வருமானவரித்துறைக்கு முதலில் நேர வரையறை நிர்ணயிக்க வேண்டும் - ட்விட்டரில் வரி செலுத்தியவர்களின் பதிவும், வருமான வரி துறையின் பதிலும் (First needs to set a time limit to The Income Tax department – Posts of tax payers on Twitter and the response of the Income Tax department)...
நான் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்தேன், இன்னும் எனது பணத்தைத் திரும்பப் பெற காத்திருக்கிறேன். இரண்டு முறை நினைவூட்டியும் பதில் இல்லை. குறித்த காலத்தில் பணியை முடிக்க உங்களுக்கும் நேர வரையறை இருக்க வேண்டும். நீங்கள் டைம்லைனை எங்களுக்காக வைத்தீர்கள், உங்களுக்காக அல்ல. (I did in June and still waiting for my refund.. raised 2 tickets calls but no response. Their should be time limte for you guys aslo. Bec you put timline to us and not for you.)
ஜூன் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் இன்னும் செயலாக்கப்படவில்லை. மிக மெதுவாக உள்ள, இது போன்ற தொழில்நுட்பத் திறன் எதிர்பார்த்தபடி இல்லை. இ-ஃபைலிங்-ஐச் சரிபார்ப்பதைக் கேட்பதற்குப் பதிலாக, தாக்கல் செய்த செயலாக்கத்தில் கவனம் செலுத்துங்கள். ( Itr filed in June 23 still not processed...not as expected too slow with such technological competence.... instead of asking for e verify you people should focus on processing of itr filed)..
ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்டர்ன்கள் இன்னும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உங்கள் வேகத்தையும் அதிகரிக்கவும், முந்தைய போர்ட்டலை விட மெதுவாக செயலாக்கப்பட்டால் 4200 கோடி செலவழித்து என்ன பயன் (Returns filed in June itself, yet to be picked up for processing. Increase your speed as well, what’s the use of spending 4200 crores if the returns are processed slower than the previous portal!!)
அன்புள்ள @Devil_MUFC,
orm@cpc.incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்களின் விவரங்களை (PAN மற்றும் உங்கள் மொபைல் எண்ணுடன்) பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
Dear @Devil_MUFC,
May we request you to share your details (along with PAN & your mobile no.) with us at orm@cpc.incometax.gov.in so that our team can get in touch with you.