கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13-03-2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in the Academic Year 2022-2023 - Literary Forum - Conduct of Competitions - Procedures to be followed - Instructions to Chief Educational Officers - Regarding - Proceedings of Tamil Nadu Commissioner of School Education, No. 019528/M/E1/2022, dt.13-03-2023)...

 

>>> பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13-03-2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in the Academic Year 2022-2023 - Literary Forum - Conduct of Competitions - Procedures to be followed - Instructions to Chief Educational Officers - Regarding - Proceedings of Tamil Nadu Commissioner of School Education, No. 019528/M/E1/2022, dt.13-03-2023)...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -6.

ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13 .03.2023


பொருள்‌: பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக.


பார்வை: 

1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 19528/எம்‌/இ1/2022, நாள்‌. 11.06.2022.


2. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌, ந.க.எண்‌.019528/எம்‌/இ1/2022, நாள்‌. 22.08.2022.


3. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌. 10.01.2023 மற்றும்‌ 06.02.2023.


தமிழ்நாடு சட்டப்‌ பேரவையில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்‌ போது மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடையே கல்வி இணைச்‌ செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில்‌ இலக்கியம்‌, கவின்கலை, சூழலியல்‌ உள்ளிட்ட மாணவர்‌ மன்றங்கள்‌ தொடங்கப்பட்டு நடைமுறையில்‌ இருந்தன. கொரோணா பெருந்தொற்றால்‌ கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள்‌ செயல்படாத நிலையில்‌ அவற்றைப்‌ புதுப்பித்து சிறப்பாகச்‌ செயல்பட வழிவகை செய்யப்படும்‌ என்ற அறிவிப்பினை வெளியிட்டார்‌.


பார்வை (3)-இல்‌ காணும்‌ செயல்முறையில்‌, 2022-2023-ஆம்‌  கல்வியாண்டில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஒவ்வொரு வாரமும்‌ நடைபெறும்‌. மன்றச்‌ செயல்பாடுகளில்‌ 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து  மாணவர்களும்‌ ஆர்வத்துடன்‌ பங்கேற்க வேண்டும்‌ என்ற நோக்கில்‌ இலக்கிய மன்றம்‌.  (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌) ஒவ்வொரு பள்ளியிலும்‌ நிறுவி ஒவ்வொரு மாதமும்‌ நிகழ்ச்சிகளும்‌ போட்டிகளும்‌ நடத்தவேண்டும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டி ருந்தது.


மார்ச்‌ மாதத்திற்கான இலக்கிய மன்ற போட்டிகள்‌ பள்ளி அளவில்‌ மார்ச்‌ 6 முதல்‌ 10 வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது, வட்டார அளவில்‌ மார்ச்‌ 13 முதல்‌ 15 முடியவும்‌ மாவட்ட அளவில்‌ மார்ச்‌ 20-21 நடத்திட தெரிவிக்கப்பட்டது,


வட்டார அளவில்‌ கீழ்க்கண்ட கருப்பொருளின்‌ அடிப்படையில்‌ போட்டிகளை நடத்த தெரிவிக்கப்படுகிறது.


கருப்பொருள்‌:


1. என்‌ வாழ்வின்‌ இலட்சியம்‌:


2. அறிவியலின்‌ அற்புதங்கள்‌


மாவட்ட அளவில்‌ கீழ்க்கண்ட கருப்பொருளின்‌ அடிப்படையில்‌ போட்டிகளை நடத்த தெரிவிக்கப்படுகிறது.


கருப்பொருள்‌: 


1. பெண்மையை போற்றுவோம்‌


2. தமிழ்‌ எந்தன்‌ உயிருக்கு நேர்‌






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...