கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...



 பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...


1. 7.6.2023 முதல் 9.6.2023 தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


2.தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3. 9.6.2023 அன்று   நடைபெற உள்ள SMC கூட்டம் 26.3.2023 அன்று அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் உரிய வழிகாட்டுதல்படி நடத்திட வேண்டும்.


3. EMIS இல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

இம் மாணவர்கள் அடுத்த உயர் வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


4. தங்கள் ஊரில் உள்ள பள்ளி வயது 5+ குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.


5. பள்ளியில் சேர்த்த மாணவர்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கான TIME TABLEஐ EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.


7. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த உயர் வகுப்பில் மாணவர்கள் பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


8. தங்கள் பள்ளி EMIS தளத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும்  பெயர் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


9. Attendance App இல் வகுப்பு வாரியாக மாணவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். (மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வகையில்)


10.  குடிநீர் கழிவறை மின்வசதிகள் பள்ளி வளாகம் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


11. எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை புதிய பொலிவுடன் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.


12. பள்ளிகளுக்கு தற்போது பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டருடன் இணைத்து செயல்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கணிணிகளை/ மடிக்கணிகளை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...