கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TETOJAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TETOJAC bearers met Former CM Hon'ble Mr. Edappadi K.Palaniswami and presenting the demand letter

 

25-01-2025 அன்று டிடோஜாக் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கடிதம் வழங்கிய புகைப்படம்


On 25-01-2025 the TETOJAC in-charges were met the Leader of the Opposition in the Tamil Nadu Assembly and Former Chief Minister Hon'ble Mr. Edappadi K.Palaniswami and presenting the demand letter





TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024

 

28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக்  பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்


TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில்  (28.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2025) வெள்ளிக்கிழமை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும்  சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிப்ரவரி 1, 8, 15 போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC State High Level Committee Members Meeting with Director of Elementary Education on 18-12-2024 - Full Details Released

18-12-2024 அன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சந்திப்பு - முழு விவரம் வெளியீடு...


TETOJAC State High Level Committee Members Meeting with Director of Elementary Education on 18-12-2024 - Full Details Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



(18.12.2024) இன்று தொடக்க கல்வி இயக்குனர் முனைவர் P.A.நரேஷ் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்

👇👇👇👇👇👇👇






தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)


மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு


மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் 23.10.2024 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக _*மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர்*_ அவர்களின் வழிகாட்டுதலின்படி _*மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்*_ அவர்கள் டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து இன்று (18.12.2024) பேசினார்கள்.


டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) _*மதிப்புமிகு. ச.கோபிதாஸ்*_ அவர்களும், தொடக்கக்கல்வி இயக்கக நேர்முக உதவியாளர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர்.


 அரசாணை எண் 243 இரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் மத்திய அரசுக்கு இணையாக வழங்குவது தொடர்பாக விடுபட்ட சங்கங்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி உரிய பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புதல், பதவி உயர்வு வழக்கு, EMIS பதிவேற்றப் பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்தல், கருத்தாளர்களாக விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்துதல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பழைய முறைப்படி வழங்க வேண்டுதல் தொடர்பான வழக்கு, உயர்கல்விக்கான பின்னேற்பு ஆணை வழங்கி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தல், ரூ.5400 தர ஊதியப் பிரச்சனை, பி.லிட்., பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத்தடை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


அதன் பின்னர் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூடி 27.12.2024 அன்று மாண்புமிகு. நிதியமைச்சர், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் மீது ஆணை வழங்க வலியுறுத்துவது எனவும், 28.12.2024 அன்று சென்னையில் டிட்டோஜேக் மாநில பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Announcement of TETOJAC protest against Mallipatnam teacher murder

 

 மல்லிப்பட்டினம் ஆசிரியை படுகொலையைக் கண்டித்து டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


Announcement of TETOJAC protest against Mallipatnam teacher murder



No order issued to deduct one day salary in connection with one-day symbolic strike by primary teachers - WhatsApp information of Joint Director, Elementary Education (Administration)...

 

 டிட்டோஜாக் - தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக ஊதியம் நிறுத்தம் சார்ந்து எந்த ஆணையும் வழங்கப்படவில்லை - தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் வாட்ஸ் அப் தகவல்...


One day salary deduction for teachers who went on strike on September 10 - Daily News...


 செப்டம்பர் 10ல் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் - நாளிதழ் செய்தி...



TETOJAC announces temporary postponement of siege strike - TETOJAC high level committee members interview...

 டிட்டோஜாக் அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...



>>>> TETOJAC அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளதாக டிட்டோஜாக் உயர் மட்ட குழு உறுப்பினர் காமராஜ் பேட்டி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



டிட்டோஜாக் அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - டிட்டோஜாக் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பேட்டி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


TETOJAC talks in the morning - One day salary deduction announcement in the evening video meeting - Can the primary education sector turn into a riot sector? - What is the Honorable Minister of Education going to do? - Teacher's Federation Report...


காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாலையில் காணொளி கூட்டத்தில் ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு - தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? - ஆசிரியர் கூட்டணி அறிக்கை...


 *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்?..*


*காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை!.. மாலையில் காணொளி கூட்டத்தில் வேலைநிறுத்தம்.. ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு!.. தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா?..*


*AIFETO...23.09.2024.*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண் 36/2001.*


 *மாண்புமிகு பள்ளிகளுக்குறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23.9.2024 இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.*



 *இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துப் பதிவினை நாளை மாலை விரிவாக  வெளியிட இருக்கிறோம்!..*



 *இன்று மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பத்தாம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியப் பிடித்தத்தை இந்த மாதமே பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.*



 *பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளிக் கூட்டத்திலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரெல்லாம் ₹5400/-  தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.*



 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம்!..  சென்ற வாரம் வரை அரசாணை 243 இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட  உள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.*


 *இன்றைய பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம்.  போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா?..*


 *பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம்  எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.*



 *அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம்!.. 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.*



 *சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது!.*


 *தனிப்பதிவில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம்!..*



*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் தனிக்கவனம் மேற்கொண்டு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்!..*



*இயக்கத்தின் மூத்தத் தலைவர்...*


*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5.*


TETOJAC Talks - Hon'ble School Education Minister's facebook post...


டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகநூல் பதிவு...



TETOJAC protest Postponed...

 

 

டிட்டோஜாக் போராட்டம் ஒத்திவைப்பு...


 TETOJAC protest Postponed...



அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிக்டோ-ஜாக்) நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை நடத்தினார்...


31 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30 மற்றும் 1ஆம் தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் டிட்டோஜாக் அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என தகவல்...



>>>> TETOJAC அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC - Announcement of Fort Siege Protest - Director of Elementary Education invited to consult in Chennai on 23.09.2024 under the leadership of the Minister of School Education...

 

TETOJAC நிர்வாகிகள் 23.09.2024 திங்கட்கிழமை  கல்வி அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...


டிக்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் 23.09.2024 அன்று சென்னையில் கலந்தாலோசிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அழைப்பு...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்) - 31 அம்சக் கோரிக்கை -30.09.2024 மற்றும் 01.10.2024 சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 23.09.2024 காலை 09.15 மணி கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க அழைப்பு...


30.09.2024, 01.10.2024 இரண்டு நாள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விவரம் - டிட்டோஜாக் வெளியீடு...

 

30.09.2024, 01.10.2024 இரண்டு நாள் TETOJAC முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விவரம் - டிட்டோஜாக் வெளியீடு...



TETOJAC Demands என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...

 

டிட்டோஜாக் கோரிக்கைகள் என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...


What are the TETOJAC Demands? What is the Government's position on it? An explanatory news video...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்‌ குழு (TETOJAC) 10.09.2024 அன்று வேலைநிறுத்தப் போராட்டம்‌ சார்ந்த விவரம்‌...

 

இன்றைய போராட்டம் நிலவரம்...


தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை - 600006.


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்‌ குழு (டிட்டோஜாக்‌) 10.09.2024 அன்று வேலைநிறுத்த போராட்டம்‌ சார்ந்த விவரம்‌...


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்‌ குழு (TETOJAC) 10.09.2024 அன்று வேலைநிறுத்தப் போராட்டம்‌ சார்ந்த விவரம்‌...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> இன்றைய டிட்டோஜாக் போராட்டம் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் - காணொளி...


இன்று (10-09-2024) டிட்டோஜாக் TETOJAC சார்பாக நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ள சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு...

 

 இன்று (10-09-2024) டிட்டோஜாக் சார்பாக நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ள  சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு...


Today (10-09-2024) the name list of the state officials of the associations who will participate district wise in the one-day symbolic strike demonstration to be held on behalf of TETOJAC...





TETOJAC மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...

 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...


"தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 08.09.2024 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) திரு.ஈ.ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்ஷக்ஷித் , ஆவின்சென்ட் பால்ராஜ் , ச.மயில் , இரா.தாஸ் , சி.சேகர் , இல.தியோடர் ராபின்சன் , மன்றம் நா.சண்முகநாதன் , வி.எஸ்.முத்துராமசாமி , கோ.காமராஜ் . சி.ஜெகநாதன் , டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் : 1 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும் மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் : 1387 , நாள் : 07.09.2024 வெளியிடப்பட்டுள்ளது . அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு , டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் , 28.09.2024 , 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது ."


திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு...

 


TETOJAC - தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியீடு எண்: 1387, நாள் : 07-09-2024...

 

ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை செய்தி வெளியீடு - ஏற்கப்பட்ட கோரிக்கைகள்...


டிட்டோஜாக் - தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியீடு எண்: 1387, நாள் : 07-09-2024...



TETOJAC - Press Release No: 1387, Dated : 07-09-2024 regarding the current status of the 12-point demands accepted in the talks led by the Hon'ble Minister of School Education on behalf of the Tamilnadu Elementary Teachers' Organizations Joint Action Committee...










தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு...

 

அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு -   தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு...




Notification of token strike and fort blockade - TETOJAC State Bearers are invited to attend a consultative meeting to be held on 06.09.2024 today at 11 am with the Director of Elementary Education...





தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்...

 

தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற, தேர்தல் நேர வாக்குறுதியை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


- ஜி.கே.வாசன் MP, தலைவர்,  தமிழ் மாநில காங்கிரஸ்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...