கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நுழை, நட, ஓடு & பற - பள்ளிக்கல்வித் துறையின் வாசிப்பு இயக்கம் (Vaasippu Iyakkam) - அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் (Enter, Walk, Run & Fly - Department of School Education's Reading Movement - Expanded to All Schools)...

 நுழை, நட, ஓடு & பற - பள்ளிக்கல்வித் துறையின் வாசிப்பு இயக்கம் (Vaasippu Iyakkam) - அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் (Enter, Walk, Run & Fly - Department of School Education's Reading Movement - Expanded to All Schools)...










>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


25-07-2023

வாசிப்பு இயக்கம் எனும் புது வாசல்


நுழை... நட.... ஓடு...பற.... என்ற வார்த்தைகள் 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இன்று ஒளிர்ந்து் கொண்டிருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு மேம்பட, நற்பண்புகள் வளர பள்ளிக் கல்வித்துறை "வாசிப்பு இயக்கம்" என்கின்ற ஒரு புதுவாசலை கடந்த 21-ம்தேதி திறந்து வைத்துள்ளது. ஆழமான கருத்துக்களுடன், அழகிய படங்களுடன், எளிய நடையில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த சின்ன,சின்ன புத்தகங்கள் மாணவ மாணவிகளின் மனங்களை கொள்ளையடிக்கப் போகிறது.


11 ஒன்றியங்களில்... வாசிப்பு இயக்கம் முதல் கட்டமாகதிருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம் சிறுவிடைமருதூர் ஒன்றியம், சென்னை தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் அண்ணா கிராமம், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர்ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டத்தில்திருச்செந்தூர் ஒன்றியம், கோவைமாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஈரோட்டில் சத்தியமங்கலம் ஒன்றியம் ஆக 11 ஒன்றியங்களில் முதல் கட்டமாக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.


மாணவரின் வாசிப்பு திறனைக் கண்காணிக்க 11 ஒன்றியங்களுக்கும் 163 பேர் களப்பணியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி கடந்த மாதம் இரண்டு நாள் மதுரையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்குசென்று கண்காணிக்க வேண்டும்.


அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்துவரும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான மாணவ மாணவிகள் வாசிப்புக்காக புத்தகம் வழங்கப் பட்டுள்ளது. படிப்படியாக வாசிப்புமேம்படவும், வாசிப்பின் வேகத்திற் கும், வகுப்புக்களுக்கு தக்கபடி வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் நுழை, நட, ஓடு,பற, பாடல்.... என்ற நிலைகளில் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. குட்டி குட்டி புத்தகங்களாய் கண்ணைக்கவரும் வகையில் அழகிய படங்களுடன் எளிய நடையில், ஆழமான கருத்துக்களுடன் மிகக் குறைந்த பக்கங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பொன்மொழிகள்: புத்தகங்களின் பின்அட்டையில்,"புத்தகம் என்பது சுமையல்ல சுமையை இறக்கிப் பறக்க வைக்க உங்களுக்குக் கிடைத்த இறக்கை அது", "சிறந்த புத்தகங்களை வாசிப்பது என்பது சிறந்த மனிதர்களுடன் பேசுவதை போன்றது", "எப்போதும் வசந்த காலம் தான் புத்தகங்களோடு வாழ்பவனுக்கு" இதுபோன்ற பொன்மொழிகள் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு.


ஒவ்வொரு தொடக்க பள்ளிகளுக்கும் 109 புத்தகங்கள் கொண்ட ஒரு செட் வழங்கப்பட்டுள்ளது. 1,2-ம் வகுப்புக்கு தலா 12 புத்தகங்களும், மூன்று,நான்காம் வகுப்புகளுக்கு தலா 23 புத்தகங்களும், ஐந்தாம் வகுப்பிற்கு 39 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 53 புத்தகங்களும், மேல்நிலைக் கல்வி வகுப்புகளுக்கு தலா 30 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. 53 தலைப்புகளில் கதை புத்தகங்களும் உள்ளன.


வாசிப்புக்கு புது வாசல்: ஒவ்வொரு நூல்களும் நல்ல பல கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. வண்ண வண்ண படங்கள், எளிய நடை, பெரிய எழுத்துக்கள், மிகக் குறைவான பக்க அளவு, மாணவர்களை தொடர்ந்து வாசிக்க தூண்டும் வகையில் இருக்கிறது. "வாசிப்பு இயக்கம்" அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒரு புது வாசலை திறந்துள்ளது. புது வாசலில் மகிழ்ச்சியுடன் உள்ளே நுழையும் மாணவர்கள் படைப்பாளியாகுவார்கள்.


17-08-2022

திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில், 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்தார்.


இத்திட்டத்தின்படி,  ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6,8, 9, 10, 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம். அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம்.


நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும். இவற்றில் சிறந்த படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...