வேலை - நாம் பெற்ற வரம் - வேலைப்பளு அதிகம் என்று புலம்பாதீர்கள்...
💐💐💐💐💐💐💐
வேலைப்பளு அதிகமென்றோ..
வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சல் என்றோ புலம்பாதீர்கள்..!!
💐 இந்த வேலை தான் சமூக அந்தஸ்தையும், மரியாதையையும். தனித்த அடையாளத்தையும்இதையெல்லாவற்றை விடவும் நாம் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம் எனும் வாழ்வாதாரத்தையும் வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!!
💐வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!!
💐வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நம் வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்..
வலி..
வேதனை..
ரணம்..
அவமானம்..
துயரம்..
துக்கம்..
மிக மிகப் பெரியது..!!
💐 தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை..
அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!!
இங்கு எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுவதில்லை..!!
💐உண்மையில் வேலைப் பளுவென்பதும் சலிப்பு என்பதும் வேலையில் ஈடுபாடு இல்லாததால் வருவது
💐நீங்கள் சலித்து கொண்டு பார்க்கும் இவ்வேலையை விட்டால் அதனை பெறுவதற்கு இலட்சக்கணக்கான பேர் போட்டியிடுவர். அப்படிபட்ட வேலையை பெற்றிருக்கிறோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி பெருமையுடன் வேலை பாருங்கள்.
💐வேலை பார்க்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஊதியம் பெறுகிறோம்
💐ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்...
இந்த வேலையில்லாமல் இருந்தால் நாம் ஒரு செல்லாக்காசு என்பது புலப்படும்.
💐உடல் வலிமையோடு உள்ளவர்கள் ஓய்வு பெற்றவுடன் மன வேதனையில் ஒடிந்து உடல் வலிமை குன்றி போவதைக் காணலாம்
💐படிப்பு முடிந்து தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு நம் வேலைப் பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!!
💐கொஞ்சம் கூடுதல் வேலை என்பதை ரசித்து இன்முகத்தோடு எதிர் கொண்டால் மனம் சலிப்படையாது மாறாக உற்சாகம் அடையும்
💐வேலையென்பது நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!!
உண்மையில் கிடைத்த வேலையை சரியாக பார்க்கவில்லை என்றால் எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை சிந்தித்து பாருங்கள். பிறர் சரியாக வேலை பார்க்காததால் நாம் பட்ட கஷ்டத்தை எண்ணி பாருங்கள்...
💐எதற்காகவும் உத்தியோகத்தைச் சலித்துக் கொள்ளாதீர்கள்....
வேலையென்பது சாபமல்ல.. உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு..
வசதி இறைவன் கொடுத்த
வரம்.
ஓய்வு பெறுவதற்குள் ஒவ்வொரு நாளும் இன்முகத்துடன் வேலைக்கு செல்வோம்...
இயன்ற அளவு நேர்மையாகவும்,
அறத்துடனும் பணியாற்றுவோம்.
வேலை செய்வோம் வாழ்வில் உயர்வோம்...