கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இனிய குடியரசு தின விழா வாழ்த்துகள் (Happy Republic Day)...


 இனிய குடியரசு தின விழா வாழ்த்துகள் (Happy Republic Day)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை முதல்-அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.


பின்னர் அதிகாரிகளை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.


அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும்.


அணிவகுப்பு மரியாதை


பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டுவரப்படும்.


அதைத்தொடர்ந்து 30 படைப்பிரிவினர் அணி வகுத்து செல்வார்கள்.


பதக்கங்கள்


அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.


அதைத்தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதல்-அமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...