கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...



இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...


🔹🔸 🩺நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவச் செல்வங்களே உங்களுக்கான மிக முக்கிய அறிவுரைகள் ஒரு நிமிடம் இதை முழுமையாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுத செல்லுங்கள் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்...


1. மாணவர்கள் நுழைய சீட்டில் உள்ளபடி உரிய நேரத்திற்கு தேர்வு மையத்தை அடைய வேண்டும்


2. தேர்வு மையத்தின் நுழைவு வாயிலை மூடிய பிறகு எந்த மாணவரையும் அனுமதிக்க இயலாது


3. தேர்வு முடிவதற்கு முன்னர் எக்காரணத்திற்காகவும் மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேறக்கூடாது


4. தேர்வு முடிந்த பிறகு தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு அறையினை விட்டு வெளியேறலாம் என்று கூறிய பிறகு அறையை விட்டு வெளியேற வேண்டும்


5. மாணவர்கள் நுழைச்சீட்டிலுள்ள அனைத்து அறிவுரைகளையும் நன்கு படித்து அதன்படி நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


6. நுழைவு சீட்டில் உள்ள மூன்று பக்கங்களையும் பதிவிறக்கம் செய்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


7. மாணவர்கள் தேர்வு மையத்தின் முகவரியை கொண்டு ஒரு நாள் முன்னதாக விசாரித்துக் கொண்டால் தேர்வு நாள் என்று தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.


8. சில மாணவர்கள் தங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் ஆடைகள் அணிந்திருப்பர். அதுபோன்றோர் தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று முழுமையான சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


9. நுழைவு சீட்டு அடையாள அட்டை போன்றவை அவசியம் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் மெட்டல் டிடெக்டர்களை கொண்டு மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தவிர கைகளால் தொட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது.


10. மாணவர்கள் தேர்வு அறைக்கு கீழ்க்கண்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்


i. ஒளிபுகு தண்ணீர் பாட்டில்


ii. வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு புகைப்படம் (விண்ணப்பத்தில் உள்ளபடி)


iii. நுழைவு சீட்டு மற்றும் சுய உறுதிமொழி படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தபால் அட்டை அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டவும்.


iv. PwD சான்றிதழ் மற்றும் ஆவண எழுத்தர் சம்பந்தமான ஆவணங்கள் தேவைப்படின்


11. மாணவர்கள் தங்களது கையெழுத்தை உரிய இடத்தில் இட்டும் மற்றும் புகைப்படத்தை சரியான இடத்தில் ஒட்ட வேண்டும். இடதுகை கட்டை விரல் முழுமையாகவும் தெளிவாகவும் இட வேண்டும்.


12. பேன் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ வாக்காளர் அடையாள அட்டை/ பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நுழைவு சீட்டு/ பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை/ e-ஆதார்/ ரேஷன் அட்டை மற்றும் அனைத்து அடையாள அட்டைகள்/ கைபேசியில் ஸ்கேன் செய்யப்பட்ட நுழைவு சீட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது


13. மாணவர்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள், கைபேசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தங்களது உடைமைகள் காணாமல் போனால் அதற்கு யாரும் பொறுப்பேற்க இயலாது.


14. சீரான உடை மற்றும் காலணிகள் அணிய வேண்டும். தடித்த அடித்தோல் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. பெரிய பொத்தான் கொண்ட உடையை அணியக்கூடாது.


15. தேர்வு அறைக்கு உள்ளே வெற்றுக் காகிதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வினாத்தாளின் இறுதியில் உள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 


16. தேர்வு முடிவுற்ற பிறகு நுழைவு சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் தங்களது விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது.


17. CCTV கேமராக்கள் மற்றும் ஜேமர்கள் வழியாக மாணவர்கள் தவறிழைப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


18. AI தொழில்நுட்பம் மூலமாக மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் தவறிழைக்கும் மாணவர்கள், AI தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


19. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள், OMR தாள்கள் ( உண்மை மற்றும் நகல்), நுழைவு சீட்டு ஆகியவற்றை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வினாத்தாளை மட்டும் மாணவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. OMR தாளில் தங்களது கையொப்பம் மற்றும் கண்காணிப்பாளரின் கையொப்பம் இரண்டையும் சரி பார்ப்பது மாணவர்களின் கடமையே ஆகும்.


20. மாணவர்கள் NTA வெப்சைட்டை தினம் தோறும் பார்க்க வேண்டும். மேலும் e-mail மற்றும் SMS ஐ தினந்தோறும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


21. சந்தேகம் அல்லது உதவிக்கு, NTA விற்கு neet@nta.ac.in என்ற e-mail மூலமாகவோ அல்லது 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


🔹👉அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமையாக மற்றும் சிந்தித்து விடை எழுதவும்.  நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகள்!



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...