 2 முதல் 3 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.


ரேங்க் பெற்ற பட்டதாரிகள்

அதேபோல், பல்கலைக்கழக ரேங்க் வென்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் அல்லது இரண்டாம் ரேங்க் பெற்றவராக இருத்தல் அவசியம். எனினும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


60 சதவீதம் மதிப்பெண்

அதன்படி, உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மொழிப் படிப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.3,100 என 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தொகைகளைப் பெற www.scholarship.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றக் கடைசி நாள் ஜன.20-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டையின் நகல், மாணவரின் புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 (அல்லது அதற்கு இணையான படிப்பு), இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ், நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது, ஒற்றைப் பெண் பட்டதாரி எனில் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பட்டியலின மாணவர்கள் எனில் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...