கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 09, 2022



வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : அனுபவம் ஏற்படும். 


பரணி : கண்ணோட்டம் உண்டாகும். 


கிருத்திகை : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 09, 2022



உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




கிருத்திகை : திருப்திகரமான நாள்.


ரோகிணி : விருப்பம் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 09, 2022



சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.


திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.


புனர்பூசம் : மேன்மையான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூலை 09, 2022



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





சிம்மம்

ஜூலை 09, 2022



குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : இழுபறிகள் மறையும். 


உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 09, 2022



வாக்கு சாதுரியத்தின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.


அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





துலாம்

ஜூலை 09, 2022



உத்தியோகம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். பத்திரம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : விவேகம் வேண்டும். 


சுவாதி : மாற்றம் ஏற்படும்.


விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 09, 2022



நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். தனவரவு தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிக்கல் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 09, 2022



இசை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : வசதிகள் மேம்படும்.


உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 09, 2022



எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். உடற்பயிற்சி தொடர்பான செயல்பாடுகளில் கலந்து கொள்வீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும். 


திருவோணம் : தெளிவு பிறக்கும். 


அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

---------------------------------------





கும்பம்

ஜூலை 09, 2022



மருத்துவம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவி கைகூடும். உணவு சார்ந்த விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : உதவி கிடைக்கும்.

---------------------------------------






மீனம்

ஜூலை 09, 2022



பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வாழ்க்கை துணைவரின் வழியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல்கள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.


ரேவதி : அவப்பெயர் நீங்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Central Bank of India Recruitment 2025

Central Bank of India Recruitment 2025  வேலைவாய்ப்புகள் - Job Notification  ✅ காலி இடங்கள்: 266 Zone Based Officer- JMGS- I Posts ✅ கல்வி தக...