மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவ மாணவியர் தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும், பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.