கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...

 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...


"தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 08.09.2024 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) திரு.ஈ.ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்ஷக்ஷித் , ஆவின்சென்ட் பால்ராஜ் , ச.மயில் , இரா.தாஸ் , சி.சேகர் , இல.தியோடர் ராபின்சன் , மன்றம் நா.சண்முகநாதன் , வி.எஸ்.முத்துராமசாமி , கோ.காமராஜ் . சி.ஜெகநாதன் , டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் : 1 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும் மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் : 1387 , நாள் : 07.09.2024 வெளியிடப்பட்டுள்ளது . அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு , டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் , 28.09.2024 , 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது ."


திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...