கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜப்பானிய இக்கிகை சொல்லும் பத்து விதிகள்...



நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜப்பானிய இக்கிகை புத்தகம் சொல்லும் பத்து விதிகள்...


ஹெக்டர் கார்ஸியா மற்றும் பிரான்சிஸ் மிராலஸ் எழுதிய 'இக்கிகை; நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஜப்பானிய ரகசியம்’ என்ற நூல் மிகப் பிரபலமான ஒன்றாகும். இக்கிகை (Ikigai) என்பதற்கு எப்போதும் பிசியாக இருப்பதற்கான மகிழ்ச்சி என்று பொருள். 


இது மனித வாழ்வின் முக்கிய குறிக்கோளை சுற்றி அமைகிறது. அவரவருக்கு பொருத்தமான இக்கிகையை தேடிக்கொள்வதே வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக்கும் என்பதே இந்தப் புத்தகத்தின் சாராம்சம். 


'எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதே நூறு வயது வாழ்வதற்கான சூட்சுமம்' என்று ஒரு ஜப்பானிய பழமொழி சொல்கிறது. மனிதர்கள் எப்போதும் இக்கிகையில் தங்களை ஆழ்த்திக்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.


இக்கிகையின் 10 முக்கியமான விதிகள்...


1. எப்போதும் சுறுசுறுப்பாக இரு: 


ஓய்வு பெறாதே! இந்த உலகில் 80லிருந்து 90 வயது வரை நீண்ட காலம் வாழும் மக்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதில்லை. ஜெய்னி பென்ஸ் என்கிற நூறு வயது பெண்மணி ஒஹியாவில் உள்ள ஒரு கலைப் பொருள்கள் கடையில் வேலை செய்கிறார். தன்னுடைய நூறாவது பிறந்த நாள் விருப்பமாக அவர் தெரிவித்தது என்னவென்றால் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.


2. எதையும் லேசாக எடுத்துக்கொள்ளுதல்: 


பரபரவென்று ஓடிக்கொண்டு எதையும் அவசர அவசரமாக செய்வது ஆரோக்கியக் கேடு. அது மனதையும் பாதிக்கும். எனவே, நிதானமாக எந்த செயலையும் செய்ய வேண்டும். அது உங்கள் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தத்தை கொடுக்கும் என்பதே இதன் இரண்டாவது விதி


3. வயிறு நிறைய உண்ணாதீர்கள்: 


எப்போதும் தட்டை முழுக்க முழுக்க உணவால் நிரப்ப வேண்டாம். எண்பது சதவீதம் மட்டுமே அதில் உணவு இருந்தால் போதும். உணவிற்குப்பின் அதிகமாக உண்ணும் ஒரு சிறு தீனி கூட நல்லதல்ல. அது குறைந்த அளவு நேரத்திற்கு சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால், அதை உண்ணாமல் இருந்தால் வாழ்க்கையை நீட்டிக்கும் என்கிறார்கள்.


4. நல்ல நண்பர்கள் சூழ இருத்தல்: 


நல்ல நட்பு வட்டத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் ஆயுளையும் நீட்டிக்கும் என்று ஹார்ட்வேர்ட் ஆராய்ச்சி சொல்கிறது. நூறு வயதான ஒக்கினாவா மக்கள் தங்கள் சொந்த கிராமத்தில் இருக்கும் நட்பு மற்றும் சுற்றத்தினரோடு மகிழ்ச்சியான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.


5. உடற்பயிற்சி: 


நீண்ட நாள் வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். மிகச் சிரமப்பட்டு செய்யும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. ஆனால், மிகவும் வயதான ஜப்பானியர்கள் கூட ஐந்து நிமிடத்தில் செய்யும் ரேடியோ டெய்சோ என்கிற உடற்பயிற்சியை தினமும் செய்கிறார்கள்.


6. புன்னகை: 


தினந்தோறும் நாம் பார்த்து ரசிக்கும் சாதாரண மக்கள் மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களைப் பார்த்து புன்னகை புரிவது ஒரு மிகச்சிறந்த ஆன்ம பலத்தை தருகிறது.


7. இயற்கையோடு தொடர்பில் இருப்பது: 


ஒரு பெரிய நகரத்தில் வசித்தாலும் தினமும் சிறிது நேரமாவது திறந்தவெளியில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி நடங்கள். இயற்கையோடு செலவு செய்யும் நேரம் உங்களுடைய ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.


8. நன்றி உணர்வு: 


உங்களது அன்புக் குடும்பத்தினருக்கும் அற்புதமான நண்பர்களுக்கும், உங்களுக்கும் எப்போதும் நன்றி சொல்லுங்கள். நன்றி உணர்வுடன் இருங்கள் என்கிறது எட்டாவது விதி.


9. இந்த கணத்தில் வாழ்வது: 


பழைய முடிந்துபோன கடந்த கால வாழ்க்கையைப் பற்றி புலம்பாமல் வருங்கால அச்சங்களையும் புறந்தள்ளி இன்றைய கணத்தில் வாழுங்கள். இன்றைய நாளை மிகச் சிறப்பாக வாழுங்கள்.



10. இக்கிகையை பின்பற்றுங்கள்: 


உங்களுடைய லட்சியம் என்ன என்பதை கண்டறிந்து அதை நோக்கி செயல்படுங்கள். இக்கிகையை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு நிறைய சந்தோஷத்தை அனுபவியுங்கள்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...