கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு (G.O.Ms.No.46, Dated: 02-08-2022 - Guidelines for implementation of “Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme” in place of Moovalur Ramamirtham Ammaiyar Memorial Marriage Assistance Scheme)...



>>> மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு (G.O.Ms.No.46, Dated: 02-08-2022 - Guidelines for implementation of “Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme” in place of Moovalur Ramamirtham Ammaiyar Memorial Marriage Assistance Scheme)...


மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் - ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு...


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.


ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும்  ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக ஆன்லைனில் மட்டும் செயல்படுத்தப்படும், இந்த திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...