கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

DEE - Surplus Counselling 2026-2027



தொடக்கக்கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வு 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள்


DEE - Surplus Counselling 2026-2027 


DEE - Revised Deployment Guidelines


தொடக்கக் கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings



கர்மவீரர் காமராஜர் பிறந்த ஜூலை-15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில்  சிறப்பாக கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 007719/சி4/2026, நாள் : 04.06.2026


பொருள்

தொடக்கக்கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் சிறப்பு பரிசளிப்புத் திட்டம் மாவட்டத்திற்கு 75,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் - சார்பு.


பார்வை

1. அரசாணை (நிலை) எண்.169 ப.க.(என்)துறை, நாள் 06.07.2012.


2. அரசாணை (நிலை)எண்.123 பள்ளிக்கல்வி (ப.க.5(1)த் துறை, நாள்.15.07.2013.


3 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 006366/C-1/2026, . நாள் 16.04.2026.


4. அரசாணை (நிலை) எண்.10, பள்ளிக் கல்வி (பொது1(2) துறை, நாள் 11.01.2023.


5. அரசுக் கடிதம் (நிலை)எண். efile 11915/பொது1(2) 2023-1, நாள் .24.11.2023.


பார்வை 1-இல் காணும் அரசாணையில் பெருந்தலைவர், காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது சார்ந்த. 2012-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்காண் விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான "பரிசளிப்பு திட்டம் ( (Award Scheme)" ஒன்றினை ஏற்படுத்தவும், அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்திடவும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என பரிசுத் தொகை கணக்கிட்டு 38 மாவட்டங்களில் உள்ள 38 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு காமராசர் பிறந்த நாள் சிறப்பு பரிசளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து 2026-2027 ஆம் ஆண்டிற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக அரசின் சார்பில் கொண்டாடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழாவினை சிறப்பாக நடத்திட அனுமதியும், வருவாய் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு


நடுநிலைப்பள்ளியினை தேர்வு செய்து பரிசுகளை வழங்கிடவும், தொடக்கக் கல்வித் துறைக்காக ரூபாய் 28,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து பார்வை 3-இல் காணும் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு பிரித்து வழங்கிடும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


பார்வை 5-இல் குறிப்பிட்ட அரசுக் கடிதத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக பகிர்ந்து அளித்து ஆணையிடப்படுகிறது.



>>> DEE செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்



 TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வு 4 மற்றும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளதால் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு தேதி மாற்றம் - DEE Revised Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்த DEE & DSE செயல்முறைகள்...




தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந. க. எண். 009324/டி1/2026, . நாள் 09.06.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2026 மாதத்தில் நடத்துதல் -விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய ஆணை வழங்குதல்-சார்ந்து,


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள். 17.12.2021.


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.032782/சி3/இ1/2026, நாள் . 08.06.2026 மற்றும் ந.க.எண்.009324/10-1/2026, நாள் . 08.06.2026.


பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்



பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி).


(இச் செயல்முறையினை தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்)


நகல்:


1. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநில திட்ட இயக்குநர் சமக்கர சிக்க்ஷா, சென்னை-6. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக


2026- 2027 Teachers' Transfer Counseling - DSE & DEE Proceedings & Schedule

 


பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - 2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் & கால அட்டவணை வெளியீடு


DSE & DEE - 2026- 2027 Teachers' Transfer Counseling Proceedings & Schedule Released


தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண். 032782 / சி3 / இ1 / 2026 , நாள் : 08.06.2026


ந.க. எண். 009324 / டி1 / 2026 , நாள் : 08.06.2026


பொருள்:-


பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.


பார்வை-


1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021


2) அரசாணை (நிலை)எண்.180 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.10.2022


3) அரசாணை (நிலை)எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.5.2023


4) அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024


5) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் ந.க. எண்.037584/சி3/இ 1/2025 , நாள்.18.06.2025


6) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13466/டி1/2025, நாள்.18.06.2025


 -0-


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2025-26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பின்பற்றி கடந்த ஆண்டு (2025-26) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள்


2) அதேபோல 2026-27ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ഖത ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 15.06.2026 முதல் 22.06.2026 வரை 06.00 பிப வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.


பார்வை-2ல் காணும் அரசாணையில் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிநிறைவடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விருப்பம் உள்ள அனைத்துவகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


 3) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS மூலம் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென olrar Login ID Teacher Profile ல் சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும். 


ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும்.


மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியரது விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட (CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


> அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் தங்களுக்கென ஒதுக்கீடு செய்ப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் 2nd Approval செய்யப்படவேண்டும்.


பொதுமாறுதல் கலந்தாய்வில் வழங்கப்படும் முன்னுரிமை Priority 


1. முற்றிலும் கண்பார்வையற்றவர் 100%


2. மாற்றுத்திறனாளிகள் (40% அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள்) (கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் உட்பட)


3. மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தை உள்ள பெற்றோர்


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இதய அறுவை சிகிச்சை / புற்றுநோயாளிகள் / மூளைகட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள்


5. இராணுவத்தில் பணிபுரிபவரின் கணவன் / மனைவி


6. விதவை / மனைவியை இழந்தவர் / 40 வயது கடந்த முதிர்கன்னியர் / சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை 


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள்


8. கணவன் / மனைவி பணி முன்னுரிமை (above 30km)


9. இதர பிரிவுகள்


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் (Competent authority) அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


தற்போது பணிபுரியும் பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் ii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு v) நிருவாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


4) ஆசிரியர் பயிற்றுநர் BRTE & DC


ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் ஒருங்கிணைப்பாளர்களும் விருப்ப மாறுதல் கோரி EMIS ல் மேற்காண் அறிவுரைகளின்படியே விண்ணப்பிக்கவேண்டும். இவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் மாறுதல் விண்ணப்பங்களை சரிபார்த்து Approval சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் மேற்கொள்ளப்படவேண்டும்.


5) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை


ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு பயன்படுத்தி EMIS செய்யப்பட்ட Individual Login ID வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


மாறுதலுக்கு விண்ணப்பித்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரும் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


6) பொதுமாறுதல் அறிவுரைகள் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கு என EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.


7) பொதுவான அறிவுரைகள்


மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்படவேண்டும் மற்றும் எந்த  பணியிடத்தில் (Post Details Zoology, Botony, Biology)  பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.


கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் /பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும். கணவன் பணிபுரியும் மாவட்டம் (அ) மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும். வேறு மாவட்டங்களை தெரிவு செய்திட அனுமதிக்க இயலாது.


> உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில் மேற்காணுமாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One More choice) காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.


மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது) 


மேலும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் /மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) சார்பான விண்ணப்பங்கள். பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


> கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது எனவும், தற்செயல் விடுப்பு அளித்துவிட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.


மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


> மேலும் இணைப்பில் காலஅட்டவணையில் விண்ணப்பிக்கப்பட்ட காணும் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Login IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி திருத்தங்கள் / முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


> பார்வை-1ல் காணும் அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024ன்படி கடந்த ஓராண்டிற்குள் (1.6.2025 to 31.5.2026) ஆசிரியரின் கணவரோ (அ) மனைவியோ விபத்து மற்றும் இதர காரணங்களால் திடீரென மரணம் அடைந்து இருப்பின் எந்தவித முன்னுரிமையும் பின்பற்றாமல் கலந்தாய்வுக்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்திற்கு மாறுதல் வழங்கப்படவேண்டும்.


புகாருக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே பள்ளியை கலந்தாய்வில் தெரிவு செய்திட அனுமதித்தல் கூடாது. மேலும் போக்சோ வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு மாவட்டத்திற்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த அதே மாவட்டத்தினை தெரிவு செய்ய அனுமதித்தல் கூடாது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


> கலந்தாய்வு:- அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS Login மூலமாகவே நடத்தப்படும்.


தொடக்கக் கல்வி இயக்ககம்


1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை:


* ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


2. பொது மாறுதல் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டவற்றினை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக வட்டாரக் கல்வி அலுவலர்Approval செய்யப்பட வேண்டும்.


+ மேற்படி வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியனை சம்பந்தப்பட்ட (DEO) மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை வட்டாரக் கல்வி அலுவலரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 2nd Approval செய்யப்பட வேண்டும்.


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


+ தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகையில் (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) I) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் iii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு V) நிர்வாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


3. பொது மாறுதல் சார்பாக மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை மாவட்டக் கல்வி அலுவலரிடம் (தொடக்கக் கல்வி) ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பத்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஒப்புதல் அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட User Name and Password ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) சரிபார்த்திடல் வேண்டும்.


+ கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு /வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து முதன்மைக் கல்வி கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அலுவலர்கள்/மாவட்டக் தெரிவிக்கலாகிறது.


இணைப்பு: பொதுமாறுதல் காலஅட்டவணை

(பள்ளிக் கல்வி & தொடக்கக் கல்வி)


தொடக்கக் கல்வி இயக்குநர்     பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் &

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் மூலமாக) இச்சுற்றறிக்கையின் நகலினை (DEO (Sec.) & BEO's தகவல் அளிக்கவும்)


நகல்: 1 இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி & மேல்நிலைக் கல்வி)

2  EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6 

3 சம்பந்தப்பட்ட பிரிவுகள் (W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)



சிறப்பு நிலை ஆணை வழங்க சிறப்பு முகாம் - இயக்குநர் உத்தரவு




இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சிறப்பு நிலை ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 010190/ டி1/ 2026, நாள் : 03-06-2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண். 010190/டி1/2026, நாள் : 03.06.2026


பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணிகள் - தொடக்கக் கல்வி இயக்கக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் - இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அனுமதிக்க கோரும் - விண்ணப்பம் -தொடர்பாக.


பார்வை:


சங்கத்தினர்களிடமிருந்து .02.06.2026. வரப்பெற்ற கோரிக்கை மனு,


பள்ளிக் கல்வித் துறையில் 2004, 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இளநிலை, இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு பின்னர் அரசாணை நிலை எண்.99, பள்ளிக் கல்வி (வ.செ.) துறை, நாள்.27.06.2006-ன்படி 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.


மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப்பெற்ற ஆசிரியர்களுக்கு முறையே 01.06.2016-ல் தேர்வுநிலை 01.06.2026 -ல் சிறப்பு நிலை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையில் கண்டவாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


மேற்காண் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 01.06.2026-ல் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இச்சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுகளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால் தொடர்புடைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டு துரிதமாக வழங்குவதற்கான அறிவுளைகளை / வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக


பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)



TET தேர்விற்கு தாமதமின்றி பணிச் சான்று (Service Certificate) வழங்க இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் தகுதி தேர்விற்கு TET  விண்ணப்பிக்க தாமதமின்றி பணிச் சான்றிதழ் (Service Certificate) வழங்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025-2026 Term 3 / Annual Exam Question Papers - DEE Proceedings

 

2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2025-2026 Term 3 / Annual Exam Question  Papers - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06.

ந.க. எண் : 003636/ஜெ2/2025, நாள் : 25.03.2026


பொருள் : தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழிகாட்டுதல்கள் - சார்ந்து


பார்வை : சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 048688 / எம்1 / இ1/2025. नं. 20.03.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது.


இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வகுப்பு 1 முதல் 5


மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக 25.03.2026 முதல் 30.03.2026 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு-1 இல் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.


நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.


வகுப்பு:


பாடத்தின் பெயர்


பயிலும் வழி:


தேர்வு நாள்:


ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)


அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2


நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.


+ அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.


வகுப்பு 6 முதல் 8


வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


+இணைப்பு -2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடக்கக்கல்வி இயக்குநருக்காக


இணைப்பு:


1. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 1-5 

2. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 6-8


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நகள்


1. அரசு கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை 09


பணிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை - 06


3. இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06.


தசுவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது


5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்


தகவலுக்காக


இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06


நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - இயக்குநரின் செயல்முறைகள்

 

நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் :  09.03.2026


சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை (Equal Work, Equal Pay Demand) தொடர்பான கூட்டம் - நாளை (10.03.2026) சென்னையில் நடைபெறுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.35372/இ1/2022, நாள். .03.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது -தகவல் தெரிவித்தல் - சார்ந்து.


பார்வை:


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 01.01.2023 நாளிட்ட செய்தி வெளியீடு.


2. அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1)) துறை நாள்.30.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.229 பள்ளிக் கல்வித் (.5.3(1)) . நாள் 06.12.2023.


4. அரசுக் கடித எண் 730/தொக.5.3(1)/2023-3, 5, 6, 8, 11 01.06.2023, 18.10.2023, 30.10.2023, 08.12.2023, 08.01.2025, 18.06.2025, 04.09.2025 06.03.2026.


5. சென்னை-600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.35372/1/2022, 23.01.2025, 03.03.2023, 06.06.2023, 26.10.2023, 01.11.2023, 19.09.2024, 20.05.2025, 20.06.2025, 23.06.2025, 21.08.2025 மற்றும் 08.09.2025.


தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி ஐந்தாவது கூட்டம் 10:03.2026 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 06.03.2026 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 10.03.2026 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு பத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஒரு சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எண் , சங்கத்தின் பெயர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


நாள் மற்றும் நேரம் : 10.03.2026 பிற்பகல் 02.30 மணி


இடம் 

பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கு. 6-வது தளம், நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், சென்னை-9.





சங்கப் மேற்குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத பிரதிநிதிகளை தவிர்த்து மற்ற சங்கப் பிரதிநிதிகளை பிறிதொரு நாளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


மின்னஞ்சல் வழியாக



TET எழுதவும், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் முன் அனுமதி மற்றும் NOC தேவையில்லை - DEE செயல்முறைகள்

 

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவும், பணிப்பதிவேட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை பதிவு செய்யவும் முன் அனுமதி மற்றும் தடையின்மை சான்று தேவையில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


No need NOC & Permission to write TET SR Entry - DEE Proceedings


DEE Proceedings 


No prior permission or NOC required to write TET and register in Service Register - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025ல் எழுதிய டெட் தேர்வு எழுத முன் அனுமதி விலக்கு - தகுதித் தேர்வு தேர்ச்சி  பணிப்பதிவேட்டில் பதிய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் TNTET தேர்வு எழுத முன் அனுமதி தேவையில்லை .

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1282505/டி1/2025  நாள் :   04.03.2026


தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி கட்டாயம் தகுதி தேர்வு தேர்ச்சி (TET) பெற வேண்டும் என்ற உத்தரவினால் தகுதித் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற அனைவரும் உண்மை தன்மை பெற்று  பணிப்பதிவேட்டில் பதிந்து கொள்ளலாம்.அதற்கு எந்த விதமான முன் அனுமதி தேவை இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


Aided School Deployment - DEE Proceedings

 


உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் செய்தல் - DEE Proceedings 


Aided School Deployment - DEE Proceedings 


Deployment and Deputation Teachers details



அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்



>>> செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




TET தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை - இயக்குநரின் செயல்முறைகள்

 

 

 

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-11-2025


சிறப்பு தகுதித் தேர்வு (Spl TET) தேர்வு சார்ந்து தொடக்க கல்வி ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன்  (21.11.2025) மாலை 5.00 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆலோசனை


Consultative meeting chaired by the Honorable Minister of School Education with representatives of the Teachers' Federation regarding the Teacher Eligibility Test - Proceedings of the Director of Elementary Education, Date: 20-11-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 114 பள்ளிகளின் பட்டியல்

 

 

2024-2025ஆம் ஆண்டு - சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 114 பள்ளிகளின் பட்டியல் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 10-11-2025


List of 114 schools selected to receive shields for best schools for the year 2024-2025 - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Date: 10-11-2025



அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Awarding of Best School Shields for the year 2024-2025 to Government/ Government Aided Primary/Middle Schools - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



FUR JADEN Vegan Leather Stylish 15.6 Inch Laptop Backpack Travel Weekender Bag For Men Women





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47LTjJT


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை (Holistic Report Card - HRC) வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநரின் செயல்முறைகள் & HRC பயன்படுத்தும் வழிமுறைகள்



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை (Holistic Report Card - HRC) வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநரின் செயல்முறைகள் & HRC பயன்படுத்தும் வழிமுறைகள்


எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை ( Holistic Report Card - HRC ) அச்சிட்டு வழங்க DEE Director Proceedings உத்தரவு


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை (Holistic Report Card - HRC) வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 26-09-2025 & HRC பயன்படுத்தும் வழிமுறைகள்


 Holistic Report Card - HRC மாணவர் தரநிலை அறிக்கை பயன்படுத்தும் வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



1 முதல் 8ஆம் வகுப்புகள் - முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை

 

1 முதல் 8ஆம் வகுப்புகள் - முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


 Classes 1 to 8 - First Term Summative Assessment / Quarterly Examination Timetable - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



1 முதல் 3  வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு கால அட்டவணை:

(முற்பகல் 10.00 AM to 12 AM)



22.09.2025 தமிழ் 

24.09.2025 ஆங்கிலம் 

25.09.2025 கணக்கு 


4 முதல் 5 வகுப்புகளுக்கு

(பிற்பகல் 2.00 PM to 4.00 PM)

 

17.09.2025 தமிழ் 

18.09.2025 ஆங்கிலம் 

22.09.2025 கணக்கு 

24.09.2025 அறிவியல் 

25.09.2025 சமூகவியல்

(23.09.2025 விருப்ப மொழித்தேர்வு.)



🛑6முதல் 8ஆம் வகுப்புகளுக்கு

(6,8 ஆம் வகுப்புகள் : 10.00am to12.30pm)

(7 ஆம் வகுப்பு : 2.00pm to 4.00pm)


15.9.2025 தமிழ்

16.9.2025 உடற்கல்வி

17.9.2025 ஆங்கிலம்

18.9.2025 விருப்பமொழி

22.9.2025 கணிதம்

24.9.2025 அறிவியல்

25.9.2025 சமூகஅறிவியல்


முதல் பருவ விடுமுறை 27-09-2025முதல் 05-10-2025 வரை (9நாட்கள்).


இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை - 7 சங்கங்களுக்கு அழைப்பு

 

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை - 7 சங்கங்களுக்கு அழைப்பு


இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது - குழுவின் நான்காவது கூட்டம் 11-09-2025 பிற்பகல் 3 மணி அளவில் கூட்டம் நடைபெறவுள்ளது தகவல் தெரிவித்தல் சார்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TETOJAC அமைப்புடன் பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று 18.08.2025 பேச்சுவார்த்தை - DEE Proceedings

 

டிட்டோஜாக் அமைப்புடன் பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று 18.08.2025 பேச்சுவார்த்தை - DEE செயல்முறைகள்


Minister of School Education to hold talks with TETOJAC today 18.08.2025 - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


79th Independence Day Celebration - Intimation - DSE & DEE Proceedings



சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வழக்கமான நெறிமுறைகளைப் (Usual Norms) பின்பற்றி சுதந்திர தின விழாவினை கொண்டாட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


79th Independence Day Celebration - Intimation - DSE & DEE Proceedings 


இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2025 ( வெள்ளிக்கிழமை ) அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி ( As per Flag code ) சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தமிழ்நாட்டில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதா? - காரணம் என்ன - DEE விளக்கம்



207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்ற நாளிதழின் செய்திக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கம்


Are 207 government schools closed in Tamil Nadu? - Elementary Education Department explanation


தமிழ்நாட்டில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதா? - காரணம் என்ன - தொடக்கக் கல்வித் துறை விளக்கம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் சுமார் 31,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 19 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக நீலகிரி 17, சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்றவாறு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியது: 'மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே 868 அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டுள்ளன.


அதேபோல், மூடப்பட்ட அரசுப் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். 207 பள்ளிகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. இதற்கு முன் மூடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தி திறக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கை இந்த ஆண்டும் தொடரும். எனவே, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு மக்கள் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ந்ததும், 5 வயது நிரம்பிய குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததும் காரணமாகும்' என்றனர்.


இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், 'அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை பூர்த்தி அடையவில்லை. ஒரு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லை எனில், அதற்குரிய காரணம் குறித்து ஆராய்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று  தெரிவித்தார்


Vaasippu Iyakkam : DEE Proceedings

 

வாசிப்பு இயக்கம் : கண்காணிப்பு அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு


Vaasippu Iyakkam : DEE Proceedings 



நுழை, நட, ஓடு, பற போன்றவற்றை உள்ளடக்கிய 80 வாசிப்பு இயக்க புத்தகங்கள் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இந்த புத்தகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் அவர்களால் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது இதனை அனைத்து பள்ளிகளிலும் பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருவார்கள் என தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடக்கக்கல்வி இயக்ககம் வாசிப்பு இயக்கம் நூலகப் புத்தகங்கள் வழங்கப்பட்டவை பருவம் , மாதம் மற்றும் வகுப்புவாரி பொருண்மைகள் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன் பள்ளிகளில் நடைபெறுதலை சார்நிலை அலுவலர்கள் கண்காணித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Drug Abuse Pledge : DEE & DSE Proceedings


போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தல் சார்பு DEE & DSE Proceedings, Dated : 8.8.25 


Drug Abuse Pledge : DEE & DSE Proceedings


11.08.2025 அன்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு : DSE Proceedings, உறுதிமொழி & படிவங்கள்


>>> DSE Proceedings, உறுதிமொழி & படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



11.08.2025 அன்று மாபெரும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி எடுத்தல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


>>> DEE Proceedings, உறுதிமொழி -  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...