கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண் 234ன் பலன்களை நீட்டித்து வழங்க உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள் மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புகள் வெளியிடுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


அரசாணை எண் G.O. Ms. No. 234, Dated : 10-09-2009 இன் பலன்களை நீட்டித்து வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள் மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புகள் வெளியிடுதல் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்‌.026383 / இ1 / 2023. நாள்‌: 25-07-2024..



தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்‌.026383 / இ1 / 2023. நாள்‌: 25-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ செயல்முறைகள்‌. சென்னை 600 006.

ந.க.எண்‌.026383 / இ1 / 2023. நாள்‌: 25-07-2024...

பொருள்‌: தொடக்கக்‌ கல்வி. வழக்கு. அரசாணை (நிலை) எண்‌: 234 பள்ளிக்‌ கல்வி(ஜி2)த்‌ துறை, நாள் :10.09.2009-ண்‌ பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி / அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ இடைநிலை ஆசிரியர்களாகவும்‌ மற்றும்‌ தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும்‌ பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 01.06.1988க்குப் பின்பு தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நாள்‌ முதல்‌ தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியில்‌ தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ தொடர்ந்த வழக்குகளில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள்‌ மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ குறிப்புரைகள்‌ (Consolidated instructions with clear illustrations)  வெளியிடுதல்‌ - சார்பு.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌:234 பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி1)த்‌ துறை, நாள்‌:10.09.2009.

2. அரசாணை (நிலை) எண்‌.270 பள்ளிக்‌ கல்வி (ஜி2)த்‌ துறை, நாள்‌ : 20.09:2010.

3. அரசாணை (நிலை) எண்‌2 பள்ளிக்‌ கல்வி (ஜி2)த்‌ துறை, நாள்‌: 30.12.2011

4. அரசாணை (நிலை) எண்‌:179 பள்ளிக்‌ கல்வி (தொ.க.1(2)த்‌ துறை, நாள்‌.06.09.2013.

5. சென்னை உயர்நீதிமன்றம்‌ வழக்கு W.P.Nos. 6100, 31223 to 31229, 32250 to 32255 and 32845 of 2015 தீர்ப்பாணை நாள்‌.04.07.2022.

6. சென்னை உயர்நீதிமன்றம்‌ வழக்கு W.P.No.26943 of 2075 and M.P.No.1 of 2015, தீர்ப்பாணை நாள்‌:14.07.2022.

7. சென்னை 600 006, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌. 026383/இ1/2023, நாள்‌:15.11.2023, 19.02.2023 மற்றும்‌ 13.02.2024.

&  அரசுக் கடிதம்‌ எண்‌:10943/தொ.க.1(2)/2023-3, நாள்‌.0104.2024.

9. சென்னை:600 006. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.026383/இ1/ 2023, நாள்‌.25.07.2024


பார்வையில்‌ காணும்‌ அரசாணைகளின்‌ பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி / அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ கடைநிலை ஆசிரியர்களாகவும்‌ மற்றும்‌ தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும்‌ பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 01.06.1988க்கு பின்பு தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நாள்‌ முதல்‌ தொடக்கப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்க கோரி பார்வை 5 மற்றும்‌ 8ல்‌ காணும்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ தொடர்ந்த வழக்குகள்‌ மீது பார்வை 9-ல்‌ கானும்‌ ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ குறிப்புகள்‌ (Consolidated instructions with clear illustrations) தொடர்‌ நடவமுக்கைக்காக இத்துடன்‌ இணைத்து வெளியிடப்படுகிறுது.


பார்வை 1 முதல்‌ 4 வமையிஸான அரசாணணைகளின்‌ பலன்களை நீட்டித்து வழங்கக்‌ கோரும்‌ நபர்களுக்கு பார்வை 5 மற்றும்‌ 6ல்‌ காணும்‌ சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையிண்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ குறிப்புரைகளுக்குட்பட்டு (Consolidated instructions with clear illustrations) தகுதியான நபர்களை உறுதிசெய்த பின்னர் திருத்திய தேர்வு நிலை / சிறப்பு நிலை அணுமதிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ அரசுக்கு நிதி இழப்புகளை தவிர்ப்பதற்க்காக கவனமுடன்‌ செயல்படுமாறு சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இவ்வாணை வெளியிடப்படுகிறது. 


மேற்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ குறிப்புரைகளுக்குட்பட்டு (Consolidated instructions with clear illustrations) முரணாக மற்றும்‌ தவறுதலாக பார்வை 1 முதல்‌ 4 வரையிலான அரசாணைகளின்‌ பலன்களை நீட்டித்து வழங்கக்‌ கோரும்‌ நபர்களுக்கு ஊதிய 

நிர்ணயம்‌ ஏதேனும்‌ செய்யப்படிண்‌ சார்ந்த அலுவலர்கள்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என திட்டவட்டமாக அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌களுக்கும் (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


பெறுநர்‌:

அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி)

(மின்னஞ்சல்‌ வழியாக)

நகல்‌...

1. அரசு செயலாளர்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, தலைமைச்‌ செயலகம்‌, சென்னை 600 009 அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.'

2. அரசு சிறப்பு வழக்கறிஞர்‌, சென்னை உயர்நீதிமன்றம்‌, சென்னை 600 104 அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

3. அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடர்‌ நடவடிக்கைக்காக - மின்னஞ்சல்‌ வழியாக)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...