கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (08-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 08, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் லாபம் அதிகரிக்கும். அறிமுகம் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : இடர்பாடுகள் குறையும்.


கிருத்திகை : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 08, 2021



உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். மாற்றங்கள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 08, 2021



கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 08, 2021



குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டங்கள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : நுட்பங்களை அறிவீர்கள்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 08, 2021



எதையும் சமாளிக்கும் திறமைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 08, 2021



கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.


அஸ்தம் : இழுபறிகள் அகலும்.


சித்திரை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 08, 2021



பலதரப்பட்ட விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கோபங்களை விடுத்து சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். லட்சியங்களை உருவாக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



சித்திரை : ஆர்வம் உண்டாகும்.


சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.


விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 08, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சிக்கல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : சிந்தனைகள் உண்டாகும்.


அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


கேட்டை : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 08, 2021



ஆடம்பரப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் லாபம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : லாபம் உண்டாகும்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 08, 2021



இலக்குகளை நோக்கியே உங்களது செயல்பாடுகள் அமைந்திருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். அலைச்சல்களால் லாபம் ஏற்படக்கூடிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவோணம் : ஆதாயமான நாள்.


அவிட்டம் : சேமிப்புகள் குறையும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 08, 2021



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணைவருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



அவிட்டம் : மந்தத்தன்மை குறையும்.


சதயம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 08, 2021



தந்தை வழி உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எளிதாக முடிய வேண்டிய காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கருத்துக்கள் கூறுவதில் நிதானம் வேண்டும். சிக்கனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...