கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆட்டோ, கார் டிரைவர்கள் வற்புறுத்தி பெறும் கூடுதல் தொகையை பத்து நாட்களுக்குள் திரும்பப் பெறும் வழிமுறை (Procedure to get refund of excess amount Collected by Ola Auto and Car Drivers within 10 days)...

 


OLA ஆட்டோ, கார் புக் செய்யும்போது. அவர்கள் நம்மிடம் எவ்வளவு Bill Amount காட்டுகிறது என்று கேட்கிறார்கள். 


நாம் தொகையை சொன்ன பின் கூடுதலாக தொகையை தந்தால்தான் சவாரி வரமுடியும் என்கிறார்கள்.


Ola ஓட்டுனர்கள் அனைவரும் சிண்டிகேட் அமைத்து கூடுதல் கட்டணம் பெற்று வருகிறார்கள். 


Bill க்கு மேல் கட்டணம் பெறுவது சட்டப்படி குற்றமாகும்.


எனவே தாங்கள் Ola வில் சென்று கூடுதல் கட்டணம் கொடுத்து பயணத்தை முடித்த பின் உடன் Ola App ஐ Open செய்து இடது பக்க மேல் பக்கம் மூன்று கோடுகளை டச் செய்தால் அதில் Your Ride வரும்.


அதில் கடைசி யாக பயணம் செய்ததை டச் செய்தால் கடைசியாக பயணம் செய்த Bill Details வரும்.


அதற்கு அடியில் வலது ஓரத்தில் Support என்பதை டச் செய்து Driver issue டச் செய்து. Driver demanded extra cash என்பதை டச் செய்து நீங்கள் கொடுத்த மொத்த தொகையை பதிவிட்ட பின் கூடுதல் தொகை எவ்வளவு என்பது அதுவே காட்டி விடும்.


 பின்பு நமது வங்கி அக்கவுண்ட் எண் IFSC Code Branch name Branch location பதிவிட்டு Submit கொடுத்த பின் நமது Mail க்கு Ticket no வழங்கப்படும். 


அதன் பின்னர் பத்து நாட்களுக்குள் வங்கி கணக்கில் கூடுதல் கட்டணம் பெறப்பட்ட தொகை வரவு வைக்கப்படும் என Mail வரும்.


Ola கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகள் இந்த வழிமுறை கையாளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...