கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"10ஆம் வகுப்பிலும் முதலிடம்.. 12ஆம் வகுப்பிலும் முதலிடம்" - ஆதித்யா எல்1 விண்கலத் திட்டத்தில் இயக்குநராகத் தலைமையேற்ற செங்கோட்டையை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி - இஸ்ரோ விஞ்ஞானி எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதில் மகிழ்ச்சி - தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி ("Topper in class 10.. Topper in class 12" - Woman Scientist Nihar Shaji from Sengottah who headed the Aditya L1 Spacecraft Program as Project Director - Glad to have an ISRO Scientist as an alumnus of our school - Headmaster Resilience)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


 "10ஆம் வகுப்பிலும் முதலிடம்.. 12ஆம் வகுப்பிலும் முதலிடம்" - ஆதித்யா எல்1 விண்கலத் திட்டத்தில் இயக்குநராகத் தலைமையேற்ற செங்கோட்டையை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி - இஸ்ரோ விஞ்ஞானி எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதில் மகிழ்ச்சி - தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி ("Topper in class 10.. Topper in class 12" - Woman Scientist Nihar Shaji from Sengottah who headed the Aditya L1 Spacecraft Program as Project Director - Glad to have an ISRO Scientist as an alumnus of our school - Headmaster Resilience)...


சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 திட்டத்தைத் தொடர்ந்து இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல்1 திட்டத்திற்கும் தமிழர் ஒருவரே திட்ட இயக்குநராக செயல்பட்டிருக்கிறார்.


இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடி வந்தனர். அந்த திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் திட்ட இயக்குநராக செயல்பட்டிருந்தார். அவரை தமிழக மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்தவகையில் தற்போது  சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட பணிக்கு இயக்குநராக தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றியிருக்கிறார். 



தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி.  ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றி இருக்கும் இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள். நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.  அதிக  மதிப்பெண்களைப் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்து அப்போதே சாதனை படைத்திருக்கிறார்.


பின்னர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த நிகர் ஷாஜி, பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்து பின்னர் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார். தற்போது ஆதித்யா எல்-1 திட்ட  பணிக்கு இயக்குநராக பணியாற்றி மீண்டும் தமிழர்களைப் பெருமைடையச் செய்திருக்கிறார்.   






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🔸“தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்”


 - திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் , தமிழ்நாடு முதலமைச்சர்



✍️பெருமிதம்



✒️"தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.



 ✒️இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!”


- திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...