கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆக.23ல் தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை


உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21 வேலைநாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர்...


தென்காசி மாவட்டத்திற்கு சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சங்கரன் கோவிலில் அமைந்துள்ள  "சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 23ல் தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.


இந்த நாளில் அரசு தேர்வுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 21 வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...