கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி கல்வி தலைமை பொறுப்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இயக்குநரின் அதிகாரங்களில் அதிரடி மாற்றம்...

 பள்ளி கல்வி இயக்குநர் பணியிடத்தை பள்ளி கல்வி கமிஷனராக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 



பள்ளி கல்வி இயக்குநரின் பொறுப்புகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர்அல்லது முதன்மை செயலர் செயல்படுவர். அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குநர்கள் இயங்குவர். கடும் போட்டிஅவர்களில் பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது.



அரசு தரப்பில் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருந்தாலும், பள்ளி கல்வி இயக்குநரே அதிகாரம் மிக்கவராக இருப்பார். பெரும்பாலான நிர்வாக பணிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநரே முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு அரசின் செயலர் ஒப்புதல் வழங்குவார். அதனால், பள்ளி கல்வி இயக்குநர் பதவிக்கு வர, மற்ற இயக்குநர்களிடம் கடும் போட்டி உண்டு.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், பள்ளி கல்வி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பனின் அனைத்து அதிகாரங்களும், பள்ளி கல்வி கமிஷனர் என்ற பதவிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன. 



பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பில், டி.என்.பி.எஸ்.சி., செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.


சிலர் எதிர்ப்பு


இவர், டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். குரூப் தேர்வு முறைகேடுகளில் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டவர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில், 'டெட்' தேர்வு முறைகேடுகளையும் கண்டுபிடித்தவர்.இவரது நேரடி நிர்வாகத்தின் கீழ், பள்ளி கல்வியின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பணியாற்ற உள்ளனர். 



பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, தேர்வுத்துறை, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும், கமிஷனரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்.இந்த சீர்திருத்தம் ஒரு தரப்பில் வரவேற்பையும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் நிர்வாகத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மாற்றக் கூடாது என ஆசிரியர்கள் சங்கத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 



ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 200 ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதால், அதை மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.




பரிந்துரை கடிதம்


ஆசிரியர்கள் மற்றும்அதிகாரிகள், தங்களின் பணி நியமனம், பதவி உயர்வு, பென்ஷன், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு, பள்ளி கல்வி இயக்குநரை சந்தித்து, பரிந்துரை கடிதம் பெறுவர். இனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால், அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...