ஆண்களுக்கு அவர்களின் மனைவியின் பிரசவத்திற்கு முன் 15 நாட்கள் அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் 15 நாட்கள் தந்தை வழி விடுப்பு உண்டு - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்லூரிக் கல்வி இயக்கக பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் பதில் கடிதம் ந.க.எண்: 2944/ பி1/ 2023, நாள்: 08-09-2023 (Men are entitled to 15 days paternity leave before the delivery of their wife or 15 days within six months from the date of birth of the child - Directorate of College Education Public Information Officer Reply Letter No: 2944/ P1/ 2023, Dated: 08- 09-2023)...
அரசு கடித எண் 11618/ஜி2/2022, நாள் 15-12-2022...
Paternity Leave - மனைவியின் பிரசவத்திற்கு ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு தந்தைவழி விடுப்பு - RTI Reply
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. (08.09.2023)
1. தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு (தகுதிகாண் பருவத்தினர் உட்பட) 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும்.
2. தந்தைவழி விடுப்பு வேறு எந்த வகையான விடுமுறையுடனும் இணைக்கப்படலாம். 3. தந்தைவழி விடுப்பு, விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது.
4. தந்தைவழி விடுப்பு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெறப்படாவிட்டால் அத்தகைய விடுப்பு காலாவதியானதாக கருதப்படும்.
பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக அலுவலர், கல்லூரிக் கல்வி இயக்ககம், Chennai - 600 006.
கல்லூரிக் கல்வித் துறை
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...