கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து வகை பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே நடைபெற வேண்டும் - ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

பள்ளிக்கல்வி அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் கொரோனா வைரஸ் (ஒமிக்ரான்) தொற்று விழிப்புணர்வு , முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை.


மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் கொரோனா வைரஸ் ( ஓமிக்ரான் ) தொற்று விழிப்புணர்வு , முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் . 


1. அரசிடமிருந்து பெறப்பட்ட SOP Instuctions ல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை தவறாது அனைத்து வகை பள்ளிகல் பின்பற்ற வேண்டும்.


2. பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவும் நடைபெறலாம் அல்லது இணையவழி வகுப்புகளும் நடைபெறலாம்.


3. அனைத்து வகை பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே நடைபெற வேண்டும்.


4. மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும் போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும் . உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.


5. அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமிநாசினி / சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும்.


6.பள்ளிவளாகம் மற்றும் தளவாட பொருட்கள், கைப்பிடிகள் , கதவுகள் , ஜன்னல்கள் , போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவேண்டும்.


7. நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படும் நபர்கள் உடனடியாக சுகாதார துறை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தலைமையாசிரியர் / முதல்வர்கள் இவர்களுக்கு வழிக்காட்டுதல் வேண்டும்.


8. நேரத்திலும் , சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


9. கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம் , விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் . நீச்சல் குளங்கள் பள்ளிகளில் இருப்பினும் மூடப்பட வேண்டும்.


10.உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது . நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை ( NCC , NSS ) நடவடிக்கைகள் அனுமதிக்ககூடாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PGTRB Exam Notification 2025 - Total Vacancies : 1996

  PGTRB Exam Notification 2025 Released - Total Vacancies : 1996 Total Vacancy - 1996 Online Application: 10.07.2025 முதல் 12.08.2025 வரை வி...