கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

1️⃣ முதல் 8️⃣ ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...


பெற்றோர்கள் மத்தியில் கொரோனா குறித்து அச்சம் நிலவுவதால் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை...


மேலும், கொரோனா காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது. - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...



1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை...


தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.


கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: 


1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 


பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 


ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது, பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.


பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. 


கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். 


கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். 


இவ்வாறு அவர் கூறினார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...