கலைத்திருவிழா 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல்...

 

கலைத்திருவிழா Kalai Thiruvizha 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல்...


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து


 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு...


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


 *போட்டி நடைபெறும் நாட்கள்


 *22.08.2024 முதல் 30.08.2024 வரை


அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.


கலைத் திருவிழா போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு


பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 


பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள் :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.



 *EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

(19.08.2024 - 21.08.2024)


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும். (03.09.2024)


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு (ID, ASD, CP) மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



>>> கலைத்திருவிழா Kalai Thiruvizha 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை...




>>> "கலைத்திருவிழா"  போட்டிகள் நடத்துதல் - கால அட்டவணை & வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்...



*அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு*, 


இன்று (19.08.2024) முதல் பள்ளி அளவில் கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெறும்  மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பள்ளிகளுக்கு இத்தகவலை தெரிவித்து, கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை 21.08.2024 -க்குள் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்குமாறு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


EMIS School Login - > School - > Competition - > Kalai Thiruvizha 2024-25


CWSN மாணவர்கள் கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெற *CWSN Kalai Thiruvizha 2024 – 2025* என்ற Option பயன்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பு: ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்குபெறுவதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  -முதன்மைக்கல்வி அலுவலர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...