கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
G.O. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க G.O. No. 240 , Dated : 23.10.2026 வெளியீடு

 


ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க அரசாணை எண்.240 , நாள் : 23.10.2026 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந 4-2) துறை


அரசாணை (ப) எண்.240 , நாள் : 23.10.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஐப்பசி 6


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.41, நிதித் (மை.ம.ஆ.பி) துறை, நாள் 13.02.2026.


2. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.14090/சஉதி-1(2)/2025, நாள் 09.06.2026 & 09.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ரூ.20,000/- வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.


2. இதனைத் தொடர்ந்து, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க ஏதுவாக இந்திய நாட்டின் இறப்பு விகிதம் 6.5% என்ற அடிப்படையில் ஆண்டு ஒன்றிற்கு 4,456 பயனாளிகள் என்ற கணக்கீட்டில் நபர் ஒருவருக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.8.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


3. சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது அவர்களது ஈமச்சடங்கிற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20,000/- வழங்குவதற்காக, இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 1500 ஆக கணக்கில் கொண்டு ரூ.3,00,00,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.


4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.


"2235 – சமூக பாதுகாப்பும் நலனும் 60 ஏனைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் 200 ஏனைய திட்டப் பணிகள் மாநில செலவினங்கள் DU சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்களுக்கு இறுதி சடங்கிற்கு நிதியுதவி அளித்தல் 310 பங்குத் தொகைகள் 01 குறிப்பிட்ட நிதிக்கு தொகை கொடுத்தல்"


(IFHRMS DPC 2235 60 200 DU 310 01)


5. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப்பணி" (New Service) குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித்(வ.செ.பொ.-1)துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்ட மன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963 இல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித்(வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2026-2027 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(வ.செ.பொ-1/ச.ந) துறைக்கு அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


6. இவ்வாணை நிதித் துறையின் அ.சா.எண். 14352368/ ச.ந4-2/2026, நாள் 22.10.2026-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண். 2026100718


(ஆளுநரின் ஆணைப்படி)


ம.பல்லவி பல்தேவ்

அரசு செயலாளர்


பெறுநர்.


சமூக நல இயக்குநர், சென்னை-5.


சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர், சென்னை-35.


முதன்மை மாநிலக் கணக்காயர், சென்னை-18.


முதன்மை மாநிலக் கணக்காயர், (தணிக்கை-I/II), சென்னை-18.


சம்மந்தப்பட்ட மாவட்டக் கருவூல அலுவலர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


இருப்பிட தணிக்கை அலுவலர், சென்னை-9.



 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஒய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக.20,000 வழங்க அரசு ஒப்புதல்.


அரசாணையின் முக்கிய அம்சங்கள்


தகுதி: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்.


நிதியுதவி: இறந்த பணியாளரின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவிற்காக  ரூ.20,000.


நிதி ஒதுக்கீடு: 1,500 பயனாளிகள் எனக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.3,00,00,000 (ரூ.3 கோடி) ஒதுக்கீடு செய்ய அனுமதி.


 IFHRMS DPC 2235 60 200 DU 310 01 என்ற கணக்குத் தலைப்பில் செலவினம் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் 23-10-2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 240, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் இயற்கை எய்தினால் அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகையை (Funeral Expenses Fund) வழங்குவதற்கான ஆணை ஆகும்.


இந்த அரசாணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

• முக்கிய நோக்கம்: ஓய்வு பெற்ற சத்துணவு இறக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பங்களின்  சுமையைக் கணிசமாகக் குறைப்பதற்காக இந்த நிதி உதவித் திட்டம் தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

• பின்னணி: முன்னதாக 13.02.2026 அன்று நிதித்துறை வெளியிட்ட அரசாணை எண் 41 மற்றும் சமூக நல இயக்குநரின் பரிந்துரைக் கடிதங்களின் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசுச் செயலாளர் (திருமதி. மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப.) அவர்களின் ஆணைப்படி இந்த அரசாணை (ப) எண் 240 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு

 


அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு


G.O.Ms.No.18 - Cost Free Travel


மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe). புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.2)த் துறை


அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026


பராபவ, ஐப்பசி -10.


திருவள்ளுவர் ஆண்டு, 2057,


படிக்கப்பட்டது:


1. அரசாணை (நிலை) எண்.01, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந-2)த் துறை, நாள் 03.06.2021.


2. அரசாணை (நிலை) எண்.18, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந.2.2)த் துறை, நாள்.16.09.2025.


3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் 5.5.6:13390003/2-3/2026, 1:16.09.2026.


ஆணை:


மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 21 வகையான மாற்றுத்திறன்களில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட (Benchmark Disability) மாற்றுத்திறனாளிகள், உதவியாளர் ஒருவருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் (White Board) அனுமதிக்கப்பட்ட கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டத்தினை, தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும் 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் விரிவுபடுத்திடவும், அதன்படி 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்புத் தன்மை கொண்ட, (Benchmark Disability) மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள். துணையாளர் (Escort) ஒருவருடன் 100% மலைப்பகுதிகள் (Fully Ghat) மற்றும் பகுதி மலைப்பகுதிகளில் (Partially Ghal) இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் பேருந்து வசதி உள்ள பகுதிகளில் (Served Area) 35 கி.மீ. வரையிலும் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளில் (Unserved Area) 40 கி.மீ. வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.


3. இந்நிலையில், 2026-2027-ஆம் நிதி ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, 31.08.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-


"தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்து கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்."


4. மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தனது செயற்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பணி மற்றும் சுய தொழில் புரியவும், மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், தங்கள் இருப்பிடத்திலிருந்து 100 சதவீதம் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் செல்ல பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்படுவதாகவும், மேலும் நகரப் பேருந்துகள் மட்டுமல்லாது இதர பேருந்துகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 கிலோமீட்டர் தூர எல்லைக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி கட்டணமில்லாமல் செல்லச் சலுகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


5. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்போது பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டு வரும் பேருந்து பயணச் சலுகைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர சாதாரண, விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) மற்றும் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் (UDID) பயன்படுத்தி கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் செல்வதற்கும் சில நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.



>>> முழுமையான அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



19 IAS Officers Transfer G.O.Rt.No.3865, Dated-28.10.2026 - IAS (T&P)



மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 19 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு


19 IAS Officers Transfer G.O.Rt.No.3865, Dated-28.10.2026 - IAS (T&P)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கரூர் மாவட்ட ஆட்சியராக திரு. பிரசன்னா ராமசாமி IAS நியமனம்




திருப்பூர் மாவட்ட ஆட்சியராக திரு. முத்துக்குமரன் IAS நியமனம்




தென்காசி மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா IAS நியமனம்



G.O. (1D) No.547 , Dated : 28-10-2026 - Diwaliக்கு அடுத்த நாள் 09-11-2026 அன்று Local Holiday அறிவிப்பு



அரசாணை (1டி) எண்.547 , நாள். 28.10.2026 - தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


G.O. (1D) No.547 , Dated : 28-10-2026 - தீபாவளிக்கு அடுத்த நாள் 09-11-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Government Order (1D) No. 547, Dated 28.10.2026 - Declaration of a local holiday for all government offices, public sector undertakings, schools, colleges, and all educational institutions across Tamil Nadu on Monday, 09.11.2026 (the day following Deepavali)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த நாளான 09.11.2026 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) பணிநாளாகச் செயல்படும்.


  அவசரப் பணிகளுக்காக மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் இயங்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



விடுமுறை தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.


பொது (பல்வகை)த் துறை


அரசாணை (1டி) எண்.547 , நாள். 28.10.2026


பராபவ வருடம், ஐப்பசி-11 திருவள்ளுவர் ஆண்டு-2057


படிக்க:-


1. அரசாணை (நிலை) எண்.154, பொது(பல்வகை)த் துறை, நாள்: 03.09.2009.


2. அரசு கடித எண்.8585/பல்வகை/2013-7. பொது (பல்வகை)த் துறை. நாள்: 21.02.2014.


3. அரசாணை (நிலை) எண்.581. பொது(பல்வகை)த் துறை, நாள் 17.10.2025.


4. பலதரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்.


-

இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.


2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.


3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது, செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)- இன் கீழ் வரவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


(ஆளுநரின் ஆணைப்படி)


எ. சுந்தரவல்லி

அரசு செயலாளர்


பெறுநர்


அனைத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள்/


முதன்மைச் செயலாளர்கள்/ செயலாளர்கள், தலைமைச் செயலகம்.


சென்னை-9


அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்.


அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள்.


முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை-9.


தனி அலுவலர். முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை-9.


இயக்குநர். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9.


நகல்


உதிரி/இருப்பு கோப்பு.


//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது//


பிரிவு அலுவலர்



G.O. (Ms) No.154 , Dated : 30.09.2026 - அங்கன்வாடி மையங்களுக்கு தளவாடங்களை வாங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் - அரசாணை வெளியீடு



 G.O. (Ms) No.154 , Dated : 30.09.2026 - அங்கன்வாடி மையங்களுக்கு தளவாடங்களை வாங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் - அரசாணை வெளியீடு 


அங்கன்வாடி மையங்களுக்கு தளவாடங்களை வாங்குவதற்காக சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம்


      

        தமிழ்நாட்டின் G.O. (Ms) No.154 (நாள்: 30.09.2026) அரசாணை, MLACDS (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி - 2026–27) திட்டத்தின் வழிகாட்டுதல்களில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தத்தைக் குறிக்கிறது.


முக்கிய விவரங்கள்:


• அரசாணை எண்: G.O. (Ms) No.154

• வெளியிடப்பட்ட நாள்: 30.09.2026

• துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural Development and Panchayat Raj Department)


• முக்கிய அம்சம்:

• எம்.எல்.ஏ-க்கள் (MLA) தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அங்கன்வாடி மையங்களுக்கும் (Anganwadi Centers) உள்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் (furniture and equipment) வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கப்ப்ட்டுள்ளது.


• அரசு பள்ளிகள், ஐடிஐ (ITI) நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.


அரசாணை எண் 154 (G.O. Ms. No. 154), நாள்: 30-09-2026  தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (SGS.1) மூலம் வெளியிடப்பட்ட முக்கிய அரசாணையாகும்.


இந்த அரசாணை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் (MLACDS - 2026–27) உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• புதிய நிதி ஒதுக்கீடு அனுமதி: இனி சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளைச் செய்து தர முடியும்.

• பயன்பெறும் நிறுவனங்கள்:

• அரசுப் பள்ளிகள் (Government Schools)

• அங்கன்வாடி மையங்கள் (Anganwadi Centers)

• அரசு கல்லூரிகள் (Colleges)

• அரசு ஐடிஐ (ITI) நிறுவனங்கள்

• அரசு மாணவர் விடுதிகள் (Hostels)

• மேம்பாட்டுப் பணிகள்: மேற்கண்ட அரசு நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் (Equipments) மற்றும் தளவாடப் பொருட்கள் (Furniture / Logistics) வாங்கி வழங்குவதற்கும், அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாணையின் மூலம் அதிகாரப்பூர்வமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது



Schemes - Rural Development and Panchayat Raj Department - Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) for the period from 2026-27 to 2030-31 - Inclusion of the work in the Guidelines - Amendment to the Guidelines - Orders - Issued.

Rural Development and Panchayat Raj (SGS.1) Department

G.O.(Ms) No.154, Dated: 30.09.2026


Read:

G.O.(Ms) No.128, Rural Development and Panchayat Raj

(SGS-1) Department, dated 21.07.2026.

From the Commissioner of Rural Development and Panchayat Raj letter Roc.No.27649/2026/CDS-2.1, dated 29.07.2026.

ORDER:

In the Government Order first read above, detailed guidelines were issued for the implementation of the Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) for the period from 2026-27 to 2030-31 and orders were also issued sanctioning and releasing a sum of Rs.828.36 crore for the implementation of the Scheme during the year 2026 - 27, at the rate of Rs.3.54 crore per constituency for all the Legislative Assembly Constituencies in the State.

2. In the Letter second read above, the Commissioner of Rural Development and Panchayat Raj has sent a proposal to include in SI.No.6(a) under the Positive list of works in the Guidelines issued in the Government order first read above and has requested the Government to issue amendment as mentioned below:-

Existing Provision in the Guidelines

2026-27 Positive list of works

Proposed Amendment

6.Equipment and furniture:

Positive list of works

a. Government schools,

Colleges and Hostels.

6.Equipment and furniture:

a. Government schools, ITIs, Colleges,

Hostels and Anganwadi Centers.

ITIs and

3. The Government have carefully examined the proposal of the Commissioner of Rural Development and Panchayat Raj in detail and have decided to accept the same. Accordingly, the Government hereby amend Si.No.6(a) under the Positive list of works in the Guidelines annexed to the Government order first read above, as follows:-

AMENDMENT

In SI.No.6(a) under the Positive List of Works in the Guidelines annexed to the said Government Order, after the words "Government Schools, ITIs, Colleges,Hostels", the words "and Anganwadi Centers" shall be added.


(BY ORDER OF THE GOVERNOR)

DHARMENDRA PRATAP YADAV

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT




G.O.s, Government Letters & Director’s Proceedings Pertaining to School / Student Safety

 


மாணவர் பாதுகாப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் கடிதங்கள் தொகுப்பு


நண்பர்களே வணக்கம் 🙏


பள்ளி / மாணவர் பாதுகாப்பு சார்ந்த அரசாணைகள் / அரசுக் கடிதங்கள் / இயக்குநர் செயல்முறைகள் தொகுப்பு


Compilation of Government Orders, Official Government Letters, and Director’s Proceedings Pertaining to School / Student Safety


ஆங்காங்கே சில இடங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக மாணவர்கள்/ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் 

என தொடர்ந்து பாதிக்கப்படும் வருத்தமான செய்திகளை பார்க்க முடிகிறது 😞


Referenceக்கு மொத்த தொகுப்பு (134 பக்கம்) பகிரப்பட்டுள்ளது.


Student Safety Aspects GOs & Letters collections


S.No / From / GO/ LETTER No. / DATE / GIST / PAGE


1. S.E.D / GO Ms. No. 270 / 22.10.2012 / SCHOOL STUDENT SAFETY (அன்னையர் குழு) / 2 


2. Co.S.E

R.C No.56630/M/S1/2021

17.12.2021

S.S.A.C (மாணவர் மனசு)

14


3. HM

SSAC-GHSS M.SUBBULAPURAM

2024-2025

SCHOOL Model copy

20


4. S.E.D

பள்ளி நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டல் நெறிமுறைகள் 

2024

S.O.P

24


5. D.S.E

R.C.No 53643/M1/E1/2024

25.06.2025

சாதி,சமூக வேறுபாடுகள் தவிர்க்க -நல்லிணக்கம் - மகிழ் முற்றம்

53


6. D.S.E

R.C. No 018655/M2/E1/2025

02.07.2025

SOP-GIRLS IN SPORTS

63


7. D.P.S

R.C No 6249/F2/2025

25.07.2025

சாதி பாகுபாடற்ற நெறிமுறைகள்

83


8. D.P.S

R.C. No 5458-1/F3/2025

16.12.2025

பள்ளி, மாணவர் பாதுகாப்பு பொது அறிவுரைகள்

92


9. D.S.E

R.C. No 016660/M2/E1/2026

01.05.2026

பள்ளி பாதுகாப்பு கையேடு

104


10. S.E.D

GO Ms No. 148

29.07.2026

பள்ளியில், வெளி நிகழ்வுகளுக்கு தடை

116


11. DSE/DEE

R.C No 050103/M1/E1/2026

11.09.2026

மாணவர் பாதுகாப்பு நலன் - அறிவுரை

118


12. DSE/DEE/DPS

R.C No 050103/M1/E1/2026

15.10.2026

மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள்

128


13. DSE/DEE/DPS

R.C No 033476/N2/E1/2026

21.10.2026

கட்டிடம் உறுதித்தன்மை பாதுகாப்பு அறிவுரைகள்

132


25.10.26



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு - அரசாணை வெளியீடு



ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியீடு


G.O.Ms. No : 83 ,  Dated : 19-10-2026


ரூபாய் மூன்று லட்சத்து 60 ஆயிரம் வரை மானியத்தில் 15 ஹெச்பி திறன் வரை மின் இணைப்பு 


அரசாணை ( நிலை) எண் : 83 ,  நாள் : 19-10-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NHIS 2026 - பொதுவான 15 சிகிச்சைகளின் தொகுப்பு கட்டணம்



  NHIS 2026 - பொதுவான 15 சிகிச்சைகளின் தொகுப்பு கட்டணம்


(C-Grade அடிப்படை / B-Grade 10% அதிகம் / A2-Grade 20% அதிகம் / A1-Grade 30% அதிகம்)


1. *கண்புரை அறுவை (ஒரு கண்)* - ரூ.30,000 / 31,300 / 32,600 / 33,900

2. *ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ் - ஒரு முறை)* - ரூ.1,875 / 2,063 / 2,250 / 2,438

3. *இதய ஸ்டென்ட் (PTCA Single)* - ரூ.1,20,000 / 1,29,000 / 1,38,000 / 1,47,000

4. *முழங்கால் மூட்டு மாற்று* - ரூ.1,30,000 / 1,39,000 / 1,48,000 / 1,57,000

5. *இதய பைபாஸ் (CABG)* - ரூ.2,63,927 / 2,90,320 / 3,16,712 / 3,43,105

6. *கருப்பை அகற்றுதல்* - ரூ.50,000 / 55,000 / 60,000 / 65,000

7. *பித்தப்பை அகற்றுதல்* - ரூ.40,521 / 44,573 / 48,625 / 52,677

8. *குடலிறக்கம்* - ரூ.40,800 / 44,800 / 48,800 / 52,800

9. *சிறுநீரக கல் நீக்கம் (URS)* - ரூ.46,771 / 51,448 / 56,125 / 60,802

10. *புரோஸ்டேட் (TURP)* - ரூ.60,000 / 66,000 / 72,000 / 78,000

11. *குடல் வால் (அப்பெண்டிக்ஸ்)* - ரூ.44,000 / 48,400 / 52,800 / 57,200

12. *முதுகு தண்டுவடம் (LAMINECTOMY)* - ரூ.78,125 / 85,938 / 93,750 / 1,01,563

13. *DJ ஸ்டென்ட் (ஒரு பக்கம்)* - ரூ.10,200 / 11,200 / 12,200 / 13,200

14. *மார்பக அகற்றம்* - ரூ.67,000 / 73,700 / 80,400 / 87,100

15. *பேஸ்மேக்கர் (Double Chamber)* - ரூ.1,41,563 / 1,46,719 / 1,51,876 / 1,57,032


இதில் சிகிச்சை கட்டணம் + உள்வைப்பு பொருள் கட்டணம் இரண்டும் சேர்த்தது.


தகவலுக்காக பகிரப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள விவரங்களை ஒப்பீடு செய்து பாருங்கள். நன்றி



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



 



NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை G.O.Ms.No.122, Dated : 24-06-2026


 புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை (நிலை) எண் : 122, நாள் : 24-06-2026 வெளியீடு..


1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.

2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.

3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




அரசாணையின் முக்கியமான தகவல்கள்


வாழ்க்கைத் துணைவர் மத்திய அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியராகவோ / ஓய்வூதியதாரராகவோ இருந்தாலும், அனைத்து ஊழியர்களுக்கும் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், 2026-இன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும்; இது ஒரு தனித் திட்டமாகும்.


 இத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுத் துறை ஊழியர்களும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களும், இந்த உத்தரவின் இணைப்பு-II-இல் பட்டியலிடப்பட்டுள்ளபடி, புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் 2026-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில், இந்த உத்தரவின் இணைப்பு-I-இல் பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள்/அறுவை சிகிச்சைகளுக்காக, 01-07-2026 முதல் 30-06-2031 வரையிலான ஐந்தாண்டுத் தொகுதியில், தொகுப்பு விகித அடிப்படையிலான பணமில்லா வசதியாக ரூ.7.50 லட்சம் (ஏழு இலட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்) வரையிலான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்;


(அ) ​​இருப்பினும், இந்த உத்தரவின் இணைப்பு IA-வில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு லட்சம் ரூபாய்) வரை இருக்கும்.


(ஆ) இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஐந்து வருடத் தொகுதிக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் ஒட்டுமொத்த வரம்பு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு லட்சம் ரூபாய்) வரை இருக்கலாம்.


 (இ) அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள், அவசரமற்ற சூழ்நிலைகளில் நெட்வொர்க்கில் சேராத மருத்துவமனையில் பெறும் மருத்துவ சிகிச்சையும், திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் ஈடுசெய்யப்படும். இருப்பினும், அத்தகைய நேர்வுகளில் திருப்பிச் செலுத்தப்படும் தொகையின் அளவு, இணைப்பு-IV-இல் பட்டியலிடப்பட்டுள்ள அனுமதிக்கப்படாத/செலுத்தப்படாத செலவினங்களைத் தவிர்த்து, பெறப்பட்ட சிகிச்சை/செயல்முறைக்காக மிகக்குறைந்த தரத்திலான நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இதேபோன்ற சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பொருந்தக்கூடிய தொகுப்பு விகிதத்தில் 60% என வரையறுக்கப்படும்.


(ஈ) இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்தும் வகையில், 07.06.2024 தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (EAP-1) அரசாணை (Ms) எண்.130-இன் படி, புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் 2021-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 1535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களும், இணைப்பு I-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 2992 சிகிச்சைகள் / செயல்முறைகளையும், இணைப்பு IA-இன் (குறிப்பிட்ட நோய்) கீழ் 46 சிகிச்சைகள் / செயல்முறைகளையும் உள்ளடக்குகின்றன. சேர்க்கப்பட வேண்டிய / நீக்கப்பட வேண்டிய மருத்துவமனைகளின் பட்டியலானது, CMCHIS-தமிழ்நாடு திட்டத்திற்காக, தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் (TNHSP) திட்ட இயக்குநரின் கீழ் உள்ள அங்கீகாரக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆணையர் / கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநரால் உத்தரவிடப்படும்.


(இ) ஆண்டு காப்பீட்டுத் தொகை செலுத்துதலானது, தமிழ்நாடு அரசுக்கும் சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஒழுங்குபடுத்தப்படும்;


01-07-2026 முதல் 30-06-2031 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு, சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய ஆண்டு பிரீமியம், ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு) என்ற விகிதத்தில் இருக்கும்;


 குறிப்பிட்ட நோய், அரிதான நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பான அதிக செலவுகளை ஈடுகட்டுவதற்காக, அரசுத் துறைகளின் அனைத்து ஊழியர்களும், மாதாந்திர சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத்துடன் சேர்த்து, மாதத்திற்கு ரூ.15/- தொகையை தனியாக மூலதன நிதிக்கு (காலாவதியாகாதது) பங்களிக்க வேண்டும். இதன் மூலம் மூலதன நிதியின் கீழ் ரூ.15.00 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்படும். ஐந்து வருட காலக்கட்டத்தில், மூலதன நிதியின் கீழ் வழங்கப்படும் உதவியையும் சேர்த்து, ஒரு குடும்பத்திற்கு ரூ.27.00 லட்சம் (இருபத்தேழு லட்சம் ரூபாய்) வரையிலான ஒட்டுமொத்தப் பலன் கிடைக்கும்.


 அரசாங்கத்தால் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட ஆண்டு பிரீமியம், ஜூலை, 2026 மாதம் முதல் மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்வதன் மூலம், ஊழியர்களிடமிருந்து மாதம் ரூ.390/- (முந்நூற்று தொண்ணூறு ரூபாய்) [NHIS-க்கான சந்தா ரூ.375/- + மூலதன நிதிக்கான பங்களிப்பு ரூ.15/-] என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும். ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகைக்கு மேலாக அவ்வப்போது செலுத்த வேண்டிய பிரீமியத்தின் எந்தவொரு உபரித் தொகையையும், அரசு ஊழியர்களின் விஷயத்தில் அரசாங்கமும், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைச் சேர்ந்த ஊழியர்களின் விஷயத்தில் அந்தந்த முதலாளியும் ஏற்க வேண்டும்;


 சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணைவர் 'பணியாளர்' என்ற சொல்லின் கீழ் வந்தாலும், இணைப்பு-I இல் உள்ள நோய்களுக்கு குடும்பத்திற்கான மொத்த உதவித்தொகை ரூ.7.50 லட்சம் (ஏழு இலட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்) ஆகவும், இணைப்பு-IA இல் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு இலட்சம் ரூபாய்) வரையிலும் வரையறுக்கப்படும். ஐந்து வருட தொகுதி காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.12.00 லட்சம் (பன்னிரண்டு இலட்சம் ரூபாய்) வரையிலான ஒட்டுமொத்த உதவித்தொகை வரம்பு.


 பணியாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருந்தால், பணியாளரின் பங்களிப்பு இருவரில் இளையவரிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும்.


(அ) ஒருங்கிணைந்த ஊதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் 

(ஆ) தினக்கூலி 

(இ) ஒப்பந்த அடிப்படையில் 

(ஈ) மறுவேலைவாய்ப்பு 

(உ) தமிழ்நாடு மாநில விதி 10(அ)(1)-இன் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக அடிப்படையில் மற்றும் 

(ஊ) வெளிப்பணியமர்த்தல் ஆகியவற்றின் கீழ் பணியமர்த்தப்பட்ட மனிதவளம் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லை.


சிறப்பு நேர ஊதிய விகிதத்தின் கீழ் வரும் துப்புரவுப் பணியாளர்கள்/ சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி, மதிய உணவுப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற அனைத்து ஊழியர்களும் புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்-2026-இன் கீழ் கொண்டுவரப்படுவார்கள். இருப்பினும், சிறப்பு நேர ஊதிய விகிதத்தின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களில், யாருடைய மொத்த ஊதியம் [அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி]/ ஒருங்கிணைந்த ஊதியம் மாதத்திற்கு ரூ.10,000/-க்கும் குறைவாக உள்ளதோ, அவர்களிடமிருந்து NHIS-2026-க்கான சந்தாத் தொகை கழிக்கப்படாது. மேலும், அத்தகைய ஊழியர்களுக்கான சந்தாத் தொகையை 01.07.2026 முதல் 30.06.2031 வரையிலான காலத்திற்கு அரசாங்கம் ஏற்கும்.


இந்தத் திட்டம், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், மற்றும் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாநில அரசு அமைப்புகள்/நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், தேவையான மாற்றங்களுடன் நீட்டிக்கப்படும். இந்த நிறுவனங்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு, மாநில நிதிநிலை அறிக்கைக்கு நிதிப் பொறுப்பு ஏற்படாத வகையில், முதலாளியின் பங்கு பிரீமியத்தைச் செலுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஊழியர்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் பிரீமியம் செலுத்துவதற்கு உட்பட்டு, அவர்களது முதலாளி நேரடியாக சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படலாம். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடனான ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து காப்பீட்டுக் காப்பீடு நடைமுறைக்கு வரும். மேற்கூறிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் / நிர்வாக இயக்குநர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், 2026-இன் நிர்வாகியாக இருப்பார்கள்.



இந்த NHIS 2026 தொடர்பான மேற்கண்ட கோப்பில் உள்ளடங்கியுள்ள தகவல்கள்


ANNEXURE - A to G.O.Ms. No122, Finance (Health Insurance) Department, Dated:24.06.2026

THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2026 FOR EMPLOYEES OF GOVERNMENT DEPARTMENTS AND THEIR ELIGIBLE FAMILY MEMBERS



G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை ஊதியக் கணக்காக மாற்றுதல் & காப்பீடு சலுகைகள் - அரசாணை வெளியீடு

 


G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு


அரசாணை எண்.113 நிதி (கருவூலம் மற்றும் கணக்குகள் - III), நாள்:14.05.2025


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் பெறும் வங்கிக் சேமிப்பு கணக்கில் இருந்து சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.


அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் முன்னோடி வங்கிகளுடன் போடப்பட்டது.


தற்போது தமிழ்நாடு அரசின் ஊழியர்களின் சம்பளம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


G.O. Ms. No. 113, Dated 14.05.2025

Package for Salary Acount

Package Details

🟢அரசு ஊழியர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ 1 கோடி ரூபாய் இழப்பீடு.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் ஒரு மகளுக்கு 5 லட்சமும் இரண்டு மகள்கள் இருந்தால் தலா ஐந்து லட்சமும் திருமண உதவித்தொகை.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் மகளின் உயர்கல்விக்கு 10 லட்ச ரூபாய் உதவித்தொகை.

🟢பணியின் போது அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு.

🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.

2025-26 FY முதல்

இந்த சலுகைகள் 2025-26  நிதியாண்டு முதல் அமுலுக்கு வரும்.

வங்கிகள் பட்டியல்

1. SBI

2. Indian Bank

3. IOB

4. Axis Bank

5. Union Bank of India

6. Canara Bank

7. Bank of Baroda



 G.O. No. 113 - Finance - Changing Tamilnadu Government Employees Savings Bank Account to Salary Bank Account  - pdf



>>> Click Here to Download 



இந்த அரசாணை (G.O. (MS) No. 113, நாள்: 14-05-2025) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வங்கிச் சம்பளக் கணக்குக் பாக்கேஜ் (Salary Package) மற்றும் இலவசக் காப்பீட்டுச் சலுகைகள் பற்றியது.

# govt employees salary account accidental insurance GO.


அரசு ஊழியர் விபத்தில் இறந்தால், சம்பள உச்ச வரம்பின்றி (salary bond)  1 கோடி ரூபாய்  காப்பீடு:¡


📌 அரசாணையின் முதன்மை நோக்கம்


தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டு, இலவச ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்க அனுமதி அளித்தல்.  


💡 முக்கியச் சலுகைகள் (வழங்கப்படும் வங்கிகள் மூலம்)


இலவச தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal Accident Insurance):


அரசு ஊழியர் விபத்தால் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ ₹1 கோடி வரை காப்பீட்டுத் தொகை.  


இயற்கை மரணத்திற்கான ஆயுள் காப்பீடு (Term Life Insurance):


பணிக்காலத்தில் இயற்கை எய்தினால் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் காப்பீடுத்துகை வழங்கப்படல்.  


மகள்களின் திருமண உதவி:


விபத்தில் இறந்த அரசு ஊழியரின் மகள்களுக்குத் திருமணச் செலவிற்காக ₹5 லட்சம் வீதம் (அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை) நிதி உதவி.  


உயர்கல்வி உதவித்தொகை:


விபத்தில் இறந்த அரசு ஊழியரின் மகள்கள் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி தொடர ₹10 லட்சம் வரை நிதி உதவி.  


கடன் வட்டிக் சலுகைகள்:


தனிநபர் கடன் (Personal Loan), வீட்டுக் கடன் (Housing Loan), மற்றும் கல்விக் கடன் (Education Loan) பெறும்போது வட்டிக் குறைப்புச் சலுகைகள் வழங்கப்படல்.  


🏦 சலுகை அளிக்கும் ஒப்பந்த வங்கிகள் (7 வங்கிகள்)


பின்வரும் 7 வங்கிகளில் சம்பளக் கணக்கு (Salary Account) வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு எந்தவிதக் கூடுதல் கட்டணமுமின்றி (Free of cost) இச்சலுகைகள் கிடைக்கும்:  


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)  


இந்தியன் வங்கி (Indian Bank)  


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)  


ஆக்சிஸ் வங்கி (Axis Bank)  


பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)  


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)  


கனரா வங்கி (Canara Bank)  


குறிப்பு: இந்த காப்பீடு மற்றும் சலுகைகள் அனைத்தும் அரசு ஊழியரின் சம்பள வரம்பைப் (Salary Band) பொருட்படுத்தாமல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.


இந்த அரசாணை (G.O. (MS) No. 113, நாள்: 14.05.2025) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வங்கிச் சம்பளக் கணக்குக் பாக்கேஜ் (Salary Package) மற்றும் இலவசக் காப்பீட்டுச் சலுகைகள் பற்றியது.



கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 

NHIS 2016 - Non-Network Hospitalல் செலுத்தப்பட்ட கட்டணத்தை 6% வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அரசாணை வெளியீடு



G.O.No.299 - NHIS Reimbursement with Interest


NHIS 2016 - Non-Network Hospitalsல் செலுத்தப்பட்ட கட்டணத்தை 6% வட்டியுடன் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அரசாணை வெளியீடு


G.O. (D) No. 299, Dated : 30-10-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



COURT CASE New Health Insurance Scheme for Employees W.P.No.6322 of 2024 filed by Tmt.M.Ezhilarasi before the Hon'ble High Court of Madras- Implementation of Judgment order dated 05.02.2026 Reimbursement of Medical Expenses incurred - Orders - Issued. Finance (Health Insurance) Department


G.O.(D).No.299 , Dated: 30.09.2026

 புரட்டாசி-13. திருவள்ளுவர் ஆண்டு 2057.


Read:


1. G.O.Ms.No.202, Finance (Salaries) Department, ated: 30.06.2016. 

2. Government D.O. Letter No.37012/ Finance (Salaries) Department/2019-1, dated 01.11.2019,


3. G.O.Ms.No.279, Finance (Salaries) Department, dated 24.06.2020. 

4. Government Letter No.2193/Finance (HI-I)/ 2021-2, Dated: 26.03.2022.

5. The Hon'ble High Court of Madras, Judgement order dated 05.02.2026 in W.P.No.6322 of 2024 filed by Tmt.M.Ezhilarasi

6. The Director of Treasuries and Accounts, Letter Rc.No.421020/NHIS-1/2024, dated 24.09.2026.


ORDER:

In the Government Order first read above, orders have been issued for implementation of New Health Insurance Scheme, 2016 for Employees to provide health care assistance on a CASHLESS basis up to rupees four lakh for a block period of four years for the accredited treatments /surgeries in the hospitals approved by the United India Insurance Company Limited.


2. The United India Insurance Company Limited and Government of Tamil Nadu have entered Into an agreement for implementation of New Health Insurance Scheme, 2016 for a block period of four years from 01.07.2016 to 30.06.2020. Subsequent, this scheme extended further period of one year from 01.07.2020 to 30.06.2021 In the Government Order third read above. This scheme shall also be administered through a Third Party Administrator under the control of United India Insurance Company Limited. The eligible charges which are entitled to under the New Health Insurance Scheme, 2016 should be ascertained for the accredited treatments /surgeries from the hospitals approved by the United India Insurance Company Limited/Third Party Administrator and the hospitals should not be allowed to charge any excess amount. Any claim in deviation of the above procedure for reimbursement is liable to be rejected.


3. The petitioner's [Tmt.M.Ezhilarasi, P.G.Assistant in Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri] husband Thiru.P.Elango has undergone medical treatment on Ailment of 'Coronary Artery Bypass Surgery for the period from 31.03.2021 to 12.04.2021 at G.Kuppuswamy Naidu Memorial Hospital, Coimbatore which is a "Approved treatment taken in Non-Network Hospital under Non-Emergency Condition" is not eligible for reimbursement under the Scheme.


4. In the Judgment Order fifth read above, the Hon'ble High Court of Madras has ordered that,


"6. The facts in the present case are similar and therefore, the petitioner would be entitled for the benefit granted in the aforesaid order. Following the ratio laid down above, this writ petition stands allowed and the impugned orders 09.02.2022, 20.05.2022 & 15.06.2023 are quashed. Consequently, the respondents are directed to forthwith reimburse the eligible medical expenditure to the petitioner as per the scheme, together with interest at the rate of 6% per annum, within a period of Six (6) weeks from the date of receipt of a copy of this order. There shall be no order as to costs."


5. The Director of Treasuries and Accounts has stated that, the petitioner's appeal has been placed before the State Level Empowered Committee and the Committee has recommended the claim of the petitioner Tmt.M.Ezhilarasi, P.G.Assistant in Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri under Scenario-IV (l.e. Approved treatment taken in Non-Network hospital under Non-Emergency condition) of the guidelines issued by the Government and the reimbursement to be settled by Government.


6. The Director of Treasuries and Accounts has furnished the package rate obtained from the United India Insurance Company, Chennai of Rs.1,30,000/- for the treatment taken by the petitioner's husband.


7. In the reference sixth read above, the Director of Treasuries and Accounts has requested to consider the package rate with 6% interest (Order of the Hon'ble High Court) l.e. [Rs.1,30,000/- + Rs.5,102/-Rs.1,35,102/-] and issue necessary orders for sanctioning the eligible medical reimbursement amount to the writ petitioner Tmt.M.Ezhilarasi.


8. The Government after careful consideration have decided to accept the proposal of Director of Treasuries and Accounts and sanction an eligible amount of Rs.1,35,102/- (Rupees One Lakh Thirty Five Thousand One Hundred and Two only) as per the eligible package rate furnished by the United India Insurance Company Limited of


Rs. 1,30,000/- and 6% Interest amount of Rs.5,102/- towards the medical expenses incurred by the petitioner Tmt.M.Ezhilarasi, P.G.Assistant in Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri, for the treatment taken by her husband.


the following head of account:-9. The expenditure sanctioned in para 8 above, shall be debited in Demand No.16-02 to


"2075 00 Miscellaneous General Services - 800 - Other Expenditure State's Expenditure JG Reimbursement of Medical Expenses to Government Employees 301 Salaries 03 Medical Charges (DPC.2075 00 800 JG 30103)


10. The Treasury Officer, Dharmapuri is authorized to draw and disburse the amount sanctioned in Para 8 above to the petitioner Tmt.M.Ezhilarasi, P.G.Assistant in Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri through ECS after obtaining relevant declarations from the petitioner and send the action taken report to the Government immediately.


(BY ORDER OF THE GOVERNOR)


R.LALITHA 

SPECIAL SECRETARY TO GOVERNMENT.


To:


1. Tmt.M.Ezhilarasi, P.G.Assistant in Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri (Through Director of Treasuries and Accounts, Chennai-35)


2. The Director of Treasuries and Accounts, Chennal - 35.


3/The Director, Medical and Rural Welfare officer, Chennai-6.


4. The Joint Director, Medical and Rural Health Services , Chennal.


5. The Joint Director, Medical and Rural Health Services, Dharmapuri.


6. The Head Master, Government Higher Secondary School, Bhelarahalli, Palacode Taluk, Dharmapuri.


7. The Treasury Officer, Dharmapuri. 8. The Senior Divisional Manager, United India Insurance Company Limited, Chennai.


Copy to: Stock File/Spare Copy.


// Forwarded By Order //


SECTION OFFICER.

புத்தகக் கண்காட்சி நடத்திட ₹8.45 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



G.O.Ms.No.166 - Book Fair 


அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்திட ₹8.45 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை நிலை எண்: 166, நாள் : 09-10-2026 வெளியீடு


Government Order (Ms.) No. 166, Dated 09-10-2026, issued allocating ₹8.45 crore to conduct book fairs in all districts



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Transfer of IAS officers



ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


உள்துறை செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம்; தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறை செயலாளராக நியமனம்


மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம்; நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமனம்; 


நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம். மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்


ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம். செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம்


குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம்


தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம்


15.10.2026 முதல் 4 வகையான ஆவணங்களை காகிதமற்ற முறையில் பதிவு செய்வது கட்டாயம் - அரசாணை வெளியீடு

 



15.10.2026 முதல் நான்கு வகையான ஆவணங்களை காகிதமற்ற முறையில் பதிவு செய்வது கட்டாயம் - பதிவுத் துறை அரசாணை G.O.Ms.No.149 , தேதி : 07-10-2026 - Paperless Registration வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


IAS officers transferred - Government Order issued

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு 


IAS officers transferred - Government Order issued


'எல்காட்' நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றம்.


பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பிரியங்கா, இ-சேவை இயக்குநராக மாற்றம்.


அயல்பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், 'எல்காட்' நிர்வாக இயக்குநராக நியமனம்.



தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் குற்றச்சாட்டு - மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றம்



தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முடிவடையும் முன்பே பணிகளை முடித்துத் திறந்து வைத்ததாக அறப்போர் இயக்கம் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் ஐஏஎஸ் தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது 



Maternity Leave related information including all G.O.s

 


மகப்பேறு விடுப்பு தொடர்பான மொத்த தகவல் தொகுப்பு அனைத்து அரசாணைகளுடன்


Comprehensive compilation of information regarding Maternity Leave, including all government orders


நண்பர்களே வணக்கம் 🙏

அடிப்படை விதி 101 இன் படி திருமணமான பெண் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது .

அது சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன் பகிரப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமங்கள் (DL) மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் (RC) வழங்கும் நடைமுறை - அரசாணை வெளியீடு



மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமங்கள் (DL) மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் (RC) வழங்கும் நடைமுறை, 15.09.2026 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியீடு


G.O.Ms.No.295 , Dated : 10-09-2026 - DL & RC Book


Government order issued stating that the procedure for issuing Driving Licences (DL) and Registration Certificates (RC) in electronic format will come into effect from 15.09.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


27 IAS officers transferred


 27 இ.ஆ.ப., அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணைகள் G.O.Rt.No. 3213, Dated : 08-09-2026 வெளியீடு


27 IAS officers transferred


தமிழ்நாட்டில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு.


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமனம்.


சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம்.


சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம்.


விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.


💥 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்


பெரம்பலூர் ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பொன்னேரி உதவி ஆட்சியராக இருந்த அப்துல் ரசாக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


செங்கல்பட்டு உதவி ஆட்சியராக இருந்த வி.நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.ரவிக்குமார், வேளாண்மை-உழவர் நலத் துறை இணைச் செயலராக மாற்றம்.



மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம்


கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம்


பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம்


வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம்


அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம்


குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம்


பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம்


சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம்


டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்


தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்


தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம்


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம்


தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave



 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு 


அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு


அரசு பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டிற்கான அரசாணை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



* மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.


* 25.08.2026-க்கு முன்னதாக 3-வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பில் சென்று, இந்நாளில் (25.08.2026) அல்லது இதற்குப் பிறகும் தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும் மொத்தம் 365 நாட்கள் வரை விடுப்பு பெறத் தகுதியுடையவர் ஆவர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET December 2026 - SOP for Reinforcement Training

  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET December 2026) - வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் Standard Operating Proc...