கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for Teachers - G.O. will release at the end of December - Proceedings of the Commissioner of School Education)...



பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள், பயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2021 அன்று சென்னை , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்,  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள்  


* Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது. இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.


* மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுளது. பணிகளை விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை TRB மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்பட்டால், பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.


>>> ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - முக்கிய அறிவிப்புகள் (Transfer Counselling for Teachers - G.O. will release at the end of December - Proceedings of the Commissioner of School Education)...



>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021 (36 பக்கங்கள்)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...