கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ஓசூர் டாடா நிறுவனத்தில் மாதம் ரூ.16,557/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு (Job to 12th passed Female in Hosur Tata Company at Rs.16,557/- per month)...

 பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ஓசூர் டாடா நிறுவனத்தில் மாதம் ரூ.16,557/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு (Job to 12th passed Female in Hosur Tata Company at Rs.16,557/- per month)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைக்கின்ற புதிய தொழிற்கூடத்தில், 15000 பெண்களுக்கு வேலை அளிக்கின்றார்கள். 

12 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும். 


வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்களை அழைத்து வந்து பணியில் அமர்த்துகின்றார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. 


நாங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினோம். 

ஆனால், இந்த வேலையில் சேர தமிழ்நாட்டுப் பெண்கள் ஆர்வம் காட்டவில்லை என, 

டாடா நிறுவனம் விளக்கம் அளித்தது. 


இருப்பினும், எதிர்ப்புகள் கிளம்பின. 

அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்தன. 

இன்று தினமணி முதல் பக்கத்தில், முழுப்பக்க அளவில் டாடா நிறுவனம் விளம்பரம் கொடுத்து இருக்கின்றது. 


டாடா நிறுவனம் சொன்னதிலும் 

ஒரு உண்மை இருக்கின்றது. 

இன்று, தமிழ்நாட்டுப் பெண்கள் பெரும்பாலும் உயர்கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டு இருக்கின்றார்கள். 


ஆனாலும், கிராமப்புறங்களில், 

இந்த வேலைவாய்ப்பு குறித்து அறியாத இலட்சக்கணக்கான 

ஏழைப் பெண்கள் இருக்கின்றார்கள். 


உங்களால் முடிந்த அளவிற்கு, 

ஒரு பெண்ணுக்காவது இந்தத் தகவலைப் பரப்புங்கள். 

உங்கள் தளத்தில் பகிர்ந்திடுங்கள். 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...