கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் புதிய மாற்றங்கள்...

 

நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return E-filing) படிவத்தில் புதிய மாற்றங்கள்...


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 1 மற்றும் 4ல் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் (ரிட்டர்ன்) செய்வதற்கு பல்வேறு படிவங்கள் உள்ளன. இவற்றில், நடப்பு நிதியாண்டுக்கான அதாவது, கணக்கீட்டு ஆண்டு 2024-25க்கான ஐடிஆர் 1 மற்றும் 4 ஆகிய படிவங்களில் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.


 தனிநபர்களுக்கான ஐடிஆர் படிவம் – 1ஐ (சகஜ்), ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், சம்பள வருவாய், ஒரு வீட்டு வாடகை வருவாய் மற்றும் வட்டி போன்ற இதர வருவாய் ஈட்டுபவர்கள், ரூ.5,000 வரை விவசாய வருவாய் ஈடுபடுவர்கள் தாக்கல் செய்யலாம்.


 இதுபோல், ஐடிஆர் படிவம் -1ஐ (சுகம்) தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர், ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் எல்எல்பி நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் தாக்கல் செய்யலாம்.


ஐடிஆர் – படிவம் 4 தாக்கல் செய்பவர்கள், பழைய அல்லது புதிய வரி விதிப்பில் விருப்பமானதை தேர்வு செய்தால் போதும். 


ஐடிஆர் 4 தாக்கல் செய்வோர், புதிய வருமான வரி விதிப்பை தேர்வு செய்ய படிவம் 10 – ஐஇஏ வை தாக்கல் செய்ய வேண்டும். படிவம் 1 மற்றும் 4ல், அக்னி வீர் திட்டத்துக்கு நிதி வழங்கியதற்கு 80 சிசிஎச் -ன் கீழ் வருமான வரிச்சலுகையைப் பெற, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 01-11-2022க்கு பிறகு மேற்கண்ட திட்டத்துக்கு நிதி வழங்கியவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். ஐடிஆர் படிவம் 4ல் ஆண்டு வர்த்தக வரம்பை அதிகரிக்க பணமாக பெறப்பட்டது குறித்து சேர்ப்பதற்கு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என, வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் வழக்கமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை டிசம்பரிலேயே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...